குடிப்பழக்கத்தின் மீது போர் தொடுக்க வேண்டும்….


5 – ஜனவரி – 2013 – பெங்களுரு - இந்தியா.

கே: 'சிறிது மட்டும் குடிப்பதால் ஒன்றும் தவறல்ல. சிவபெருமானே மது அருந்தி இருக்கிறார்' என்று   கூறுபவர்களை எப்படி சமாளிப்பது.?

குருதேவ்:  மக்கள் என்ன வேண்டுமோ அதை செய்துவிட்டு, அதை மதத்தின் மீதோ அல்லது கடவுளின்   மீதோ கூறி தங்கள் செயலை நியாயப்படுத்துகிறார்கள். மற்றவர்களை கவனிப்பதை விடுத்து, உங்கள்   வாழ்க்கையையே பாருங்கள். சிவபெருமான் மது அருந்தினார் என்றால், அதற்குப் பிறகு அவருக்கு பிரச்சனைகளும் இருந்திருக்கும் அல்லவா?  யாரேனும் குடித்திருந்தால் அவர்கள் செய்யும் செயல்களுக்கு   அவர்களை பொறுப்பு கூற முடியாது. இப்படி போதையில் இருப்பவர்களே, சமுதாயத்தில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம். எனவே, குற்றம் செய்த அந்த ஐந்து பேரை மட்டுமல்லாது, அந்த மதுவை உற்பத்தி செய்பவர்களையும், விற்பனை செய்பவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். இது எல்லா கிராமங்களிலும் நடைபெறுகிறது. ஆண்கள் இரவில் குடித்து விட்டு வந்து, அவர்கள் மனைவியை அடிப்பர், பகல் நேரத்தில், இரவு ஒன்றுமே நடவாதது  போல் அவர்களிடம் மன்னிப்பு   கேட்பார். சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களுக்கு மிகப்பெரிய காரணம் குடிப்பழக்கம் ஆகும்.  குடிப் பழக்கத்தை நிறுத்தினால், நாட்டில் பல குற்றங்களை நிறுத்த முடியும்.

நீங்கள் தீர்மானமாக, 'குடிப்போருளை இனி தொடமாட்டேன்' என்று முடிவு எடுக்க வேண்டும். 'நான் சமூகத்திற்காக குடிக்கிறேன்','ஒரே சிறு குப்பி மட்டும் குடிப்பேன்'  என்று கூறுவதெல்லாம் வெறும் சாக்குகள் தான் குடிப் பழக்கத்திற்கான கதவை, நீங்கள் திறந்தால், உங்களை வெள்ளத்தில் அழுத்திவிடும். குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் கதவை  மூடிவிட வேண்டும். 

உங்களுக்கு நீங்களே, நான் இந்த போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்,' என்று கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். இது நமக்கு மாபெரும் சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் சில நேரங்களில், 'சரி,நான்  ஒருதரம் குடித்துப் பார்க்கிறேன்' என்று  தளர்வாக இருந்தால், நாம் மாட்டிக் கொண்டு விடுவோம்.
வாழ்க்கையில் நாம் சிலநேரம் கவலையாகவும், சிலநேரம் பதட்டமாகவும் இருப்போம், எல்லாம் சரியாக சென்றாலும், காரணமே இல்லாமல்  ஒரு அமைதியின்மை இருப்பதை உணரலாம்.அதை ஒருவராலும்   புரிந்து கொள்ள இயலாது. 

அமைதியின்மை உடலில் இருப்பதால், உடனே சிலருக்கு குடிக்கவேண்டும் என்ற உணர்வு வருகிறது, இப்படித்தான் குடிப்பழக்கம் ஆரம்பமாகிறது. அதனால் தான் வாசல் கதவிற்கு வெளியே வைக்கும்படி சொல்கிறேன். குற்றங்கள் ஒழிய  குடிபழக்கத்தின் மீது போர் தொடுக்க  வேண்டும்.   

கே: நான் ஆஷ்ரமத்தில் இருக்கும்போது,வெளியே பொருள் சார்ந்த உலகம் செல்ல எனக்கு  விருப்பமில்லை. ஆனால் குடும்பத்தின்  பொறுப்பு எனக்கு தடையாக இருப்பது போல்  உணர்கிறேன்.   இதிலிருந்து எப்படி வெளி வருவது?

குருதேவ்: உங்கள்  மொபைல் போனை நீங்கள்  சார்ஜ் செய்யவேண்டும் தான், ஆனால் அதை சார்ஜ்   செய்யும் கருவியூடே  வைத்துவிட்டால் எப்படி  உபயோகிப்பது?. அது போல் தான், உங்கள் சார்ஜ் (சக்தி)  குறையும் போது இங்கு வந்து அதை  மின்னேற்றம் போல்,  ஏற்றம் செய்து கொள்ளுங்கள் .

எனக்கு இந்த உலகம் முழுவதுமே ஆஷ்ரமம் தான். நான் ஒரு ஆஷ்ராமத்திலிருந்து மற்றொரு ஆஷ்ரமத்திற்கு, அதாவது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கிறேன். நீங்கள் உங்கள் பொறுப்புகளையும், உங்கள் வீட்டில் உங்களுக்கான வேலையையும், கவனிக்க வேண்டும்.  அதுவும் அவசியம் தான். பொறுப்பிலிருந்து ஓடுவது ஆன்மிகமல்ல. சொல்லபோனால், கூடுதல் பொறுப்பு ஏற்பதாகும். முதலில் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மீது பொறுப்பு கொண்டு, பிறகு   நாட்டின் மீதும், பிறகு இந்த உலகின் மீதும் பொறுப்பாக செயல்பட வேண்டும். இதுபோல் தான் பொறுப்பை  கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கே: எனக்கு தீங்கு செய்பவர்களை எப்படி ஏற்றுக்கொள்வது?

குருதேவ்: அவர்கள், உங்களுக்கு தீங்கு செய்தால் நீங்கள் என்ன செய்யமுடியும், அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வேறு என்ன வழி உள்ளது.  அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் மனம் தான் வருத்தமடையும், இல்லையா? மனம் குழப்பத்தில்   இருக்கும்போது எடுக்கும் எந்த முடிவும், மகிழ்ச்சி தராது அல்லவா? எனவே உங்களுக்காக  நீங்கள்   மற்றவர்களையும், மற்ற சந்தர்ப்பங்களையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.அப்போது தான் உங்கள்   மனம் அமைதி அடையும்.

கே: வாழ்க்கையை நூறு சதவிஹிதம் வாழ, நம் மனதில் ஒரு தெளிவு வேண்டும் என்று ஒரு ஆசிரியர் கூறி கேட்டிருக்கிறேன். குழப்பத்திலிருந்து எப்படி விடுபடுவது?

குருதேவ்: இப்போதும் நீங்கள் குழம்பி இருக்கிறீர்களா? ஒவ்வொரு குழப்பமும்,முன்னேற்றத்திற்கு ஒரு   படி ஆகும். குழப்பம் என்றால் என்ன?  பழைய கருத்துக்கள் மறைந்து, புதிய கருத்துக்கள் வருவது. உங்களால் புதியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மேலும் பழைய கருத்தும் மறைந்து விட்டது. இதுதான் குழப்பம். இது ஒரு நல்ல மாற்றம் தான். இந்த நிலையிலேயே இருங்கள். இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்காது. 

கே: உறவுகளின் உண்மை நிலை என்ன? நான் ஒரு முறை சூடுபட்டபின், இப்போது மிகவும் வெட்கமாக உள்ளது. இந்த பயத்திலிருந்து எப்படி வெளிவருவது?

குருதேவ்: நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போதே, அந்த பயத்திலிருந்து வெளி வந்துவிட்டீர்கள் என்று   அர்த்தம். இல்லையென்றால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டர்கள். 'உறவுகளா, நான் அதில் சிக்கிகொள்ள போவது இல்லை என்று ஓடியிருப்பீர்கள். நீங்கள் அவ்வளவு பயப்படாததால், உங்கள் மனம் மறுபடியும் அதை முயற்ச்சிக்க விரும்புகிறது. நீங்கள் என்னிடம் அதற்கான உறுதி மொழியை எதிர்பார்க்கிறீர்கள். வாழ்வில் அனைத்துமே இன்னல் தான். உங்கள் மனமே நிலையாக இல்லை. பிறரை நம்புவது இருக்கட்டும், உங்கள் மனதையே நம்பமுடிகிறதா? பலர் பொருள் வாங்க கடைக்கு சென்று,' நான் இதை மாற்றிக்கொள்ள முடியுமா? என்று கேட்பதை பார்த்திருக்கிறேன். மக்கள் ஒரு பொருளை விரும்பி   வாங்கிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் அது பிடிக்காமல், மறுபடியும் சென்று அதை மாற்ற  விரும்புகிறார்கள். முக்கியமாக பெண்கள்,அவர்கள் புடவை வாங்க கடைக்கு சென்றுவிட்டு, பின் வாங்கி வந்தது பிடிக்காமல் மாற்ற விரும்புவார்கள். ஒரு பெண்மணி என்னிடம் வந்து,' குருதேவ், நான் கடையில் சரியான  
பொருட்களை எடுக்க வேண்டும் என்று என்னை ஆசிர்வதியுங்கள். ஒவ்வொரு முறை நான் பொருள் வாங்கும் போதும், வீட்டிற்கு வந்து  மறுபடியும் திரும்பி செல்கிறேன்' என்று கூறுவார். எனவே மனம் எப்போதுமே தடுமாறும். உங்கள் மனம் தடுமாறும் போது,மற்றவர் மனமும் தடுமாறும இல்லையா? 

பல தரப்பட்ட மக்கள், பலவித உணர்ச்சிகள், பலவகை குணங்கள், இப்படி எல்லா வித மக்களுடனும் நாம் பழக வேண்டும். தேர்வுக்கு வழி இல்லை. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்போதுமே சிறியவரோ, பெரியவர்களோ,யாரோடு பழகினாலும் ஒரு உடன்பாடு வாழ்வில் எப்போதும் வேண்டும். 

கே: உலகில் ஏன் எல்லா  பிரச்சனைகளும் அன்பால் தொடங்கி அதனாலேயே முடிகிறது?

குருதேவ்:  இல்லையென்றால் வாழ்க்கை அலுப்பாக இருக்கும். சிறிது கற்பனை செய்து பாருங்கள், உலகில் பிரச்சனைகள், சிக்கல்கள் இல்லை என்றால்,வாழ்க்கை சுவையற்றதாக இருக்கும் இல்லையா?  நீங்கள் அதை ஆச்சர்யமாக பார்க்கலாம், இம்மாதிரி கேள்வி கேட்பதற்கல்ல, அதிசயிக்க மட்டுமே ஆகும். 


கே: அரசியல் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு, அதன் எதிர்காலத்திற்கு, ஏன் நம் வாழும் கலை   மையம், அரசியலில் இடம் பிடிக்ககூடாது?

குருதேவ்: வாழும் கலை மையம் அப்படி ஒரு எண்ணத்தோடு வரும் எவரையும் ஆதரிக்கும். அரசியல் வாழும் கலை ஒரு சிறியதளம். நாம் எல்லை தாண்டியும் இருப்பதால், வாழும் கலை மையம் ஒரு    நாட்டின் அரசியலோடு மட்டும், இருப்பதை நான் விரும்பவில்லை. வாழும் கலை மையம் பல நாடுகளில் இருக்கிறது.அது நல்ல நேர்மை வழியில் செல்லுபவர்க்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். 'அரசியலில் ஈடுபட   விரும்புகிறவர்கள், நான் கண்டிப்பாக உற்சாகப்படுத்துகிறேன். நீங்கள் எல்லோரும் சென்று நன்றாக செயல் படுங்கள்.'

கே: குருதேவ், தாங்கள் 'மித்யசார்' பற்றியும் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றியும் விளக்கமாக கூற வேண்டும்?

குருதேவ்:  மித்யசார் என்பது மனத்தில் ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அதை செயல் படுத்தாமல் இருப்பது. உதாரணமாக, உணவை பற்றி நீங்கள் நினைத்து கொண்டு இருந்து விட்டு, அதை உண்ணாமல் இருப்பது, நீங்கள் ஒரு இடத்திற்கு  செல்லக்கூடாது என்று நினைத்து கொண்டு, 'ஆனால்   மற்றவரிடம், நான் மாலை ஆறு மணிக்கு கண்டிப்பாக  வருவேன் என்று  கூறுவது.' பொய் சொல்லுவது அல்லது தன்னையே முட்டாளாக்கி கொள்வது மித்யசார்.

கே: சிடுசிடுப்பாக, விட்டேத்தியாக  இருப்பது என்னை நடைமுறைக்கு ஏற்றவனாகவும், கடுமையான நேரங்களை சமாளிக்கவும் உதவி உள்ளது.அவ்வாறு இருப்பது தவறா?

குருதேவ்:  சிடுசிடுப்பாக இருப்பது ஒரு காலத்தில் நாகரீகமாக இருந்தது, ஆனால் இன்று அது தன்மை இழந்து காணப்படுகிறது. சமுதயத்திற்கோ அல்லது தனிப்பட்ட ஒருவருக்கோ எதுவும் நன்மை செய்வதில்லை. விட்டேத்தித்தனம், தட்டில் ஊறுகாய் போல் ஒரு ஓரத்தில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் உங்கள் முழுதட்டும் ஊறுகாய் இருந்து, ஒரு ஓரத்தில் ரொட்டித் துண்டு இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் பசியோடு தான் இருப்பீர்கள். அதுதான் இன்றும் நடக்கிறது. விட்டேத்தித்தனம் அவசியம் தான் ஆனால் சிறிய அளவில் மட்டுமே இருக்க வேண்டும். அது உங்களுக்குள் ஒரு  நடைமுறை நோக்கை கொண்டு வரவேண்டும்.  

ஆனால் உங்கள் கற்பனை திறனை, உங்கள் ஆர்வம் போன்றவற்றை எடுத்து விடக்கூடாது. உங்கள் உற்சாகம், உங்கள் மேல் நோக்கான திறன் இவற்றை மறைத்து விடக்கூடாது. இவையெல்லாம் இல்லை என்றால், சிறிதளவில் விட்டேத்தித்தனம் இருக்கலாம். வேதங்களில் கூட இவை இருப்பதை காணலாம். அதாவது, 'படைப்பின் ஆரம்பம் யாருக்குத் தெரியும், கடவுள் அறிந்து இருக்கலாம். இல்லையென்றால்   அவரும் அறிந்திருக்க  வாய்ப்பில்லை.' இதுதான் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விட்டேத்தித்தனம் சரி தான், ஆனால் ஊறுகாயை நினைவில் கொள்ளவேண்டும். தட்டில் சோறு, பருப்பு மற்றும் ரொட்டியின் இடத்தை ஊருகாயால் பிடிக்கமுடியாது,ஆனால் தட்டின்  ஒரு   ஓரத்தில்  இருக்கலாம்.

கே: குருதேவ், இவ்வுலகில நான் இருப்பது முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்ற நினைப்பு என்னை சோம்பேறியாக்குகிறது. எப்படி உற்சாகமாகவும் அதே சமயம் மனம் விசாலமாகவும் இருப்பது?

குருதேவ்:பெரியதாக கற்பனை செய்யுங்கள். உங்கள் எண்ணங்களில் குறைபாடு இல்லாமல், எந்த   பின்னடைவை பற்றியும் கவலைப்படாமல் முன்நோக்கி பயணம் செய்யுங்கள். அவ்வளவுதான்.

கே: குருதேவ், நீங்கள் இந்த 2012 வருடம் மாற்றம் தரும் ஆண்டு என்று கூறினீர்கள்! ஆனால் ஒரு மாற்றமும் நடைபெறவில்லையே? அதே ஊழலும், குற்றங்களும் தான் நடக்கின்றன?

குருதேவ்: பொறுங்கள்! என்ன கூறுகிறீர்கள்?  மக்கள் பலர் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளனர்.   2012 ஆண்டின் கடைசி மாதத்தை பாருங்கள், நாடு முழுவதுமே விழிப்போடு செயல்படுகிறது. முன்பெல்லாம், பெண்கள் மீதான வன்முறையை மக்கள் சகித்துக்கொண்டனர். நாம் பெண்கள் உரிமை பற்றியும், பெண்கள் முன்னேற்றம் பற்றியும், பெண்கள் மீது இழைக்கப்படும்  கொடுமைகள், பெண்சிசு கொலை பற்றியும் கருத்தரங்குகளில்  பேசிக்கொண்டு  இருந்தாலும், திடீரென்று  இன்று நாடு முழுவதுமே  ஒரு சம்பவத்தில்   விழித்துக்கொண்டு  விட்டது  இல்லையா? அது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. அதுபோல் 20,000 சம்பவங்கள்   உள்ளன. தில்லியில் மட்டும் 800 சம்பவங்கள் அதுபோல் அந்த சமயத்தில் நிகழ்ந்து உள்ளன.மக்களிடையே விழிப்புணர்வும், மாற்றமும் நிகழ்கிறது இல்லையா?

இந்திய ஆண்டு,மார்ச் மாதத்தில் துவங்குகிறது இல்லையா? உங்களுக்கு அந்த மாதங்களின் அர்த்தம் தெரியுமா?  ஆங்கில மாதங்கள், ஆங்கில மொழியில் இல்லை. அவை எல்லாம் சமஸ்க்ரித்த பெயர்கள்? இங்குள்ளவர்களில் எவ்வளவு பேருக்கு அது தெரியாது? (பலர் கை உயர்த்துகின்றனர்).  டிசம்பர் என்றால் 'தஸ்' என்றால் பத்து, மற்றும் 'அம்பர்' என்றால் வானம், எனவே டிசம்பர் என்பது பத்தாவது   வானம் என்று பொருள். நவம்பர் என்றால் 'ஒன்பதாவது வானம்' என்று பொருள்.அக்டோபர் என்றால் 'எட்டாவது வானம்' ஆகும். 'சப்த்' என்றால் செவென் (ஏழு),அம்பர் என்றால் வானம், எனவே சப்டம்பர் என்பதே செப்டம்பர் ஆனது. ஆகஸ்ட் என்பது  ஷஷ்ட், அதாவது  ஆறாவது, ஆகஸ்ட் என்பது  ஆகும். ஜனவரி  பதினோராவது மாதம், பிப்ரவரி பன்னிரெண்டாவது மாதம் என்றால், மார்ச் மாதம் அதற்கும் அப்பால் - அதாவது புது வருடம் தொடங்குவதாகும். அப்போது தான் சூரியன்,முதல்  கட்டத்தில் ,'மேஷத்தில்' இந்த மார்ச் மாத கடைசியில் வருகிறது. இன்றும் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில், மார்ச் மாதம் 21ம்   தேதியைத்தான் புது வருடமாக கொண்டாடுகிறார்கள், ஏனெனில் அதுதான் பண்டைய  வேதத்தில் இருந்தது. இதெல்லாம் சம்ச்க்ரித்த மாதங்கள் ஆகும். நீங்கள் ஒரு ஆங்கில பேராசிரியரிடம்,   செப்டம்பர், நவம்பர் இதற்கு அர்த்தம் கேட்டால் அவர்களுக்கு தெரியாது. இதை முன்பு யோசித்து, சமஸ்க்ரிதத்திற்க்கும் இதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளதை உணர்ந்தேன். அதே போல் நன்றாக பொருந்துகிறது. இன்று நீங்கள் முக்கியமாக ஒன்றை - அதாவது மாத பெயர்களின் அர்த்தங்களை   கற்றுக்கொண்டீர்கள்.சமஸ்க்ரித பெயர் ஒன்று கூட செயல்பாடு இல்லாமல் இருக்காது - அதுதான் சமஸ்க்ரிதத்தின் அழகு. 

இலைகள் 'பர்னா' என்று அழைக்கப்படுகிறது தெரியுமா? பர்ன என்றால் என்ன என்று தெரியுமா?  எது ஒன்று சூரிய ஒளியையும், ஈரப்பதத்தையும் ஏற்றுக்கொள்கிறதோ அதுவே 'பர்னா' என்று அழைக்கப்படும்.  
'ஏசுநாதர் கிறிஸ்துமஸ் அன்று பிறக்கவில்லை?  இது எத்தனை பேருக்கு தெரியாது? (பலர் கை உயர்த்தினர்)
நீங்கள் ஜீசஸ் மற்றும்  கிறிஸ்துமஸ் என்ற  குறும்படத்தை பார்க்க  வேண்டும். 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஏசுவையும் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இணைத்துள்ளனர். இல்லையென்றால் அது பனிகால சங்கராந்தி என்று தான் இருந்தது. உலகம் முழுவதும் வேத காலங்களில் இருந்து  சூரியபகவானை பிரார்த்திக்கும் நாளாக  மட்டுமே கொண்டாடப்பட்டது. நீங்கள் ஏசுநாதரின் பிறப்பு பற்றிய தகவல் கேட்டால், அதில் முழுவதும் வசந்தகாலம் பற்றியே இருக்கும்.  

அவர் கடும் பனிக்காலத்தில் பிறக்கவில்லை, மேலும் அவர் மே மாதத்தில் கருவில் உருவானார்   என்றால், டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது. மாசற்ற கர்ப்பம் மே மாதத்தில் நடந்தது என்றால், டிசம்பரில் ஏழு மாதங்கள் தான் முடிந்து இருக்கும். ஜீசஸ் குறை மாதத்தில் பிறக்கவில்லை. அவர்   முழுவதுமாக  ஒன்பது மாதங்கள் ஒன்பது நாட்கள் ஆன பிறகே பிறந்தார். ஆனால் மக்களுக்கு அவர் பிறந்த தேதி தெரியவில்லை.   மக்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றினாலும்,கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதிலிருந்து  சர்ச்சால் தடுக்க முடியவில்லை. அவர்கள், 'நீங்கள் இது இயேசு கிறிஸ்து பிறந்ததினமாக எண்ணி அதை அவ்வாறே  கொண்டாடலாம்'  என்று சூரியபகவானுக்கு பதிலாக  இயேசு கிறிஸ்து என்று மாற்றிவிட்டனர்.

கே: குருதேவ், பார்வதி தேவி, தன்னையும், சிவபெருமானின் மைந்தன் கார்த்திகேயனையும், தாரகாசுரன்   என்ற அசுரனிடமிருந்து காப்பாற்ற வந்த பூமாதேவி, அக்னிதேவர் மற்றும் பல தேவர்களுக்கும்   கோபத்தில் சாபம் கொடுத்துவிட்டாள்.  எப்படி ஒரு தேவி இப்படி கோபத்தை கட்டுப்படுத்த இயலாமல் இருக்க சாத்தியமாகும்?

குருதேவ்: இது புராணக்கதைகளை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, தொடர்கள்   எப்போதுமே கூடுதல் நாடகமாக சித்தரிக்கிறார்கள். நான் பார்வதி தேவியை (தெய்வீக அவதாரம்) பார்க்கும் போது, பலவித உணர்ச்சிகள் காட்டப்படுகிறது.அழுதல், மன்னிப்பு  கோருதல் போன்ற பலவித உணர்ச்சிகள், பார்ப்பவர்களை மேலும் ஈடுபட வைக்கவே, இவ்வாறு  கடவுளை சாதாரண மனிதன் போல், உணர்ச்சிகள் வெளிப்பட சித்தரித்து உள்ளனர். மேலும் இயக்குனரும், தயாரிப்பாளரும் தொடரை நீட்டிக்க, உண்மையான கதையை  விட,சிறிது  நாடக பாணியில் செய்துள்ளனர். புராணங்களில் இதுபோல் இல்லை. பார்வதி தேவி இதுபோன்று உணர்ச்சி வசப்படுவதில்லை.  நாடக திரைக்கதைகளில் தான் மக்கள் இது போன்ற வசனம் எழுதி உள்ளனர். அதேபோல் கணேஷ கடவுளும்,  திரும்ப  திரும்ப மன்னிப்பு கூறுவது போலவும் எழுதி உள்ளனர்.

தெய்வீக தன்மை பொருந்திய அவரே, எதற்கு மன்னிப்பு  கோரவேண்டும்? நீங்கள் எந்த புராணக்கதை படிக்கிறீர்களோ, அதில் 'அதிதத்தா' (புராணக்கதைகளில் பேசப்படும் ஒரு குறிப்பிட்ட புனித கடவுளின் வீர தீர கதைகளைப் பற்றி பேசுவது) தான் அந்த புராணத்தின் முக்கிய மதிப்பிற்கு உரிய கதாபாத்திரம். 
உதாரணமாக, சிவபுராணம் எடுத்துக்கொண்டால், சிவபெருமான் தான் தலை சிறந்தவர், மற்றவர்கள் அனைவரும் அவருக்கு கீழ் உள்ளது போல் ஆகும். அதனால் தான் ஒரு தெய்வத்தை  'இஷ்ட' தெய்வம்   அதாவது மத்தியத் தெய்வம் என்றும், அதைச் சுற்றி மற்ற தெய்வங்கள் செயல் புரியும் என்றும் கூறுகிறோம். எனவே  நாம் இஷ்ட தெய்வமாக நினைக்கும் கடவுளே  நமக்கு  முதன்மையாகவும்,  நாம் மிகவும்  மரியாதை செலுத்தும் கடவுளாகவும்  இருப்பார். இது ஆதி  சங்கரர் கூறும் ஒரு அழகான   சுலோகம், 'மன்னாத  ஸ்ரீ ஜகந்நாத,மத்குரு ஸ்ரீ  ஜகத் குரு.மதாத்மா சர்வ பூதாத்மா தஸ்மை  ஸ்ரீ குரவே நமஹ.'

அதாவது,  'என்  இறைவன் (இஷ்ட) தான் இந்த முழு படைப்பின்  கடவுள், என் குருதான்  இந்த   அகில  படைப்பின் குரு, மற்றும் என் ஆத்மா தான் இங்குள்ள , ஜீவராசிகளில்  அமர்ந்திருக்கும்  ஆத்மாவாகும்.' இது போல் ஒரு பக்தர், என் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று  நினைக்கும் போது, அதற்கு பெயர் தான் 'விசிஷ்ட பக்தி' ஆகும். என் கடவுளை தவிர வேறு இல்லை என்ற எண்ணம் எழும்போது, மனம் தானாக ஒருமைப்பட்டு விடும். ஏனெனில் மானத்தின் இயபாவது எது முதன்மையாக இருக்கிறதோ, அதை நோக்கி செல்வதே ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, அதை பக்தியில் ஈடுபட வைக்கவே எதுபோல் புராணங்களில் பலவகை கதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அதனால் தான்  சிவ புராணத்தில், சிவபெருமான்  தான் முதன்மையானவர் என்றும், மற்றவர்கள் அவரிடம்  வேண்டுவது 

வணக்குவது போலவும் கூறியுள்ளனர்.  இது தான் உண்மையான பொருள்.அவள் கோபம் எல்லாம் மகிஷாசுரன் என்ற அரக்கன் மீது தான். அதுவும் முழுவதுமாக அல்ல, மனஅமைதியோடும், இனிமையோடும் இருப்பாள்.துர்கா தேவி, மகிஷாசுரனை (எதிர்மறை எண்ணம் மற்றும்  செயலின்மையையின் சின்னமாக விளங்கும்) தன் மூச்சுக்காற்றை 'ம்ம்ம்ம்' என்ற சப்ததேடு வெளிவிடுவதன் அவனை  சாம்பலாக்கி  விடுகிறாள். இவையெல்லாம் புராணக்கதைகளை, டிவி நிகழ்ச்சிக்காக உருவாக்குகிறார்கள். அதை உண்மை என்று  அப்படியே நம்ப வேண்டியதில்லை.  

கே: குருதேவ், ஒருவர் தன் இஷ்டதெய்வம் தான் மிகவும சிறந்தது  என்று  நினைத்தால், அடிப்படை வாதத்தை  உருவாக்கி விடாதா?

குருதேவ்:  நீங்கள் உலகில் எந்த தாயைக் கேட்டாலும், அவளுடைய குழந்தை தான் சிறந்தது என்பாள். உலகில் பலவகை  குழந்தைகள் இருக்கும், ஆனால் அவளுக்கு அவள் குழந்தை தான்  மிகச் சிறந்தது. அடிப்படைவாதம் என்பது மற்றவர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் அல்லது தவறானவர்கள்,  என்று நினைப்பது அல்லது காண்பிப்பதாகும். என் கடவுள் எனக்கு சிறந்தவர், உன் கடவுள் உனக்கு   வேண்டுமானால்  சிறந்தவராக  இருக்கலாம் என்பது அடிப்படைவாதம்  ஆகாது.