நீங்கள் பசுமையானவர்….


பாத் அண்டோகஸ்ட் -- 25 டிசம்பர் 2012

இன்று உலகம் முழுவதும் இருந்து மக்கள் இங்கு வந்து இருக்கிறார்கள், அது மிகவும் நல்லது. இது நமது குடும்ப சந்திப்பு! உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் நாம் இங்கே கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம்.

இங்கே இருக்கும் இந்த கிறிஸ்துமஸ் மரம் உங்களிடம் சொல்கிறது, 'பசுமை மாறாமல், ஒளி நிரம்பி, மற்றும் பரிசுகள் பல நிரம்பி என்னைப் போல இருங்கள்.' எனவே ஒவ்வொருவரும் பிரகாசித்துக் கொண்டு, பளபளக்கும் பரிசுகள் நிரம்பிய பசுமை மாறாத ஒரு கிறிஸ்துமஸ் மரம்அடுத்த ஆண்டு ஆன்மீக பாதையில் நடக்க மேலும் மேலும் மக்கள் வருவார்கள், அது மிக எளிதாகவும் இருக்கும். 2013 இல், மிகவும் வேறுபட்ட மற்றும் மிகவும் நன்றான இரண்டு புதிய க்ரியாக்கள் சொல்லித்தரப் போகிறேன்.

கே: நீங்கள் இந்த புதிய சகாப்தத்தைப் பற்றி சொல்ல முடியுமா? பெண்களுக்கு இன்னும் பெரிதான பொறுப்புகள் கிடைக்குமா?

குருதேவ்: பெண்களுக்கு உலகில் ஒரு பெரிய பங்கு இருக்கும். ஏற்கனவே பெண்களுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது, ஆனால் அதை விட பெரிய பங்கு வருங்காலத்தில் இருக்கும்.

டிசம்பர் 21 பற்றி மிகப் பெரும் கவலை இருந்தது. கடவுளே! டிசம்பர் 21 அன்று உலகம் முடிவுக்கு வருகிறது என்று உலகம் முழுவதும் ஒரு வதந்தி உருவாக்கினார்கள். மக்கள் உணவு பொருட்களை வாங்கி தங்கள் குடியிருப்பின் கீழ்தளத்தில் சேமித்து வைத்தனர். பலர் தங்களது வீடுகளை, நாட்டை விட்டு மலை மேலே எங்கோ சென்றனர். மற்றும் பலர் இங்கே பெங்களூர் ஆசிரமத்திற்கு வந்தனர். உலகம் கரைந்து போகும்போது ஆசிரமத்தில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தனர்.

நான் இது வதந்தி என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். வெறுமனே பீதி உருவாக்கி அதில் ஆனந்தம் காண உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக பொருட்களை விற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீதியை உருவாக்குகிறார்கள். பீதி இருக்கும் போது மக்கள் பொருட்களை வாங்கி அவற்றை சேமிக்கின்றனர். எனவே இதெல்லாம் தந்திரம். நான் உலகம் தொடரும் என்றேன். இன்று ஏற்கனவே 25, ஆனால் உலகம சரியாகவே இருக்கிறது, அது தொடர்கிறது. இது போன்ற விஷயங்கள் அமெரிக்க திரைப்படங்களில் மட்டுமே நடக்கும்
; உலகம் முடிவுக்கு வந்துவிடும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் வாழ்க்கையில் என்னவெல்லாம் பெற்றுள்ளோம் என்பதை நினைத்துப் பார்த்து நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். நாம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ பெற்றுள்ளோம். நாம் எதிர்காலத்தில் என்னவெல்லாம் பெறவேண்டுமோ அதுவும் கிடைக்கும். இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

எனவே உங்களுக்கு கிடைத்தவற்றிற்காக நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

நீங்கள் சேவை செய்ய தேவை இருக்கும்போது
, 'நான் இன்னும் நிறைய செய்ய வேண்டும், நான் போதுமான அளவு இன்னும் செய்யவில்லை. என்று உணர வேண்டும். துயரப்படுவதற்கான ரகசிய வழி, 'நான் போதுமான சேவை செய்துவிட்டேன் ஆனால் அதற்குத் தகுந்த அளவு எனக்குக் கிடைக்கவில்லை.’ என்று நினைப்பதுதான். நீங்கள் துயரமாய் இருக்க வேண்டும் என்றால், ‘எனக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கவில்லை.’ என்று கேட்டு வாங்கலாம்.

உங்களிடம் என்ன இல்லையோ அதை கேட்டு வாங்குவது உங்களை துயரத்தில் ஆழ்த்தும். ‘நான் போதுமான அளவு செய்து விட்டேன். இதற்கு மேல் எதுவும் செய்யத் தேவையில்லை’ என்று நினைத்தாலும் துயரம் அடைவீர்கள். உண்மையில், இது மன அழுத்தம், கோபம் மற்றும் சோகம் ஆகியவற்றின் அடையாளம். எனவே வேலை என்று வரும்போது, ‘நான் எப்படி இன்னும் அதிகம் செய்வது? இந்த உலகத்தை நான் எப்படி மேம்படுத்துவது? இந்த உலகத்திற்கு நான் இன்னும் என்ன தொண்டாற்ற வேண்டும்?’ என்றே நினைக்க வேண்டும். இந்த வகையில் தான் நீங்கள் யோசிக்க வேண்டும். பெறுதல் என்று வரும்போது, ‘எனக்கு என்ன தேவையோ அது கிடைத்து விட்டது, மேலும் எனக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுவும் கிடைக்கும். எனக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை இயற்கை எனக்கு அளிக்கும்’, என்றே சொல்ல வேண்டும்.

இந்த தன்னம்பிக்கை உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். மேலும், ‘இந்த உலகிற்கு அதிகம் செய்ய வேண்டும்’, என்ற மனநிலை, அந்தத் திசையில் செல்ல உங்களுக்கு ஆற்றலை அளிக்கும்.