பண்டைய ஞானம்……..


30 அக்டோபர் 2012 பெங்களூர் - இந்தியா

கேள்வி: குருதேவ், நாளையிலிருந்து உபனயனத்துடன் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) வேத ஞான பாடங்களையும் தொடங்குகிறோம். இந்த வேத ஞானம், நம்முடைய தினசரி வாழ்க்கைக்கு எவ்வாறு உதவும் என்று நீங்கள் சற்று வழி காட்ட முடியுமா?

குருதேவ்: வேத ஞானம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. எப்போது இது தொடங்கியது அல்லது பிறந்தது என்று எந்த குறிப்பிட்ட காலமும் கிடையாது. ஒரு தனி மனிதனால் மட்டும் தொடங்கப்பட்டது அல்ல. ஆழ்ந்த தியானத்தில் மக்கள் அமர்ந்தபோது கிடைத்த ஒன்றுதான் இந்த ஞானம்.
பல ரிஷிமார்கள் தியானம் செய்தார்கள், அந்த தியானத்தின் ஆழ்ந்த மௌனத்தில் அவர்களுக்கு இது கேட்டது. அவர்கள் என்ன கேட்டார்களோ அதை அவர்கள் உரைத்தனர், அவர்கள் உரைத்ததை யாரையாவது குறிப்பெடுக்கச் சொன்னார்கள். இதையே ஒருவருக்கு ஒருவர் வாய் வார்த்தை மூலம் பகிரப்பட்டது – வாய் வழி பாரம்பரியம். அதைபோலவே, மதீரியா மெதிகா, அதாவது ஆயுர்வேதம்   போன்ற மற்ற பல பாடங்களும் கிடைக்கப் பெற்றது.

ஆயுர்வேதம் எப்படி பிறந்தது தெரியுமா?

ஒரு காலத்தில், மத்திய இந்தியாவில் நைமிசாரண்யம் என்ற வனம் இருந்தது. அந்த வனத்தில் 84,000 தவ யோகிகளும் ரிஷிகளும் கூடினர். ‘நம் சமூகத்தின் எதிர்கால நலத்திற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்’, என்று விவாதித்தனர். அதுதான் அவர்கள் நோக்கம்.

‘நாம் தியானத்தில் அமர்ந்து ஆயுர்வேத ஞானத்தை, வாழ்கை விஞ்ஞானத்தை தரவிறக்கம் செய்வோம், என்றனர். ஆனால் எல்லோரும் தியானத்தில் அமர்ந்தால் குறிப்பெடுக்க யார் இருப்பது? எனவே இந்த வேலையை ஒரு குறிப்பிட்ட ரிஷிக்கு அளித்தனர். அந்த ரிஷி கூறினார், ’நான் விழித்திருந்து இதை எழுதுகிறேன். நீங்கள் தியானத்தில் உங்களுக்கு என்ன வருகிறதோ அதைக் கூறுங்கள்’ என்றார். எனவே 84,000 ரிஷிகள் தியானத்தில் அமர, பரத்வாஜர் ஒருவர் மட்டும் பனை ஓலையில் எழுத அமர்ந்தார். எனவே, அப்படித்தான் ஆயுர்வேதம் அண்டவெளிப் பேருணர்வில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது. அதனால் தான் பன்னெடுங்காலம் கடந்தும் இன்றும் நிலைத்திருக்கிறது.

எந்தவொரு உறுப்புக்கும், ஆயுர்வேதத்தால் குறிக்கப்பட்ட மூலிகைகளை யாராலும் மறுத்துக் கூறமுடியாது. உண்மைக்குச் சான்றாக அது இன்றும் இருக்கிறது.  அதைப்போலவே இசையின் அறிவியலும் தரவிறக்கம் செய்யப்பட்டது.

இசையில், ஏழு ஸ்வரங்கள் உள்ளன, ‘ஸ ரி க ம ப த நி’, இந்த ஏழு ஓசைகளும் ஏழு விலங்குகளுடன் தொடர்புள்ளது. பெரிதாக இருக்கும் யானை ‘நி’ என்று சொல்கிறது. யானை ஓசை எழுப்பும்போது ‘நி’ அல்லது நிஷாதம் எழுகிறது (இசையின் ஒரு ஸ்வரம்). அதைபோல வானம்பாடி ‘ப’ என்ற ஐந்தாவது ஸ்வரத்தை எழுப்புகிறது. அதைபோல ‘ரி’ என்ற ஸ்வரம் ரிஷபத்தினால் எழுப்பப்படுகிறது. எனவே பல விலங்குகள் கத்தும்போது, ‘ஸ ரி க ம ப த நி’ என்று இசை எழுகிறது. ஆனால் மனிதர்களால் மட்டுமே ஏழு ஸ்வரங்களையும் பாட முடியும்.

காந்தர்வ வேதம் இசையைப் பற்றிய அற்புதமான ஞானத்தை கொண்டுள்ளது. இசைக் கலைஞ்சர்கள் இதை கற்றுகொள்ள வேண்டும். இது மிக சுவாரசியமான ஒன்று  இசையில் 72 இராகங்கள் மட்டுமே உண்டு. இந்த 72 இராகங்களுக்கும் உப இராகங்கள் உண்டு. இதில் கரகரப்பிரியா என்ற இராகத்திற்கு 2000 உப இராகங்கள் உண்டு. இசை, இந்த இராகங்கள் எப்படி பிறந்தன என்று காந்தர்வ வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது மிக சுவாரசியமானது.

கேள்வி: இதை நாங்களும் தரவிறக்கம் செய்யமுடியுமா?

குருதேவ்: ஆம், இதை நாம் கூட தரவிறக்கம் செய்ய முடியும். ஆனால் கலியுகத்தில் அவ்வளவு செய்ய முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது. (கலியுகம் – உலகம் காணும் நான்கு கால நிலைகளில் கடைசி கலியுகம் என்று நம் பண்டைய நூல்கள் குறிக்கிறது)

தமோ குணம் (எதிர்மறை மற்றும் மந்த நிலைகளைக் கொண்டது முக்குணங்களில் ஒன்றான தமோ குணம்) அதிகம் கொண்டது கலியுகம். அதனால்தான் மேலும் மேலும் நிறைய மக்கள் தியானத்தில் ஆழ்ந்து 
அதன்மூலம் புதிய விஷயங்களை கண்டுகொள்ளலாம்.

வெளிப்புறத்தில் அதிகம் தமோ குணம் இருந்தால், அது நீக்கப் பட வேண்டும். அதனால்தான் இங்கே யாகங்கள் செய்யப்படுகிறது. (யாகம் – அக்னியில் அவிர் பாகங்கள் அளிப்பது)

இந்தியாவின் மற்ற எந்த பகுதியிலும் இதைப்போன்று துல்லியமாகவும் கச்சிதமாகவும் யாகங்கள் செய்யப்படுவதைக் காண்பது அரிது.

கேள்வி: குருதேவ், ‘இராம நாமமே சத்தியம்’ என்ற வார்த்தைகளை ஒருவர் இறந்த பின் ஏன் கூறுகிறோம்?

குருதேவ்: அப்படியாவது மக்கள் அதை ஞாபகப் படுத்திகொள்ளத்தான். தமக்கு உறவில்லாத ஒருவர் இறக்கும்போது இதை கூறுகிறார்கள். நம்முடை நெருங்கியவர்கள், உறவுக்காரர்கள் இறக்கும்போது இது நமக்கு ஞாபகம் வருவது இல்லை.

வேறு ஒருவரின் மரணத்திலாவது இறைவனின் நாமம் ஒன்றுதான் நிரந்தரம் மற்றதெல்லாம் தற்காலிகம், அழியக்கூடியது என்று ஞாபகப் படுத்திக் கொள்வது நல்லதுதான். இதை உணரவே இந்தப் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. இது வட இந்தியாவில்தான் உள்ளது. தெற்கில் இந்த பழக்கம் இல்லை. தெற்கில், யாராவது இறந்தால் மௌனம் காப்பது உண்டு.

கேள்வி: குருதேவ், பலமுறை உள்ளுணர்வின் குரலை நம் மனம் அடக்கிவிடுகிறது. உள்ளுணர்வை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: மூன்று விதமான அறிவை நாம் கைக் கொள்கிறோம். முதல் வகை அறிவு இந்திரிய ஜான்ய ஞானம். ஐந்து புலன்கலான, கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கால் முகர்வது, நாக்கால் ருசிப்பது மற்றும் தொடு உணர்வால் நாம் பெரும் அறிவு ஆகியவை.

இதுதான் அடிப்படை ஞானம்.

இதைவிட உயர்வானது புத்தியால் வரும் ஞானம். புத்தி ஜான்ய ஞானம் எனப்படும் புத்தி ஞானம்.
இதற்கும் மேலானது, உள்ளுக்குள் இருந்து, எந்தவித முயற்சியும் இன்றி, அதாவது நம் புலன்களின் முயற்சியின்றி நாம் பெரும் அறிவே மிகச் சிறந்த ஞானம். இந்த ஞானம் நம் உள்ளுக்குள் வெகு ஆழத்தில் இருந்து மலர்கிறது. இதுதான் உள்ளுணர்வு.

இதுதான் அறிவின் மூன்று வகைகள்.

புலன்களைவிட புத்தி மூலமாக கிடைக்கும் மேலானது. அதனினும் மேலானது உள்ளுணர்வின் மூலம் கிடைக்கும் ஞானம். நாம் வளர்ந்து முதிர்ச்சியடைய அடைய, நாம் பெரும் ஞானம் மேலும் மேலும் சூக்ஷுமமாகவும்  பரிசுத்தமாகவும் ஆகிறது. ஏனென்றால் நம் மனமும் கூட முதிர்ச்சியடைந்து மேலும் சூக்ஷுமமாகிறது. தாபங்களிலிருந்தும் வெறுப்புகளிலிருந்தும் மனம் மேலும் மேலும் விடுதலையடைந்து சூட்சுமமான ஞானம் நமக்குக் கிடைக்கப் பெறுகிறது.

கேள்வி: குருதேவ், நீங்கள் எதன் அடிப்படையில் உங்கள் அடியார்களுக்கு  வெகுமதி அளிக்கிறீர்கள்? ஏன் என்றால் எனக்குக் கிடைத்ததில் பத்து சதவீகிததிற்குக் கூட நான் தகுதியில்லை. உங்கள் தரப்பில் ஏதேனும் கணக்கில் தவறு உள்ளதா?

குருதேவ்: நான் கணக்குப் போடுவதில்லை. ஏன் கணக்கு செய்து தொந்திரவு செய்துகொள்ள வேண்டும்? 

நான் தளர்வாய் படபடப்பு இல்லாமல் இருக்கிறேன். நீங்களும் தளர்வாகுங்கள்.

நம் தகுதிக்கு மீறி நாம் பெற்றுகொண்டிருக்கிறோம் என்ற அந்த உணர்வு நல்லது. இது நம்மை பணிவாய் 
இருக்க வைக்கிறது. இது நம் மனதிலிருந்து ‘வேண்டும்’ என்ற உணர்வை எடுத்துவிடுகிறது. ‘இது வேண்டும்’ என்பது எழும்போது அன்பு சிதைகிறது. எனவே, நம் தகுதிக்கு மீறி நமக்கு கிடைக்கிறது என்று நமக்குத் தெரியும்போது நாம் அன்பில் திளைக்கிறோம். வாழ்வில் நாம் நன்றியோடு இருந்தால் நமக்கு மேலும் மேலும் கிடைக்கும்.

அதிக நன்றியுணர்வினால் அதிகம் நம் வந்து நம்மைச் சேரும். ஆனால், நாம்,’ஓ, நான் அவ்வளவு செய்தேன், 
ஆனால் எனக்கு இவ்வளவு தான் கிடைத்தது, எனக்கு இன்னும் கிடைத்திருக்க வேண்டும்.’ என்று கூறி, இந்த நினைப்பிலேயே இருந்து கொண்டு, புகார் செய்து கொண்டு, புலம்பிக் கொண்டு இருந்தால், கோபமும் சலிப்பும்தான் வந்து சேரும்.

வாழ்க்கையில் நமக்கு எது கிடைத்தாலும், நமக்கு இந்த உணர்வு இருக்க வேண்டும், ‘எனக்குக் கிடைத்திருக்க வேண்டியதை விட அதிகம் கிடைத்திருக்கிறது’. இதுதான் முதல் புள்ளி.இதன் அர்த்தம் நீங்கள் வேலை செய்ய வேண்டாம் என்பதல்ல. நீங்கள் பாட்டுக்கு  வேலையை செய்துகொண்டிருக்க வேண்டும். நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது, ‘நான் எவ்வளவு செய்ய முடியும் என்று நினைகிறேனோ அதைவிட அதிகம் என்னால் செய்ய முடியும்.’ என்று சொல்ல வேண்டும்.

ஆனால் பெறுதல் என்று வரும்போது, நமக்குக் கிடைக்க வேண்டியதைத் தாண்டி அதிகம் நமக்குக் கிடைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இது நம்மை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும், குறிப்பாக ஆன்மீகத்தில். இது தான் விதியாக இருக்க வேண்டும். மனித உரிமைகள் என்று வரும்போது இதே விதியை நான் கூற மாட்டேன். அங்கு உங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டால் நீங்கள் கேட்டுப் பெற்றாக வேண்டும். ஆனால் ஆன்மீக பரிணாம வளர்ச்சியில், ‘எந்த நேரத்திலும் எனக்குக் கிடைத்திருக்க வேண்டியதை விட இறைவன் எனக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறான்’ என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும்.

இறைவனின் நியாயமான நீதியை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதே இதன் எளிமையான அர்த்தம்.

கேள்வி: குருதேவ், வாழும் கலை இப்போது  நன்கு புகழடைந்திருந்தாலும், சில நேரங்களில், பெற்றோர்களை சமாதானம் செய்வது மிகக் கடினமாக இருக்கிறது. உங்கள் காலத்தில், உங்கள் பெற்றோர்களின் சம்மதத்தை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்?

குருதேவ்: ஆம், நான் அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. நான் ஏன் தாடி வளர்த்தேன் தெரியுமா? தெரியாதா?

தில்லியில் நான் சொல்லிகொடுக்க ஆரம்பித்த போது, நான் தியானம் சொல்லிகொடுப்பதால் என் பெயரைக் கேள்விப்பட்டு, பேராசிரியர்கள் வருவார்கள். வகுப்பு நடக்கும் இடத்திற்கு வந்தபின், ‘குருதேவ் எங்கே?’ என்று கேட்பார்கள்.  நான் சொல்வேன், ‘நான்தான் குருதேவ்.’

நான் 19 வயது பையனைப் போல இருந்ததால் அவர்கள் என்னை பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நாம் வகுப்பு எடுக்கும்போது இப்படியும் அப்படியும் பார்த்தவாறு, ‘இந்தச் சின்னப் பையன் ஏதோ பேசுகிறான்’, என்று நினைப்பார்கள். என்னை பொருட்படுத்தாது என் பேச்சை கவனிக்கவே மாட்டார்கள். சிலர், ‘ஒ, நீங்கள்தான் குருதேவா?’ என்று கேட்டுவிட்டுத் தப்பி ஓடிவிடுவார்கள்.

எனவே, சிறிது வயதானவனாயும் முதிர்ச்சி அடைந்தவனாகவும் காட்டிக் கொள்ள நான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். பின்னர் நான் பெங்களூர் வந்தபின் என்னை தாடியோடு பார்க்க என் அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அவர்கள் பானுவிடம், ‘அவனை தாடியை மழிக்கச் சொல்’, என்பார்கள். பானு, ‘நான் சொல்ல மாட்டேன், நீங்களே சொல்லுங்கள்,’ என்பாள்.

அவர்கள் இப்படி பேசிகொண்டிருப்பார்கள், நான் பக்கத்துக்கு அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். (சிரிப்பு)
அவள், ‘வெகு நாள் கழித்து அவன் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனிடம் எதுவும் சொல்லாதே. அவனை வருத்தப்படச் செய்யாதே. அவனுக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்யட்டும்’ என்பாள்.

எனவே, அப்போது இருவருக்குமே என்னை தாடியோடு பார்க்கப் பிடிக்கவில்லை. ஆனால் என்னால் அவர்கள் விருப்பப்படி செய்ய முடியவில்லை, ஏனென்றால் மக்கள் கற்றுத்தரும் அளவு முதிர்ச்சி உள்ளவனாக என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள், ‘இவன் சின்னப் பையன்.’ என்று சொல்வார்கள். எப்படியும் முதலிலிருந்தே நான் குழந்தையைபோலத்தான் இருந்துவருகிறேன். (சிரிப்பு). எனவே நான் தாடி வைக்க வேண்டியிருந்தது. ஒருமுறை வைத்தபின் அதை அப்படியே நிரந்தரமாக வைத்துக் கொண்டேன்.
இதுதான் கதை.

கேள்வி: குருதேவ், நம் பத்து புலன்களையும் வெல்வது எப்படி? (முதலாக ஐந்து கர்மேந்திரியங்கள், அதாவது செயல்களுக்கும் நம்மை வெளிப்படுத்தவும் உள்ள வாய், கை, கால், ஆசன வாய் மற்றும்  பிறப்பு உறுப்பு. இரண்டாவதாக ஐந்து ஞானேந்திரியங்கள், அதாவது புலன்கள், கண், காத்து, மூக்கு, நாக்கு மற்றும் தோல்)

குருதேவ்:முதலில், உங்களை நீங்கள் எப்போதும் ஏதோ ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வேலை ஏதும் இல்லாமல் சும்மாயிருந்தால் உங்கள் புலன்கள் ஆதிக்கம் செய்யும். எப்போதும் ஒரு காரியத்தில் ஈடுபடுத்திக் கொள்வது மிக முக்கியம். வாழ்க்கையில் உங்களுக்குப் பெரிய குறிக்கோள் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள், பிறகு உங்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்காது.

இரண்டாவதாக, உங்களுக்குப் பொறுமை வேண்டும். மேலும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்ன குடிக்கிறீர்கள் என்பதில் கவனம் வேண்டும்.

கேள்வி: குருதேவ், கர்ம வினைகளின் பதிவுகள் மனதில் படிந்ததும், அதை வெளியே எடுக்க, நான் மனமல்ல மற்றும் நான் என்னவாக இருக்கிறேனோ அதைத் தொட முடியாது கர்ம வினை அதை பாதிக்காது – என்று அறியும் அனுபவம் போதுமா  அல்லது தெரிந்தபின் அந்த வினைக்கு வருந்தி என்னை நானே சரிசெய்து பரிகாரம் செய்வது தேவையா?

குருதேவ்: இல்லை, தெரிந்துகொள்வது மட்டுமே போதும். மன்னிப்பு வேண்டி உங்களை நீங்களே சரி செய்துகொள்ள வேண்டும், ஆனால் இதை தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

கேள்வி: பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், ‘ஆதித்தியர்களில் நான் விஷ்ணு, வேதங்களில் நான் சாம வேதம், கடவுள்களில் நான் இந்திரன் மற்றும் உருத்திரர்களில் நான் சங்கரன்.’ ஒன்றை விட ஒன்றை ஏன் அவர் தெரிவு செய்கிறார்?

குருதேவ்: ‘நான் தான் மிகச் சிறந்தவன்’ என்று ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் கூறுகிறார். எப்போதும் அவர் சிறந்ததையே தேர்வு செய்கிறார். வேதங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப் படுவது சாம வேதம். ஏனென்றால் அது இசை வடிவமானது. அதுவே இசை, ஒற்றுமை, அன்பு மற்றும் பக்தி ஆகியவைகளின் தாய். எனவே ஸ்ரீ கிருஷ்ணர் ஒன்றை விட மற்றொன்றை தேர்வு செய்கிறார்.

இவையெல்லாம் அவரின் தேர்வு. மற்றவையெல்லாம் முக்கியமல்ல, நல்லதல்ல, என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. இல்லவே இல்லை. ‘இதுதான் நான்’ என்று மட்டுமே சொன்னார். உதாரணமாக, நீங்கள் உணவகத்திற்குச் சென்றால் சில வகைகளை மட்டும் தேர்வு செய்து, ‘இது எனக்குப் பிடிக்கும்’ என்கிறீர்கள் அல்லவா? அதனால் மற்ற வகைகள் உங்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தமல்ல.

எதிர்மறை எண்ணங்களை கையாளுதல்....

 28 – அக்டோபர் – 2012 – பெங்களுரு - இந்தியா



தெய்வீகத்தன்மையை  ஆழமான ஓய்வில் (தியானம்) தான்  உணர முடியும். ஆழ்ந்த ஓய்வுக்கு தடைகள் என்ன தெரியுமா? மனதில் உள்ள அதிக ஆசையும்  பொறாமையுமே. மனம் முழுவதும் அதீத  ஆசையும், பொறாமையும் இருந்தால், அமைதிக்கு சாத்தியமில்லை. அமைதி இல்லை என்றால், ஆன்மீக எல்லையை அடைய முடியாது. அதனால் தான் நாம்  மனதில் அதிக பற்றும், பொறாமையும் இல்லாமல் இருக்கவேண்டும். 

அதை எப்படி செய்வது? எனக்கு ஒருவரிடமிருந்தும் எதுவும் தேவையில்லை', இதைத்தான் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

நமக்கு மற்றவர்களிடம் இருந்து எந்த தேவையும் இல்லாத போது, நம் அதீத ஆசையும் இல்லாமல்  போய்விடும். ஆசை இல்லாத போது, வெறுப்பும் இருக்காது. ஒருவரையும்   கெட்டவர்கள் என  நினைக்க வேண்டாம். இவ்வுலகில் ஒருவரும்  கெட்டவர்கள்  அல்ல. தவறான செயல் செய்தால்  அது அவர்கள் அறியாமையால் அல்லது விழிப்புணர்வு இல்லாததாலோ அல்லது அவர்கள் மனம் புண்பட்டு இருப்பதால் தான்.  எனவே, ஒருவரைப் பற்றியும் தவறான எண்ணம்  கொள்ளவேண்டாம்.

கே: குருதேவ், நீங்கள் இப்போது ஒருவரைப் பற்றியும் தவறாக  எண்ணவேண்டாம் என்றீர்கள். ஆனால் மற்றவர்கள் நம்மை தவறாக நடத்தினால் எப்படி நடந்து கொள்வது?

குருதேவ்: மற்றவர்கள் உங்கள் மேல் தவறான கருத்து கொண்டால் அது அவர்கள்  பிரச்சனை,   உங்களுடையது அல்ல. நீங்கள் யாரையும் தவறாக எண்ண  வேண்டாம். இப்படி செய்வதால், உங்கள் மனம் தெளிவாக, அமைதியாக, புத்திகூர்மையோடு இருக்கும். இல்லையென்றால் நீங்கள் யாரை தவறாக  நினைக்கிறீர்களோ அவர்களின்  நினைவு உங்கள்  மனதில் ஒரு  பேய் போல் முற்றுகையிடத் தொடங்கும். அவ்வகை எண்ணங்கள் உங்கள் மனதில் வரும்போது  மனம்  படைப்பாற்றலை  இழந்துவிடும். 

கே: பிறர் நமக்கு உண்மையாகவே தவறு இழைத்தால் என்ன செய்வது?

குருதேவ்: யாரேனும் உங்களுக்கு  தவறு இழைத்தால், எதற்காக  உங்களுக்கு அதைச் செய்தார்கள் என்று  யோசியுங்கள். அவர்கள்  ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் ஒரு முட்டாளையோ அல்லது மனநலம் சரியில்லாத தவறாக நினைப்பீர்களா? இல்லை. மனநலம் சரியில்லாதவர் ஏதேனும் கூறினால், அவர்கள்  வார்த்தையை  ஒரு பொருட்டாக  எடுத்துக் கொள்வோமா? இல்லையே. அவர்கள் மனநலம் சரியில்லதவர்கள் என்று  நினைத்து விட்டு  விட்டு விடுவோம். யாரேனும் உங்களை தவறாக கூறினால் அதேபோல் நினைத்து விடுங்கள். மனம்  பதட்டமடைந்த ஒருவர்  தவறாக  ஏதேனும் கூறினால், நீங்கள்  ஏன்  பதட்டமடைய வேண்டும்? 

கே: நாம் அமைதியாக இருக்க பிறரிடம் இருந்து எதிர்பார்த்தலை தவிர்க்க வேண்டும். ஆனால் தினப்படி வாழ்வில் நம் வீடு அல்லது அலுவலகம்,பலவித மக்கள் பல வேலை செய்கிறார்கள். அவர்கள் அதை சரிவர செய்யவில்லை என்றால், பிரச்சனை  வருகிறது. எல்லோரும் அவர்கள் வேலையை  சரிவர  செய்யவேண்டும். இதற்கு  வழி காட்டுங்கள்?

குருதேவ்: ஒருவர் அவர் வேலையை சரியாக செய்யவில்லை  என்றால், நாம் அதை எடுத்துகூற  வேண்டும். நம் அதிகாரத்தை உபயோகிக்க வேண்டும். வேலை செய்யாமல்   சோம்பேறியாக  இருந்தால், நாம்  சும்மா இருக்க முடியாது. அவர்களின்  கடமையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் மீது நமக்கு வெறுப்போ அல்லது பொறாமையோ இருந்தால், அவர்களிடம் நாம்  விழிப்புணர்வை  கொண்டு வர இயலாது. அது நம்மை கோபமடைய செய்யும். 

கே:  காரணம், விளைவு என்பதன் அர்த்தம் என்ன?

குருதேவ்: காரணம்,விளைவு என்பது காரணம் மற்றும் காரியம்  என்பதாகும். பசு காரணம் என்றால், பால் அதன் காரியம்.பால் இருக்கிறது என்றால் அது  பசுவினால் தான். பசுவிற்கு காரணம் புல். புல்லிற்கு காரணம் பூமி. பூமிக்கு காரணம் சூரியன். இது போல் ஒவ்வொரு   நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு.  பரமகாரணம் அதாவது இந்த எல்லா  காரணத்திற்கும் காரணம் தெய்வீகம். அதனால் தான்  நாம், 'தஸ்மை  நமஹ - பரமகாரண  காரணா' என்கிறோம். எல்லா காரணத்திற்கும்  காரணம் சிவன்.  

கே: குருதேவ், 'ஆசமநீயம் சமர்பயாமி'. தண்ணீர் 'அப என்று  கூறப்படுகிறது, ஆனால் நாம்   அதை ஏன் 'ஆசமநீயம்' என்கிறோம்?. 

குருதேவ்: ஆம். தண்ணீர் 'ஆசமநீயம்' என்றும் கூறப்படும். இது பழங்காலமாக நடைமுறையில் உள்ள  பழக்கம். எதையும் தொடங்கும் சமயமும், முடியும் தருணமும் ஆசமநீயம்  வழங்கப் படுகிறது. இது நாம் செய்யும் அபிமந்தரா ஆகும்.

(மந்திரம் சொல்லி நீர்விடுதல். அதாவது நீங்கள் ஒரு சிறு பானையில் நீர்  எடுத்து அதன்  மேல் உங்கள் கையை வைத்த பிறகு மந்திரம் கூறுவது. இந்த மந்திரங்கள் நீரால்  ஈர்க்கப்பட்டு விடும்.) மந்திரம் சொல்லி பின் அதை அர்பணிக்கிறோம்.இது சாதாரண குடிநீர் அல்ல. நீர்,மந்திர அலைகளால் சக்தி வாய்ந்ததாகிறது. வீட்டிற்கு விருந்தினர்  வந்தால் அவர்களுக்கு கால்கள் சுத்தம் செய்ய நீர் கொடுப்பது, (பாத்யம்) பிறகு கைகள் சுத்தம் செய்ய  நீர் கொடுப்பது (அர்க்கியம்), பிறகு  அவர்கள் தாகத்தை தணிக்க நீர் கொடுப்பது (ஆசமநீயம்).இந்து மூன்று  முறைகளையும், பழங்காலத்திலிருந்து பின்பற்றுகிறோம். யாரேனும் நம் வீட்டிற்கு வந்தால், 'நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்' என்று கேட்போம் இல்லையா? கொஞ்சம் பழரசம், பால், தேநீர், காபி அல்லது குடிநீர்  என்று ஏதேனும் அருந்த தருவீர்கள் இல்லையா? அது போல் தான்  முன் காலத்தில்  பாத்யம்,  அர்க்ஹ்யம், ஆசமநீயம் என்பதும். பாத்யம் என்றால் வரும் விருந்தினரின் கால்களை  வாசலில் சுத்தம் செய்வது,  வெளியில் உள்ள தூசி வீட்டில் வராமல் இருக்கவும், அர்க்ஹ்யம் என்பது கைகளை சுத்தம் செய்வதும் ஆகும். ஆசமநீயம் என்பது குடிக்க நீர் கொடுப்பது, மேலும் பிற காரியங்கள் செய்யலாம் என்ற அறிகுறி. 

கே: 'பஞ்சாமிர்தம் அபிஷேகம்' (ஹிந்து வழிபாட்டில் ஐந்து உணவுப் பண்டங்களை கலந்து தருவது) என்பதன் முக்கியத்துவம்  என்ன? ஏன் இந்த பொருட்கள் மட்டும் சேர்க்கப்படுகின்றன?

குருதேவ்:  இந்த ஐந்தும் அமுதம் போன்றது: பால்,தயிர், தேன், வெல்லம் மற்றும் நெய். இப்போது வெல்லத்திற்கு பதில் சில சமயம் சர்க்கரை உபயோகிக்கிறார்கள். ஐந்து தேவதைகள் அதில் இருக்கிறார்கள். சாவித்திரி சக்கரையிலும் (வெல்லத்திலும்),விஷ்வேதேவா தேனிலும், சூரியன் நெய்யிலும்,வாயு தயிரிலும், சோமா பாலிலும் இருக்கிறார்கள். இவற்றை அபிஷேகமாக நாம் வழங்கும் போது, அதன் நோக்கம் இந்த தெய்வ குணங்கள் நம்மில் மலரட்டும் என்று தான்.   

நாம் அனைவர் மனதிலும் அமைதி நிலவட்டும். அனைவர் மனதிலும் மகிழ்ச்சி மலரட்டும். மக்கள் வாழ்வில் பலம், தைரியம் மற்றும் நீண்ட ஆயுளும் பெருகட்டும். மக்கள் வாழ்வில் திருப்தியும், சுபிக்ஷமும் இருக்கட்டும். வாழ்வில் ஒளி பெருகட்டும். காற்றும், ஆறுகளும் இனிமையாக  இருக்கட்டும்.இரவும் பகலும் இனிமையாக இருக்கவும். ஒவ்வொரு மண் துகள்களும் இனிமையாக இருக்கட்டும். ஆகாசம்,தேவதைகள் மற்றும் பித்ருகளிடம் இருந்துநாம் இனிமையான தன்மை பெறுவோம்.

நம் சொல்லும், எண்ணமும் இனிமையாக இருக்கட்டும். நம் சமூகம் நமக்கு  இனிமை தரட்டும்.
வனஸ்பதி(காடுகளின் தலைவன்) நமக்கு இனிமை தரட்டும். சூரியன் நம் வாழ்வில் ஒளி வீசட்டும். நம் வாழ்வு முழுவதும் பிறருக்கு இனிமை தரட்டும். கூட்டு  உணர்வுகளுக்கு  நாம் இனிமை தருவோம்.  

கே: முடிவற்ற, அசைக்க முடியாத பக்திக்கு எங்களை வழி காட்டுங்கள்?

குருதேவ்: உங்களிடம் அசைக்க முடியாத பக்தி இருப்பதாக நினையுங்கள். நாரத  முனி பக்தி சூத்திரத்தில்,'பக்தி என்பது அடைவதற்கான ஒரு பொருள் அல்ல, நம் சந்தேகங்களை விட்டு  விட்டாலே, பக்தி  இருப்பதை உணரலாம்' என்கிறார். 

கே: நாம் சட்டம் படித்தால் வழக்கறிர் ஆகவும், முயற்சியால் பொறியியல் படித்தால் பொறியாளர் ஆகவும் சாத்தியம் உள்ளது. ஆனால் நாம் சாதனா தினமும் செய்து, ஆன்மீக பாதையில் இருந்தாலும் நாம் மோக்ஷம் அடைவோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லையே? 

குருதேவ்: நிச்சயம் உத்தரவாதம் உண்டு. பகவத் கீதையில் அர்ஜுனன் இதே கேள்வியை கிருஷ்ண பகவானிடம் கேட்க அதற்கு அவர், நஹி கல்யாண-கிருத் கச்சித் துர்கதிம் தத கச்சதி' (அதிகாரம் 6.வரி 40) என்கிறார். ஆன்மீக பாதையில் நடப்பவர் என்றுமே முன்னேறி கொண்டே தான் இருப்பார்.

கே: பல ஞானிகள், அவர்கள் ஞானம் அடைந்தாலும், அவர்கள் நேரிடையாக யாருக்கும் அதை வழங்காமல் அதை அடையும் வழியை மட்டுமே பிறருக்கு உபதேசித்தார்கள். ஏன் கடவுள் நேரிடையாக அனைவருக்கும் ஞானம் வழங்குவது இல்லை? அதற்கு  சம்ஸ்காரம் (வாசனா) அவசியமாகிறதா?  

குருதேவ்: சம்ஸ்காரம் அவசியம் தான். நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்றால் எங்கோ என்றோ நீங்கள் இதில் ஈடுபாடு கொண்டு இருக்கிறீர்கள் என்று  அர்த்தம். அந்த ஆர்வம் இல்லாமல்,  இங்கு வந்திருக்க முடியாது இல்லையா? 

எனவே சம்ஸ்காரம் கொஞ்சம் தேவை தான். ஆனால் அது மட்டுமே போதுமானது அல்ல. வாழ்வில் சம்ஸ்காரம், கிருபை, வாய்ப்பு அனைத்தும் தேவை. அதோடு கூட சுயமுயற்சியும்  தேவை. நீங்கள் சத்சங்கம் வரவேண்டும் என்று எண்ணி உறங்கிக்கொண்டு இருந்தால், அது பலனளிக்குமா? எனவே சுயமுயற்சி, சம்ஸ்காரம், வாய்ப்பு மற்றும் கடவுள் அருள் இவை அனைத்தும் தேவை. 

கே: தொடர்ந்து யோகா,சாதனா செய்பவர்களுக்கும் வலிப்பு  நோயின்  தாக்கம் இருக்குமா?

குருதேவ்: அது அவர் நாள்தோறும்  என்ன உணவு உண்கிறார், அருந்துகிறார் என்பதையும் பொறுத்தது. உண்ணும் முறை,நீர் அருந்தும் முறை   மற்றும் பழக்க வழக்கங்கள்    முறையாக இல்லையென்றால்  வருவதற்கு  வாய்ப்பு  உள்ளது. நரம்பு மண்டலத்தில்  அதிகமான அழுத்தம்   இருந்தால்,அத்தகைய தாக்கல்கள் வர  வாய்ப்பு  உள்ளது. ஒருவர் ஆரோக்யமான வாழ்வு வாழ்ந்தால், அது தாக்காது.