தியானத்திற்க்கான ஐந்து வழிகள் ..


1 - ஜனவரி 2012 பெர்லின்,ஜெர்மனி.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


புத்தாண்டை தியானத்தோடு தொடங்குவது ஒரு நல்ல  வழியாகும். தியானம் என்றால் என்ன? தியானம் என்பது ஒரு நிலை, அதாவது  அதிலிருந்து தான்  அனைத்தும்  பிறக்கிறது,  அதனுள்ளே  அனைத்தும் அடங்குகிறது. அந்த நிலையே தியானம் ஆகும்.  அந்த ஆழ்ந்த அமைதியில்  தான் நீங்கள் உணரும் சந்தோஷம், மகிழ்ச்சி மற்றும் அமைதி, எல்லாம் இருக்கிறது.

மூன்று
 வகையான ஞானம்  இருக்கிறது  தெரியுமா? நம் உணர்வுகள்  மூலம்  கிடைப்பது ஒரு வகையான ஞானம். நம் ஐந்து புலன்களும் ஞானம் வழங்குகிறது. பார்ப்பதன் மூலமும், கேட்பதன், தொடுவதன் மூலமும், நுகர்தல் மற்றும், ருசியின் மூலமும் அறிவாற்றல்  உருவாகிறது. எனவே, நம்  புலன்கள் மூலம் அறிவு பெறுகிறோம்.இரண்டாவதாக, அறிவின்  மூலம் நாம் ஞானம் பெறுகிறோம். நம் அறிவின்  மூலம் பெரும் ஞானம்  நம் உணர்வுகள் மூலம் பெரும் ஞானத்தை விட சிறந்தது. நாம் சூரிய  உதயத்தையும்,அஸ்தமனத்தையும் பார்க்கிறோம், ஆனால்  சூரியன்  எழுவதும் இல்லை, மறைவதும்   இல்லை என்று நம் அறிவின் மூலம் அறிவோம்.

ஒரு பேனாவை தண்ணீரில் வைத்தால், அது வளைந்து தோன்றுகிறது. ஆனால்
 அது   வளைவது  இல்லை  என்று  நாம் அறிவோம்.  அது ஒளியியலின் பொய்த்தோற்றம் தான். எனவே  அறிவினால்  வரும்  ஞானமே  சிறந்தது. பின்னர்  உள்ளுணர்வு  அறிவு  என்று   மூன்றாவதாக  மேன்மையான  ஒன்று   உள்ளது. நம் ஆழ்மனதில் தோன்றுகிறது. ஆழ்ந்த  அமைதியில் ஒன்று  தோன்றுகிறது. சில படைப்பாற்றல், சில கண்டுபிடிப்புகள் போன்றவை தோன்றும்.  இவை எல்லாம் அந்த  மூன்றாம் நிலை ஞானநிலையில்  நிகழ்கிறது.  


தியானம் என்பது  இந்த மூன்றாம் நிலைக்கான கதவை  திறக்க உதவுகிறது. அது  மகிழ்ச்சி  நிலைக்கான  கதவையும்  திறக்க உதவுகிறது. மகிழ்ச்சியில்  மூன்று நிலைகள் உள்ளன.  நம்   புலன்கள் வெளி உணர்வுகளில்  ஈடுபடும்போது,  அதாவது  கண்கள்  பார்ப்பதிலும், காதுகள் கேட்பதிலும், மூழ்கி இருக்கும்போது  நமக்கு ஆனந்தம்  ஏற்படுகிறது. ஆனால் நம்  புலன்கள்   மூலம் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டு.  

நாம்
 முதல் முறை  ஒரு  இனிப்பு  பணியாரம் சாப்பிடும் போது மிகவும் நன்றாக இருக்கும். இரண்டாவது சுவையாக  இருக்கும். மூன்றாவது கொஞ்சம் அதிகம், போல் தோன்றும், நான்காவது,  உண்ணும் போது, சித்திரவதை போல் தோன்றும்.  ஒரே மாதிரி கடையில் செய்தது   என்றாலும், நாம் ருசித்து  உண்ணும்  திறன் குறைந்து கொண்டே வருகிறது இல்லையா?  ஏன்  அப்படி? இது ஐம்புலங்களிலும்  இதே நிலை தான். பார்த்தல், தொடுதல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல் இவை  அனைத்திலும் இதே நிலைதான்   இல்லையா?

இரண்டாவது நிலையான ஆனந்தம்,
 நாம் ஏதாவது  புதுமையாக  படைப்பாற்றலோடு செய்யும் போது, புதுமையாக  ஏதாவது  கண்டுபிடிக்கும் போது ஒரு நல்ல கவிதை, அல்லது ஒரு புதிய உணவு தயாரிக்கும் போது என படைபாற்றலோடு கூடிய  ஆனந்தம் ஆகும்.

உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது, அது முதல் அல்லது
 மூன்றாவது  குழந்தையாக   இருக்கும் போதும் சரி ஒரு விதமான  உற்சாகம், ஆனந்தம் உண்டாகிறது. பிறகு மூன்றாவதாக  ஒரு ஆனந்த நிலை உள்ளது. அது எப்போதும் குறையவே குறையாது. அது புலன்கள் வாயிலாகவோ அல்லது படைப்பாற்றல் மூலமாகவோ  வருவதில்லை, எங்கோ  ஆழ்ந்த விசித்திர  நிலையில் இருந்து  வருவது ஆகும். அதே போல் அமைதி, ஞானம் மற்றும் ஆனந்தம் இவை மூன்றும் வேறு நிலையில் இருந்து  வருவதாகும். அவை எங்கிருந்து வருகிறது, அதன் ஆதாரம், தியானமே ஆகும். தியானத்திற்கு மூன்று முக்கிய விதிகள் உள்ளன.  அவை என்னவென்றால், அடுத்த பத்து  நிமிடங்கள், 'நான்  தியானத்தில் ஈடுபடப்போகிறேன், நான் எதையும்  விரும்ப வில்லை, எனக்கு எதுவும் செய்ய வேண்டாம், நான்  யாருமில்லை'.என்று இந்த மூன்று விதிகளையும் கடைபிடித்தால், நாம் தியானத்தில் ஆழ்ந்து செல்ல முடியும்.

முதலில், தியானம் ஒரு  ஓய்வு   நிலையை  கொடுக்கும். இரண்டாவது, தியானம் நமக்கு சக்தியைக் கொடுக்கும். சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மூன்றாவதாக, தியானம் நம் படைப்பாற்றலை  வளர்க்கிறது. நான்காவதாக, உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும்  தருகிறது.

ஐந்தாவது நிலை  வார்த்தைகளில் விளக்க முடியாத ஒன்று.  ஒருமை மனப்பான்மை வளரும். இந்த பிரபஞ்சமே நாம் என்ற எண்ணம் உருவாகும். இந்த நிலை வரும் வரை நிறுத்த வேண்டாம். வழக்கமாக  நான் இத்தாலி மற்றும் ஸ்பெயின்  நாட்டில் கடற்கரை  செல்லும் மக்களோடு  ஒப்பிடுவேன். சிலர் கடற்கரைக்கு காலாற  நடக்க செல்வார்கள்.

அதிலேயே மகிழ்ச்சி கொள்வர், சிலர்  நீச்சல்  செய்து புத்துணர்ச்சி  பெற  செல்வர், சிலர் மீன்   பிடிக்க செல்வர். மேலும் சிலர் ஸ்கியூபா  டைவிங்  என்று கடலுக்கு  அடியில் நீந்தச்சென்று    நீரின் அடியில் உள்ள உயிரினங்களை பார்த்து மகிழ்வர்.  சிலர் கடலில்  சென்று  முத்தெடுப்பர்,  அவர்கள் மிகவும் ஆழமாக செல்வர். ஞானம் இவ்வாறு பல வகை  வாய்ப்புகளை  நம் முன்  வைக்கிறது.  எனவே சில   மகிழ்வுகள், சில உற்சாகம், பூர்த்தியாகும் சில ஆசைகள், சில மணி நேர ஓய்வு என்று இவையோடு  நிறுத்தி விடக்கூடாது. உங்களுக்கு தெரியுமா, உங்களின்  மகிழ்வான  நேரங்களும் மற்றும் உங்கள் ஆசைகளை  நிறைவேற்றும் திறனும், தியானத்தால் அதிகரிக்கிறது.  உங்களுக்கு  தேவைகள் எதுவும் இல்லை என்ற எண்ணம்  வரும்போது, மற்றவர்களின்  விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.

அது  மிகவும்  நன்றாக  இருக்கும்.  இந்த நிலைக்கு முன்  நிறுத்தி விடாதீர்கள், தொடர்ந்து   தியானியுங்கள்.