குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை பதிய வைப்பது

செப்டம்பர் 07, 2013

பெங்களுரு, இந்தியா


கேள்வி - பதில்கள்

குருதேவ்! வெளி உலகில் இருக்கும் பல எதிர்மறையான பாதிப்புகளுக்கு இடையில், எப்படி என்னுடைய குழந்தைகளுக்கு சரியான கலாசாரங்களை கொடுப்பது? எப்படி  திறமையுடன்  அவர்களை ஆன்மீகத்திற்கு அறிமுகம் செய்வது ?

இந்த கேள்வியை நீங்கள் உங்கள் மனதிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்றும் அதை மீண்டும் மீண்டும் வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். நீங்கள் உங்கள் குழந்தைகளை சேவை செய்வதில் ஈடுபடுத்தினால் அவர்கள் எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களை சேவை முகாம்களுக்கு அனுப்பி சேவை செய்ய வைக்கலாம். குழந்தைகள் சிறு வயதில் இருந்தே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் அக்கறை  கொள்ளவும் ஆரம்பித்தால்,பெரியவர்கள் ஆகும்போது மிகவும் விழிப்புணர்வு உடையவர்களாக   வருவார்கள். அவர்கள் எனக்கு என்ன கிடைக்கும்? எனக்கு என்ன ஆகும் என்று சிந்திக்கும் தன்னலம் உடையவர்களாக உருவாவது இல்லை.மாறாக என்னால் என்ன செய்ய முடியும்? நான் எவ்வாறு பங்களிக்க இயலும்? இந்த உலகத்தை எப்படி சிறந்த இடமாக்க முடியும்? என்றெல்லாம் சிந்திப்பார்கள். குழந்தைகளின் இந்த மனநிலை அவர்களை எப்போதுமே சரியான பாதையில் வைத்திருக்கும். நீங்கள் அவர்களை எப்போதுமே தங்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலம் மிக்கவர்களாகவே ஆக்கினால், அவர்கள் தங்கள் பெற்றோர்களை பற்றி கூட அக்கறை கொள்ள மாட்டார்கள்.

ஒரு கொள்ளைக்காரன் துறவியாக மாறிய கதை ஒன்று உள்ளது. ஒரு சமடம் கொள்ளைக்காரன் ஒரு துறவியை சந்தித்தான். துறவி அந்த கொள்ளைக்காரனை பார்த்து "நீ ஏன் இதை செய்கிறாய் ? என்று கேட்டார். கொள்ளைக்காரன் பலரை கொன்றிருக்கிறான். துறவி கொள்ளைக்காரனை பார்த்து "நீ எவ்வளவு பாவங்களை சேர்த்துக் கொள்ளுகிறாய் என்று நீ அறிவாயா?" என்று கேட்டார். கொள்ளைக்காரன் சிறிது நேரம் யோசித்து "ஆமாம், நான் நினைய பாவங்களை செய்திருக்கிறேன்" என்று சொன்னான். துறவி "நீ ஏன் இதை செய்கிறாய்?" என்று கேட்டார். கொள்ளைக்காரன் "இதை நான் என் குடும்பத்திற்காக செய்கிறேன். நான் என் குடும்பத்தை ஆதரிக்க திருடுகிறேன், கொலை செய்கிறேன்" என்று கூறினான்."நான் உன்னுடைய குடும்பத்தினருக்கு ஒரு கேள்வி வைத்துள்ளேன். நீ சென்று அவர்களிடம் கேட்பாயா?" என்றார். அவனும் சரி என்று சொன்னான். துறவி கூறினார், " நீ உன் குடும்பத்தினரிடம் அவர்கள் உன்னுடைய பாவங்களை பகிர்ந்து கொள்ளுவார்களா? என்று கேட்கவும். உன்னுடைய செல்வத்தை பகிர்ந்து கொள்ளும் அவர்கள் உன்னுடைய பாவத்தையும் பகிர்ந்து கொள்ளுவார்களா?.

எனவே கொள்ளைக்காரன் அவனுடைய தந்தையிடம் சென்று "அப்பா! நான் இந்த குடும்பத்தை நடத்தி செல்ல நிறைய பாவங்கள் புரிந்திருக்கிறேன், நீங்கள் அதை பகிர்ந்து கொள்ளுவீர்களா? " என்று கேட்டான். அப்பா கிழே பார்த்தபடி முடியாது என்று கூறினார். பிறகு அவன் அவனுடைய மனைவியிடம் சென்று "என்னுடைய பாவங்களை பகிர்ந்து கொளுவாயா? என கேட்டான். அவளோ "நான் உங்களுடைய செல்வங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுவேன். உங்களுடைய பாவங்களை என்னால் பகிர முடியாது. உங்கள் பாவங்களை நீங்கள் தான் சுமக்க வேண்டும்" என கூறினாள். எனவே திடீரென அவனுக்கு தோன்றியது, அனைவரும் என்னிடம் இருந்து வசதியை மட்டுமே விரும்புகிறார்கள், யாருமே என்னுடைய சுமையை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவன் துறவியிடம் திரும்ப சென்றான். துறவி புன்னகையுடன் அவனை பார்த்து "உலகில் உள்ளவர்கள் அவர்களுக்கு நீ என்ன செய்வாய் என்பதில் மட்டுமே அக்கறை கொள்ளுகிறார்கள். அவர்கள் உன்னுடைய பாவங்களையோ,பிரச்சினைகளையோ பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை." என்றார்.

அதன் பிறகு தான் அவன் உணர்ந்தான். அந்த கணத்தில் இருந்து ஒரு நல்ல மனிதனாக, ஒரு துறவியாக, ஒரு கவிஞனாக மாறினான் ஒரு முழுமையான மாற்றம் அந்த கணத்தில் இருந்து ஏற்பட்டது. அவன் அவனுடைய மனைவியை மிகவும் நேசித்தான். ஆனாலும் அவள் "நான் உங்களுடைய பணம், முன்னேற்றம் மற்றும் உயர் நிலைபற்றி மட்டுமே அக்கறை கொள்ளுகிறேன். உங்களுடைய சுமைகளை எடுத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை." என்று கூறினாள். அதிக வார்த்தைகள் இன்றி அவள் அவனுடைய பாவங்களை பகிர்ந்து கொள்ளமுடியாது என்பதை தெரிவித்து விட்டாள். அதுவே அவனை தாக்கியது. இத்தனை ஆண்டுகளாக நான் குருடனாக இருந்திருக்கிறேன். நான் என்னை பற்றி சிந்தித்ததே இல்ல. நான் என்னை உணர்ந்து கொள்ள இதுவே நேரம்.  இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன? நான் எங்கே செல்லுகிறேன்? என்ன நடக்கும்?

ஒருவன் இறந்து விடும் போது, சிலர் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பார். அவர்கள் ஒ! அவர் நல்லவர்! என்று சொல்லுவார்கள். சிலர் சில நாட்கள் துக்கம் அனுசரிப்பார்கள். மனைவியும் குழந்தைகளும் ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ துக்கம் அனுசரிப்பார்கள்.அவ்வளவு தான். அனைவரும் அவரவருடைய வேலைகளில் மூழ்கி விடுவார்கள். அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையையும் உடைமைகளையும் பார்த்துக்கொள்ளுவார்கள். நீங்கள் அவர்களிடம் இருக்க மாட்டீர்கள். இது பெண்களுக்கும் பொருந்தும். ஒரு பெண் வாழ்க்கை முழுவதையும் தன்னுடைய குடும்பத்திற்காக செலவு செய்வாள். இரவு பகல் முழுவதும் அவள் குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் வாழ்வாள். பிறகு என்ன? ஒன்றுமே இல்லை. தனிமையில் விடப்படுவாள். பூமிக்கு உள்ளாகவோ அல்லது சிதையிலோ. அனைவரும் மறைந்து விடுவர்.
    
வாழ்வில் கடுமையான உண்மை என்னவென்றால், அனைத்துமே மாறிக்கொண்டே இருக்கின்றன. மேலும் நம்முடைய வாழ்வும் இன்னும் 20 ஆண்டுகளில் முடிந்து விடும். யாருமே இங்கே இருக்க மாட்டோம், அனைவரும் போய் விட்டிருப்போம்.நம்முடன் செல்லப்போவது நம்முடைய மனதில் உருவான பதிவுகள் மட்டுமே. நம் இதயத்தில் கொண்டிருந்த கோபம் அல்லது விரக்தி அல்லது மகிழ்ச்சி அல்லது அமைதி,அன்பு அக்கறை போன்றவையும் நம்முடன் செல்லும். உங்களுடன் செல்லுபவையே வாழ்வில் திரும்ப வரும். எனவே நீங்கள் உங்களையும் உங்கள் மனதையும் கவனிக்க வேண்டும். உங்கள் மனதை தேவையற்ற பதிவுகளில் இருந்து பாதுகாத்து அதை மிகவும் தூய்மையாகவும் உயிருடனும் வைத்திருக்கவும்.

கவிஞர் கபீர்தாஸ் "நான் இந்த உலகிற்கு கரை ஏதும் இல்லாத துணியுடன் வந்தேன். அவ்வாறே கரையற்ற உடையுடனே திரும்புகிறேன். நான் கரையற்று வாழ்ந்தேன்" என்று கூறினார். பாடுவது தியானம் செய்வது ஆகியவற்றின் நோக்கம் மனதில் எப்போதுமே நம்முடன் இருக்க வேண்டிய சாதகமானவற்றை பூர்த்தி செய்வதே  ஆகும். அதனால் தான் இந்த பயிற்சிகள் சாதனா என அழைக்கப்படுகின்றன. தனா என்றால் செல்வம். சாதனா என்றால் உண்மையான செல்வம். நீங்கள் செல்லும் இடமெல்லாம் அது வரும். நீங்கள் உங்கள் வாழ்வில் பெற வேண்டிய உண்மையான செல்வம் சாதகமான அல்லது ஆக்கபூர்வமான அதிர்வலைகளே. நல்ல சேவை செய்வதும் தியானம் செய்வதும் இதை நிறைவு செய்பவை. 

குருதேவ்! நான்  நாடி ஜோதிடத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். இதற்கு ஏதாவது  துல்லியம் உள்ளதா? அப்படிஎன்றால், ஏன் நம்மால் சுனாமியையும் இதர இயற்கை பேரழிவுகளையும் கணித்து சொல்ல இயலவில்லை.நாடி ஜோதிடம் செய்து பார்த்துக் கொள்ளுவதில் ஏதாவது நன்மை உள்ளதா?

மக்கள் இவை அனைத்தயும் கணித்து சொன்னார்கள். நான் கூட கங்கையில் பெருவெள்ளம் ஏற்படும் என்று கணித்து சொன்னேன். அதனால் இந்த வருடம் யாரும் எந்த சாகசங்களையும் செய்ய வேண்டாம். பலர் அதை செய்யவில்லை. புலன்கள் காணாதவற்றைக் காணும் திறன் உடைய பல பார்வைகள் உள்ளன. ரிஷிகள் எழுதிய நாடியும், ஜோதிடமும் அவைகளில் ஒன்று. ஏறக்குறைய 95% சரியாக இருக்கும். மாறுபடவும் சாத்தியங்கள் உள்ளன. மனித வாழ்க்கை சக்தி வாய்ந்தது. நீங்கள் நல்லவைகளை செய்திருந்தாலும், உங்கள் வாழ்வில் சாதகமான கர்ம வினை கலை சேர்த்து வைத்திருந்தாலும், நிகழ்ச்சிகள் சிறந்தவைகளாக இருக்கும். அடித்தளத்தை கணிக்க இயலும்.

நீங்கள் அனைத்து கணிப்புகளுக்கும், ஜோதிடங்களுக்கும் எல்லைக்கோடு வைத்துக் கொள்ளவும். எதற்கு எல்லைக்கோடு. ஏனென்றால் வாழ்க்கை சக்தி வாய்ந்தது. தெய்வீகம் உங்களுக்கு ஓரளவு ஆசீர்வாதங்களை அளிக்கும். அதனால் காரியங்கள் மாறும். உங்களுடைய உள்ளுணர்வு உங்கள்   காரியங்களை மாற்றி அமைக்கும் திறன் கொண்டது. உங்கள் ஜோதிடர் உங்களுக்கு ஒரு விபத்து ஏற்படும் என்று சொல்லுகிறார் என வைத்துக் கொள்வோம், உங்களுக்கு விபத்து ஏற்பட தேவை இல்லை. அது ஒரு வாய்ப்பே. நீங்கள் அதை கடக்க முடியும். கெட்ட கணிப்புகள் பற்றி கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் அதை கடந்து செல்ல முடியும். அது ஒரு எச்சரிக்கையே.

போக்குவரத்து நெரிசல் இருக்கும் பொது அந்த வழியாக செல்ல வேண்டாம் என்று வானொலியில் அறிவிப்பார்கள். நீங்கள் அந்த இடத்திற்கு செல்லும்போது அது சரியாகி இருக்கலாம் அல்லவா?   நீங்கள் அதை அந்த விதத்தில் பார்க்க வேண்டும். வானிலை கணிப்புகள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் வானிலை கணிப்புகள் சரியாக இருப்பதில்லை (பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்). அவர்கள் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்பார்கள் ஆனால் நீங்கள் வெயில் காய்வதை பார்க்கலாம். இது நடக்கின்றது இல்லையா?  ஆனால் அவர்கள் கணிப்பு துல்லியமாக இல்லை எனினும் வானிலை ஆய்வு மையங்கள் மூடப்படுவதில்லை, அவர்கள் கணிப்பை தொடருகிறார்கள்.    
எனவே பல ஜோதிடர்கள் அவ்வாறு இருக்கக்கூடும்.ஆனால் சிலர் துல்லியமாக கணிப்பர். எப்படி நுன்னிரும் பல்லுயிரும் இணைக்கப்படுகிறன என்று பார்ப்பது விஞ்ஞானம், நம்முடைய உயிர் சக்தி சாசுவதமானது. இது மட்டுமே நம்முடைய வாழ்நாள் அல்ல, நீங்கள் ஆப்ரிக்கா, ரஷ்யா அல்லது சீனாவில் பிறந்திருக்கலாம். நம்முடைய வாழ்க்கை தொடர்ந்து செல்லுகின்றது. வேறுபட்ட மொழிகள் அல்லது வேறுபட்ட தோற்றங்களில் நாம் திரும்ப வந்து கொண்டே இருக்கின்றோம், ஆனால் மனநிலை ஒன்றே ஆகும். ஜ்யோதிஷி என்றால் ஒளியின் தரம் என்பதாகும். அனைவருமே ஒளியே. ஒவ்வொருவரும் எந்த மாதிரியான ஒளி என்று  தெரிந்து கொள்வது ஜ்யோதிஷி என்று அழைக்கப்படும்.
  
குருதேவ்! சிவா என்பது ஒரு நபர் அல்ல அது ஒரு கொள்கை என்றால், எவ்வாறு சதியின் உடலில்  பாகங்களில் இருந்து பல சக்தி பீடங்கள் உருவாக்கப்பட்டன?

சக்தி பீடம் என்பது சக்தியின் இருப்பிடம். உங்களில் எவ்வளவு பேர் ஆசிரமத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவோ அல்லது நுழைந்த உடனேயோ உங்கள் முழு சக்தியின் அளவு மாறி விட்டது என்பதை உணருகின்றீர்கள்? (பார்வையாளர்களில் பலர் கையை தூக்குகின்றனர்.) சக்தி பீடம் என்பது பலர் தியானம் செய்த இடம். அங்கே சக்தி உள்ளதை கண்டுபிடித்த இடம். நீங்கள் பாடும் போதும் தியானம் செய்யும் போதும் அந்த இடத்தில் சக்தி சேகரிக்கப்படுகிறது. நீங்கள் சாதகமான அல்லது ஆக்கபூர்வமான மன நிலையில் இருக்கும் போது நீங்கள் மட்டும் அல்ல, இந்த தூண்கள், மரங்கள் மற்றும் கற்களும் அந்த சாதகமான அதிர்வலைகளை உறிஞ்சுகின்றன. இப்படித்தான் சக்தி பீடங்கள் உருவாக்கப்படுகின்றன. சக்தி பீடம் என்பது ஆற்றல் உள்ள ஒரு இடம். 

குருதேவ்! ஒரு காயத்தின் காரணமாக நான் கடவுளை திட்டிக்கொண்டும் சபித்துக் கொண்டும் இருக்கிறேன். நான் எப்போதுமே தெய்வீகத்தை நேசிப்பவனாகவே இருந்துள்ளேன். என்னுடைய இப்போதைய நடத்தை எனக்கு பிடிக்கவில்லை. நான் எப்படி இதை சமாளிப்பது?

கவலை வேண்டாம். நீங்கள் கடவுளை நிந்தித்தாலும்,அவர் அதற்கு எதிர் செயல் ஆற்றமாட்டார். வருத்தப்படாதீர்கள். இது மிகவும் பத்திரமானது. இல்லையெனில் நீங்கள் வேறு யாராவது ஒருவர் மீது கோபம் கொண்டால், அவர் உங்களை பழி தீர்த்துக் கொள்ளுவார். இதுவே ஜோதிடத்தின் அழகு. ஜோதிடம் இந்த கிரகம் இவ்விடத்தில் இருப்பதால் தான் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று சொல்லும். நீங்கள் எப்படி கிரகத்தின் மேல் கோபம் கொள்ள முடியும்? உங்கள் மனமும் அப்படியே! உங்களுடைய விரக்தி மற்றும் மகிழ்ச்சியின்மையின் காரணம் இந்த பெரிய பிரபஞ்சத்தின்   பரிமானத்தால் கொடுக்கப்படுவது.

இந்த பிரபஞ்சத்தின் பரிமாணம், தேவையான அமைதியையும் சிரமமான சூழ்நிலைகளை   எதிர்கொள்ளும் வலுவையும் கொடுக்கும். சிரமமான சூழ்நிலைகளில் உங்களுக்கு தேவைப்படுவது என்னவென்றால் உள்ளுக்குள்ளே வலுவும் மற்றும் அமைதியும் ஆகும். இந்த புரிந்து கொள்ளுதல் தான் உங்களுக்குள் வலுவை தரும்.

குருதேவ்! நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்ளுவது? மனம் நிலையற்றது. நம்புவதற்கு முன்பாக அது ஆதாரத்தை கேட்கிறது.

உங்கள் மனம் நிலையற்றது என்று தெரிந்து கொண்ட அந்த கணமே நீங்கள் அதிலே இருந்து வெளிவந்து விடுகிறீர்கள். நீங்கள் நீண்ட நேரத்திற்கு நிலையற்ற மனதுடன் இருக்க இயலாது, இடைவெளி ஏற்பட வேண்டும். அது உங்களுக்கு ஞானத்தை தரும். "நான் நிலையற்ற மனதுடன் உள்ளேன்" எனும் விழிப்புணர்வே உங்களை ஸ்திரமாக்கும்.