ஆன்மீகப் பயிற்சிகளின் மூன்று நிலைகள்

ஜூலை – 13 – 2013 - மாண்ட்ரீல் - கனடா


ஆண்மீகப் பயிற்சிகளில் மூன்று நிலைகள் உள்ளன. இதுவரை என்னால் பேசப்படாத ஒன்று. முதல் நிலை அன்வ உபாயா என்று அழைக்கப்படுகின்றது. இரண்டாவது சக்த உபாயா, மூன்றாவது சம்பவ உபாயா. உபாயா என்பதற்குத் தீர்வு என்று பொருள். உலகிலுள்ள எல்லா பயிற்சிகளுமே சிவா,ஷக்தி, மற்றும் அன்வ என்னும் இந்த மூன்று பிரிவுகளில் அடங்கும். கீழ் நிலையிலுள்ள அன்வ உபாயா என்பது ஆரம்பம். ஜெபங்கள், பூஜைகள், மந்திரங்கள், யோகாசனங்கள்,மூச்சுப் பயிற்சிகள் எல்லாமே அன்வா உபாயத்தின் கீழ் வரும். அன்வ உபாயத்திற்கு மேல் அடுத்ததாக இருப்பது உள்ளே மனம் சார்ந்த ஷக்த உபாயா. இதில் வெளியில் செய்யப்படுவது எதுவும் இல்லை. மந்திரங்களும் இல்லை. தியான நிலையின் பலனாக உண்டாவதே ஷக்த உபாயா. 

பாடுதல், தியானம், பிராணாயாமம், சுதர்ஷன கிரியா போன்றவை நாம் வெறும் சக்தியே என்பதை உணரும் ஷக்த உபாய நிலைக்கு நம்மை கொண்டு செல்கின்றன. இதில் செய்வதற்கு எதுவுமில்லை. எந்த முயற்சியும் தேவையில்லை. (சுதர்ஷன க்ரியா ஆரம்பத்தில் சில பயிற்சிகளோடு அன்வ உபாயத்தில் துவங்குகின்றது).மிகக் குறைந்த அளவில் சிரமமில்லாத முயற்சி மட்டுமே தேவைப்படுகின்றது. அடுத்தது, தூய விழிப்பு நிலையாகிய சம்பவ உபாயா அல்லது ஷிவ் உபாயா. வெறும் விழிப்பு நிலை. சம்பவ உபாய என்றால் தனியாக வழியோ,முறையோ இல்லாதது என்று பொருள். அது தானாக இயல்பாக நிகழ்வது, இருந்தாலும் உபாயம் என்றழைக்கப் படுகின்றது. 

ஆக, சம்பவ உபாய நிலையை சென்றடைவதே அன்வ மற்றும் ஷக்த உபாயங்களின் நோக்கமாகும். நீங்கள் உள்ளுணர்வின் நான்காவது நிலையாகிய சிவ தத்துவத்தோடு  ஒன்றிணைவதே சம்பவ உபாயம் ஆகும். அந்நிலையில் இரண்டு என்பதே இல்லை.  செயல்புரிபவன் என்று எவருமில்லை. நீங்களே சிவம். 

பொதுவாக, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரைப் போன்றவர்கள் ஓரளவிற்கு சம்பவ உபாய நிலையை அனுபவித்துள்ளனர். அவர்கள் மற்ற இரண்டு நிலைகளையும் நிராகரித்து விடுகின்றனர். அதனால் சிலர் பிராணாயாமம் செய்தல்,பூஜைகள், மந்திரங்கள் உச்சாடனம் செய்தல் அவசியமில்லை என்று சொல்லியிருப்பதை நீங்கள் படிக்கலாம். சம்பவ உபாய நிலையை அடைந்த பின்னர் அந்த நிலையிலிருந்து அவர்கள் பேசுகின்றனர். ஆனால் இந்த பயிற்சிகளுக்கென்று அவற்றிற்கான இடம் உள்ளது. 

உதாரணத்திற்கு, நீங்கள் கனடாவின் பிரதம மந்திரியிடம் செல்ல வேண்டியிருந்தால்  இடையில் மத்தியுவின் மேயரை நீங்கள் காண வேண்டியது அவசியமில்லை.  ஆனால் மேயருக்கு உரிய செல்வாக்கு முக்கியமானதாக இருந்தால், நீங்கள் பிரதம மந்திரியிடம் சென்ற பிறகும் கூட சில முட்டுக்கட்டைகள் அல்லது தடைகள் ஏற்படலாம். இல்லையா? அதிகாரத்துவம் உள்ளவர்கள் தடைகள் போடலாம். ஆகவே தான் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிப்பது அனைவருக்கும் அவரவருக்கேற்ற  இடமளிப்பது  என்பது நம் பண்டைக்கால  பழக்கமாக உள்ளது. இப்படி தான் அன்வ உபாய, ஷக்த உபாய மற்றும் அனைத்தும் அவற்றிற்கென இருக்கும் சில நோக்கங்கள் காரணமாக தொடர்ந்து போற்றப்படுகின்றன. 


இது ஒரு ஆழ்ந்த ஞானம்.