கேள்விகள் அனைத்திற்கும் பதில் நானே

பிப்ரவரி 21 , 2012



கேள்வி: குருஜி தயவு செய்து 'சித்தா' என்றால் என்ன என்று கூறுங்கள்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: 'சித்தா' என்றால் ஆகாயத்தை போல. நம்முள் எங்கும் வியாபித்து இருக்கும். Consciousness (உணர்வுகள்) - கூட 'சித்தா' தான் - சைதன்ய சக்தி. 'சித்தி' ' சைதன்ய' 'சித்தா' இவையாவும் தண்ணீர், பனி கட்டி , நீராவியை போல, ' சித்தா' வின் வேறு தோற்றங்களாகும். திட பொருளாக இருக்கும் போது 'சித்தா', திட பொருளாக இல்லாமல் நீராகவோ, அல்லது நீரவியாகவோ இருக்குமானால் 'சித்தி' என்கிறோம்.


கேள்வி: கோவில்களில் நாம் ஏன் மணி அடிக்கிறோம் ?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எதனால் மணி அடிக்கிறோம் என்றால், உங்கள் மனதில் பல எண்ணங்கள் திரிந்து கொண்டு இருக்கும். மணியினால் ஏற்படும் ஒலியினால் நீங்கள் நிகழ் காலத்திற்கு வருகிறிர்கள். உங்களின் எண்ண ஓட்டம் நிற்கிறது. அதனால் கோவில்களில், பெரிய முரசு, நாதஸ்வரம், ஷெநாய், மணிகள், சங்கு ஆகியவற்றை இசைக்கிறார்கள். இதனால் உங்கள் மனம் அமைதி அடைகிறது.

உங்கள் மனம் ஒரு குழந்தையை போல. ஒரு குழந்தை அழும் போது, நீங்கள் அந்த குழந்தையை விட, மேலும் குரல் கொண்டு அழுதால், அந்த குழந்தை அழுகையை விட்டு அமைதி ஆகிவிடும். நீங்கள் இதை கவனித்து உள்ளீர்களா?. இதை போல உங்கள் மனதில் அதிகப்படியான எண்ணங்களினால், இரைச்சல் ஏற்படும் போது, இந்த மணிகள், சங்கு முதலியவற்றால் உண்டாகும் ஒலி, உங்கள் மனதை நிகழ் காலத்திற்கு கொண்டு வரும். சுற்றி ஏற்படுத்தப்படும் இந்த பெருத்த ஒலி இருக்கும் போது, மனதால் நினைவு அலைகளுக்குள் சிக்க முடியாது. மனதால் திரிய முடியாது. இதை ஒரு யுக்தியாக பயன் படுத்தபட்டது.

வெளியில் இந்த கருவிகளால் ஏற்படும் ஒலி, உங்கள் மனதில் எண்ணங்களினால் ஏற்படும் இரைச்சலை சிறிது நேரத்திற்கு அடக்கி வைக்கும். அதனால் மனம் அமைதி அடையும். மனம் ஆழ்ந்த தியானத்தில் செல்லும் போது பேச்சு வார்த்தைகள எல்லாம் பாரமாக இருக்கும். ஆனால் , மனம் முழுவதும் வார்த்தைகள், எண்ணங்களின் அலைகள் மூலம் கஷ்ட படும் போது முரசு, சங்கு ஏற்படுத்தும் ஒலிகளோ உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். நீங்கள் புத்த மடாலயங்களில் பார்த்ததுண்டா, பெரிய மணிகள் இருக்கும். அந்த மணியை அடித்து அவர்கள் பெருத்த அதிர்வை ஏற்படுத்துவார்கள், அந்த அதிர்வு உங்களை அமைதி படுத்தும். அதனால், சப்தத்தில் இருந்து அமைதிக்கு செல்லும் இந்த பயணம் மிக முக்கியமானது.




கேள்வி
: எதனால் கடவுள் அழகானவர்களையும், அழகற்றவர்களையும் படைத்தார் ? இதற்கு அவர்களின் பூர்வ ஜென்ம கர்மாவின் வினை பயனா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அழகு என்பது பார்பவரின் கண்களின் உள்ளது. நீங்கள் யாரேனையும் அழகு அற்றவர்கள் என நினைகிறிர்களா ? அப்படி என்றால் அவர்களின் அம்மாவையும், பாட்டியிடம் சென்று கேட்டு பாருங்கள். அவர்கள் ஒரு போதும் தங்கள் குழந்தைகளை அழகற்றவர்கள் என நினைக்க மாட்டார்கள். அழகானவர், அழகற்றவர் என்பதன் பொருள் என்ன? அழகு என்பது எத்துனை காலத்திற்கு? எவ்வளவு அழகா இருப்பவரும் சிறிது காலத்திற்கு பின்பு அந்த அளவு அழகாக இருபதில்லை. அழகு என்பது வெளி தோற்றத்தால் அல்ல. அழகு என்பது உள் இருக்கும் ஆன்மா. உள் இருக்கும் ஆன்மாவை பாருங்கள், உள் அழகை பாருங்கள். அந்த ஆன்மாவின் அழகு அழிவு இல்லாதது. நாளுக்கு, நாள் அதிகரிக்கும். வயது ஆக ஆக அந்த அழகும் அதிகரிக்கும்.

ஞானமும், முதிர்ச்சியும், அதிகபடியான அழகை கொண்டு வரும். அழகு என்பது வெறும் தோற்றம் அல்ல. அதே போல், அழகு இல்லாமல் இருப்பதும், புற தோற்றத்தினால் அல்ல. ஒருவர் மிக அழகாக ஒப்பனை செய்து இருக்கலாம். ஆனால் அவர்கள் இதயம் கடினமானதாக இருந்தாலும் , மனது கோணி இருந்தாலும் , எதிர்மறையான எண்ணங்களுடநும் இருந்தால், அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவர்களின் அதிர்வுகள், அவர்கள் அழகு அற்றவர்கள் என்பதை கூறும். சரிதானே? எனவே ஒருவரின் மனம்தான் அவரை அழகானவராக ஆக்குகிறது. .




கேள்வி
: இருத்தலின் ஏழு நிலைகளுக்கும், நம் உடலில் உள்ள ஏழு சக்ராக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வெறும் எண்ணிக்கை மட்டும்தான் ஒன்றாக உள்ளது.




கேள்வி
: குருஜி வெள்ளி கிழமை பெங்களூரில் யோக ரவே நடக்க உள்ளது. நீங்கள் எல்லோரியும் வருமாறு கேட்பீர்களா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பெங்களூரில் யோக ரவே 'தாஜ் சிட்டி' யில் நடக்க உள்ளது. மிக நல்லது.சென்று வாருங்கள் . rock the city




கேள்வி
: இறப்பிற்கு பின்பு மீண்டும் வாழ்க்கை உள்ளதா ? ஏழு பிறவிகள் உள்ளது என கூறுகின்றனர். இந்த ஏழு பிறவிகள் என்பது மனித பிறவியையும் சேர்ந்தா அல்லது மனித பிறப்பிற்கு பின்பா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இறப்பிற்கு பின்பு வாழ்க்கை உள்ளது. நாம் திரும்பி வர வேண்டி உள்ளது. நாம் மீண்டும் வந்து கொண்டு இருப்போம். ஏழு முறை என்பதெல்லாம் இல்லை. அது எத்துனை முறையாகவும் இருக்கலாம்.




கேள்வி
: குருஜி, நம் வாழ்கையில் மௌனத்தின் முக்கியத்துவம் என்ன? தினசரி வாழ்கையில் எப்படி மௌனமாக இருப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தினசரி வாழ்கையில் நாம் மௌனத்தை கடைபிடிக்க தேவையில்லை. அதே சமயம் நிறைய பேச வேண்டியதும் இல்லை. நீங்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தீர்கள் என்றால், பேசுவதற்கு முன்பு சிறிது யோசிப்பீர்கள். நீங்கள் பேசி கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்களுக்கே நீங்கள் என்ன சொல்கிறீகள் என்று புரியாது.




கேள்வி
: குருஜி எனக்கு சாதனா செய்வது, சேவை செய்வது, ஞானத்தில் இருப்பது - இதை தான் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், என் மனமோ மற்ற எல்லா திசைகளிலும், என் வயதிற்கேற்ற நபர்கள் மீதும் ஈர்கபடுகிறது . எனக்கு அப்படி இருக்கவும் பிடிக்க வில்லை. எனக்கு உங்களுடன் இருக்க வேண்டும் என உள்ளது. நான் என்ன செய்யட்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:உனக்கு கல்யாணம் செய்து கொள்ள விருப்பமா ? சரி நல்லது. சென்று ஒரு சரியான துணையை கண்டு பிடுத்து கல்யாணம் செய்து கொள். உன்னுடைய பேரை, வாழும் கலை-கல்யாண வரன் விளம்பர பகுதியில்-பதிவு செய்.(கல்யாண வரண்களுக்கான நமது வாழும் கலையின் இணைய தளம்) அவர்கள் உனக்கு நல்ல துணையை கண்டுபிடுத்து தருவார்கள் அல்லது நீயே கண்டுகொள்.




கேள்வி
: குருஜி;தியானம் செய்யும் பொழுது எடுக்கும் புகைப் படத்தில் [போட்டோ]தோலின் மீது சில வெள்ளைத் தழும்புகள் மாதிரித் தெரிகிறதே ;அவை பிரதிபலிக்கும் நுண் துகள்கள் என்று சொல்லப்படுகிறதே ;

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; அது சரிதான். தியானம் செய்யும் பொழுது எல்லாத் தேவதைகளும் ,கடவுள்களும் நம்மைச் சுற்றியுள்ளநர .




கேள்வி
: நான் கல்யாணம் செய்துகொள்ள விரும்பவில்லை;

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; சரி, நீங்கள் கல்யாணம் செய்துகொள்ள விரும்பவில்ல என்றால்அதுவும் நல்லது.



கேள்வி: அமாவாசை அன்று இரவு வெளியில் செல்லக் கூடாது என்கிறார்களே ,ஏன்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; முந்தைய காலத்தில்மின்சாரம் இல்லாததனால் அமாவாசை அன்று கும்மிருட்டாக இருக்கும்.இருட்டில் பாம்பை மிதித்தல் ,படுகுழியில் விழுதல் போன்ற விபத்துக்கள் நேரக்கூடாது என்பதற்காக மக்கள் அன்று வெளியில் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டார்கள்.ஆனாலும் அமாவாசை தினம் பிரயாணம் செய்ய கூடாது என்ற கட்டாயம் கிடையாது. மேலும் கிரகங்களின் அமைப்பினால் சில விளைவுகள் நேரலாம் என்பதாலும் அமாவாசை அன்று இரவு பயணம் செய்யக் கூடாது என்று சொல்லப்படுகிறது.
 

கேள்வி: வாழ்க்கையின் சாராம்சம் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; !வாழ்க்கையின் சாராம்சம் பற்றித் தெரிய வேண்டுமா? நீங்கள் அடிக்கடி இங்கே வந்து இங்கே அமருங்கள். ஒரு நாள் அது தானாகவே தெரியும்.


கேள்வி: நான் என்னுடைய எண்ணங்களை வலுவாக வெளிப் படுத்துவது எப்படி?நான் நினைப்பது ஒன்றாகவும் சொல்வது முற்றிலும் வேறு ஒன்றாகவும் இருக்கிறது.


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; நிறைய முது நிலைப் பயிற்சி [அட்வான்ஸ் கோர்ஸ்]பண்ணுங்கள்.நீங்கள் ஏற்கனவே உயர்ந்துள்ளீர்கள் என்று தெரியவில்லையா?எவ்வளவு உயர்ந்துள்ளீர்கள் ?50 %உயர்ந்துள்ளீர்கள் மீதமுள்ள 50 %எப்படி உயர்த்திக் கொள்வது என்று ஏற்கனவே நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.எனவே முது நிலைப் பயிற்சி பண்ணுங்கள்.அதோடு அடிப்படைப் பயிற்சியும் திரும்பச் செய்யுங்கள்.ஏற்கனவே நாம் அதைச் செய்திருக்கிறோம் எனநினைக்காதீர்கள்.அது அப்படியல்ல.நீங்கள் திரும்பச் செய்யும் பொழுது அது உங்களை ஒவ்வொரு முறையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் .



கேள்வி: ஒரு ஆணும், பெண்ணும் கல்யாணம் செய்து கொள்ளும் பொழுது ஜாதகப் பொருத்தம் வேண்டுமா? இல்லையா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; ஜாதகம் பொருத்தம் பார்க்கலாம்,நல்லது தான். பொருந்தினால் ரொம்ப நல்லது அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை,கடவுளை பிரார்த்தியுங்கள்.எல்லாம் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்,



கேள்வி: குருஜி, நாங்கள் ஒரு கோசாலை(பசு தொழுவம்) அமைக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அனால் அந்த முயற்சி வெற்றி அடைய வில்லை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; நீங்கள் எதை ஆரம்பித்தாலும், முதலில் கொஞ்சம் கஷ்டங்கள் இருக்கும். விவசாயத்தில் கூட, ரொம்ப லாபம் அடைய முடியாது அல்லவா.? எல்லாவற்றிலும் கொஞ்சம் கஷ்டங்கள் இருக்கும்.



கேள்வி: குருஜி,நேத்ரா தானத்(கண் தானம்)தின் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; அதன் முக்கியத்துவம் என்ன வென்றால், உங்களுக்கு பின்பு உங்களின் கண்கள் வேறு ஒருவருக்கு உதவும்.



கேள்வி: மக்கள் ஒரு நிலைபயிற்சி முடித்து விட்டு கொஞ்சம் இதில் இருந்து விலகி விடுகிறார்கள். இவர்களை ஒன்றாக பிணைக்க ஒரு வழி சொல்லுங்கள். நானும் வீடு திரும்புகிறேன் தயவு செய்து என்னுடன் இருங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; நீங்கள் எங்கு சென்றாலும் பயிற்சிகள் , சத்சங் மற்றும் இந்த நிகழ்ச்சி நடத்துங்கள். எல்லோருக்கும் ஒரு பொறுப்பு கொடுங்கள்.பொறுப்பை கொடுத்தால் அவர்கள் செய்வார்கள்.

விருந்தாளிகளாக வந்திருந்தால், நாம் அவர்களை விருந்தாளிகளாக நினைத்து உபசாரம் செய்கிறோம்.. அவர்கள் விருந்தாளிகளாகவே இருப்பார்கள். ஆனால் நாம் அவர்களை பொறுப்புள்ளவர்கள் என நினைத்தால் அவர்களுக்கும் இதில் ஈடுபாடு வரும்.நீங்கள் சந்தோசமாக வீடு செல்லுங்கள் - நான் உங்களுடன் எப்போதும் இருக்கிறேன்-(எல்லா சிங்கள மக்கள் மற்றும் தமிழ் நா ட்டு மக்கள்).



கேள்வி: குருஜி, உங்களின் அருள் இருந்தால் தான் எங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது. எங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை நாங்கள் உங்களை கேள்வி கேட்க வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எந்த வழி சரி ?உங்களிடம்மிருந்து நாங்கள் எப்படி பதில் வர வைப்பது?



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்; நீங்கள் இப்போது கேட்டுவிட்டீர்கள். நான் தான் உங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில். நான் என்ன சொல்ல வேண்டும்? உங்கள் மனதில் எதாவது கேள்வி இருக்கிறதா நீங்கள் என் முன்னால் வந்தால் எல்லாம் தெளிவாகிறது இல்லையா?அது நல்லது தான்.உபநிஷதில், ஒரு முதுமொழி இருக்கிறது- இதயம் திறந்துகொண்டால் எல்லா கேள்விகளும் மறைந்துவிடுகிறது.

இதை நான் நான்கு நாட்கள் முன் சொன்னேன்-அது அங்கு நடக்கிறது இல்லையா? உங்கள்கேள்விகள் இப்பொழுது மறைந்துவிட்டது அல்லவே? நேற்றய தினம் போல் இல்லாமல் ,நமக்குள் ஒரு கலந்துரையாடல் ஏற்பட முயற்சி எடுத்து கேள்விகள் சில உதிக்கின்றன அல்லவே. இல்லை என்றால், எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை, உங்களுக்கு கேட்பதற்கு ஒன்றும் இல்லை. நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்,நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் மகிழச்சியான உலகத்தில் இருக்கிறோம். நாம் வார்த்தைகள் மூலம் பேசுவதில்லை. நாம் சக்தி மூலம் பேசுகிறோம்.



கேள்வி: குருஜி! ராஜஸ்தானில் மக்கள் சதி மாதாவின் மீது அதிக நம்பிக்கை யுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிவபெருமானின் துணைவியும் சதி என்று வணங்கப்படுகிறார். ராஜஸ்தானின் சதிமாதாவும் சிவனின் துணைவி சதியும் ஒருவர்தானா அல்லது வெவ்வேறா?



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:எல்லாமே சக்தியின் வடிவம்தான். சிவனின் துணையான சக்தியே வெவ்வேறு வடிவங்களில் மக்களால் வணங்கப்படுகிறார்.ஆனால் சதி எனும் பழக்கம் (இறந்த கணவனின் உடலுடன் அவன் மனைவி உடன்கட்டை ஏறுவது)என்பதுகிடையாது. ஆதிகாலத்தில் இந்த சடங்கு கிடையாது. இருந்திருந்தால் குந்தி தேவி சதியாகி இருப்பார். அவ்வாறு இல்லை. அதுபோல் நிறைய தாய்மார்கள் தங்கள் கணவன்மார்கள் மறைந்த பின்னும் வாழ்ந்தனர். சதி எனும் சடங்கு மத்திய காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.அது சரியான வழக்கம் அல்ல. நமது சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் ஆணோ, பெண்ணோ ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று கூறப்படவில்லை. இருபாலினரும் சமமானவரே.ஜாதி, மதம் , பாலினம் இவற்றின் மூலம் வேறுபடுத்துதல் கூடாது.அனைவரும் சமம். எல்லோருக்கும் ஒரே விதமான பிரகாசம், ஆத்மா தான் இருக்கிறது.இதுதான் நான் கூறுவது.



கேள்வி: நமது நாட்டில் பல ஆன்மீக நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எந்த ஒரு பொது நோக்கத்திற்காகவும் ஒன்றாக இணைவதில்லையே? இவ்வாறு பிரிவுபட்டிருந்தால்உலகம் ஒரே குடும்பம்என்ற நிலை எப்படி ஏற்படும்?



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! நாங்கள் தயாராக இருக்கிறோம். மற்ற நிறுவனங்களை உடன் சேர்ந்து உழைக்க அழைக்கிறோம். ரவீந்த்ரநாத் தாகூர் ஒரு கவிதை வரியில் " எக்க்லா சலோ ரே '' ''தனியாக செல் , யாராவது சேர்ந்து கொண்டால் நல்லது; ஆனால் நீ முன்னேறி செல் '' என்று கூறியுள்ளார்.



கேள்வி: குருஜி! குருமார்களும் தங்கள் பக்தர்களின் முன்னால் திக்கற்றவர்களாக இருக்கிறார்களா?



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! முழுமையாக சரி ! குருமார்கள் பக்தர்களின் சேவகர்களே.



கேள்வி: குருஜி! சேவையில் கட்டுப்பாடு(யம) மற்றும் ஒழுக்கத்தை(நியமம்) எவ்வாறு கடைப்பிடிப்பது?



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மன மையத்தை கடைப்பிடியுங்கள்.முறைப்படி ஒழுங்காக தியானம் செய்யுங்கள். ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருப்பேன் என்று மனதில் ஒரு உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அது திடமானதாக இருக்கட்டும்.அதனால் ஓரிரு முறை தவறு நிகழ்ந்தாலும் நீங்கள் நிலைப்பட்டு விடுவீர்கள்.



கேள்வி: குருஜி! நாங்கள் சொல்லுமுன்னரே எங்கள் பிரச்சினைகள் உங்களுக்கு எப்படி தெரிகிறது? நாங்கள் எதுவும் செய்யுமுன்னரே அப்பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றன. இதுஉங்களால் தான் நிகழ்கிறது. எவ்வாறு என்று கூறுங்களேன்?



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களிடம் என் ரகசியத்தை ஏன் கூறவேண்டும்?!