ஒரு புதிய ஆரம்பம்….

12 – டிசம்பர் - 2012 – பெங்களுரு - இந்தியா.


ஒருவர் தனிப்பட்ட முறையில் தியானம் செய்தால் அதை 'தபஸ்' (உடல் சுகாதாரத்திற்கும் மற்றும் ஆன்மீக  ஞானத்தையும்  வளர்க்கும் ஒருமித்த முயற்சி) என்கிறோம். ஆனால் அதை   உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்யும்போது 'வேள்வி' அல்லது 'யக்னா'   என்கிறோம். இது சிறந்தது, ஏனெனில் இது  உலகிற்கு இன்றைய  நிலையில்  தேவையான  ஒரு  சத்வ குணத்தையும், இணக்கத்தையும்  உருவாக்குகிறது. எனவே, இது ஒரு அழகான    புனிதமான  புதிய ஆரம்பம்.

நாம் இதில் என்ன நினைவில் கொள்ள வேண்டும் என்றால், நாம்
   தொன்மையான மக்கள்  எனினும் நாம்  புதியவர்கள். சூரியனை பாருங்கள், அது பழமையானது இல்லையா? எனினும்   இன்றும்  புதியதாக உள்ளது, அதன் கதிர்கள் புத்துணர்வோடு இருக்கிறது. காற்றும், மரங்களும்   புத்துணர்வோடு   இருக்கின்றன. பழையமரம் தான் ஆனால் புதிய இலைகள். எனவே நீங்களும் - புதிய நன்னிலையில் உள்ளவர்கள்.  


இது போல் தான்  நீங்களும் இருக்கவேண்டும் -  நான்  பண்டையகாலத்தவன், எனினும் புதியவன், முடிவற்றவன் என்ற எண்ணம் இருக்கவேண்டும். எனவே  புத்துணர்வோடும், புதியதாகவும் உணருங்கள், பிறகு பாருங்கள் உங்கள் புகார்களும் வருத்தங்களும் எப்படி வெகு  சாதாரணமாக மறைகிறது என்று!. ஏற்கும் தன்மை நம் உள்ளத்திலிருந்து வருகிறது. சுறு சுறுப்பாக இயங்கும் தன்மை வாழ்வில் தானாக  உருவாகிறது. நல்லிணக்கம் ஒவ்வொரு    நிலையிலும் உருவாகிறது.

வாழ்வில், இரக்க உணர்வு, ஆர்வம், உணர்ச்சிவயப்படாத நடுவு நிலை இந்த மூன்று விஷயங்கள் வேண்டும். நீங்கள்  துயரம் மிகுந்து இருக்கும் போது நடுவு நிலையில் இருங்கள், மகிழ்ச்சியாக இருக்கும் போது ஆர்வமாக செயலில் ஈடுபடுங்கள். வாழ்வில் ஒரு ஆர்வம்   வேண்டும். சேவை செய்யும் ஆர்வம் தான் ஒருவர் அடையக்கூடிய  மிகவும்  அற்புதமான  விஷயமாகும். எனவே மகிழ்ச்சியோடு இருக்கும் போது சேவை செய்யுங்கள். மன வருத்தத்தோடு இருந்தால் உணர்ச்சி வயப்படாது நடுவு நிலையை கடைபிடியுங்கள், எப்போதும் இரக்கத் தன்மையோடு இருங்கள்.

கேள்வி:
 குருதேவ், இன்றைய இருண்ட பொருளாதார நிலையில், முற்றிலும் பொருள் சார்ந்து   வாழும் மக்கள இடையே எப்படி தியானத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும்    எப்படி உணர்த்துவது?

குருதேவ்: இங்கு, கடந்த
 கால நினைவுகள் உதவும். கடந்த காலத்தில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பும், பின்பும் உலகம் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்தது. மிகக் குறைவான உணவே மக்களுக்கு கிடைத்தது. மற்ற எல்லா வளங்களும் குறைந்து, அனைத்தும் அழியும் நிலை ஏற்ப்பட்டது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து உயிர் பிழைத்து வாழ்ந்து வந்தனர். நாம்   இந்த உலகில் மிக மோசமான  நிலைகளை சந்தித்து இருக்கிறோம். இந்தியாவில் சுதந்திரத்திற்கு   முன்னால் பல நெருக்கடிகள்  இருந்தது. வறட்சி, வெள்ளம், பஞ்சம் மற்றும் பெரிய   தொற்று நோய்களை பார்த்திருக்கிறோம்.

ஆனால் மக்கள் அனைவரும் அந்த கடினமான காலங்களையும்
தாண்டி உயிர் வாழ்ந்தார்கள். கடந்த  நூற்றாண்டை விட இப்போது கடினமாக  இல்லை. நாம் கடினமான காலங்களை கடந்து விட்டோம், எனவே கவலைப்பட வேண்டாம். இப்போது நாம் மனித நேயத்தை வளர்க்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, நலம் பரிமாறிக்கொண்டு, மற்றும் சார்ந்து வாழ வேண்டும். நம்மை சுற்றி வாழ்பவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த  சார்ந்து வாழும் தன்மை தான், நம் கடினமான காலங்களை மீண்டு வர உதவுகிறது.

நம்மை
 சுற்றி மக்கள் இருக்கிறார்கள், நமக்கு ஆதரவாக பலர் உள்ளனர்  என்று நாம் அறியும் போது நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை, இல்லையா? உங்களுக்கு விழிப்புணர்வு, சுய நம்பிக்கை இருந்து, தெய்வத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால், பின் இருண்ட  நிலையில்   இருக்க தேவை இல்லை. எனவே  நீங்கள்  ஒவ்வொரு  கடினமான நெருக்கடியையும், மனித நேயத்தோடு, தெய்வீகத்தோடு, நமக்குள்ளே உள்நோக்கி பார்க்கும் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்.

கேள்வி: குருதேவ், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி எப்போதும்  புதியதாக  நித்தியமாக   இருப்பது? உதாரணமாக நாம் ஒருவரை சந்திக்கும் போது, அவரை பற்றிய எண்ணம்  நம் மனதில் இருக்கிறது.  

குருதேவ்: ஆம். அதனால் தான் நான்  உங்களை, நீங்கள் தொன்மையானவர்கள் எனினும் புதியவர்கள். நீங்கள் புதியவர்கள் என்றால், அதற்காக மற்றவர்களின் பெயரை மறந்து  விடுவீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள்  ஒவ்வொருதரம் ஒருவரைப்பார்க்கும் போது, அவர்களின்    பெயரைக் கேட்பதில்லை. என்றும் புதியவர்கள் என்றால் அதற்காக 'அம்னீசியா' (ஞாபகமறதி) என்று அர்த்தமல்ல. ஆழநினைவில் கண்டிப்பாக இருக்கும். அந்த ஞாபகத்தோடு ஒரு புத்துணர்வும்  இருக்கும். இன்றியமையாத ஒரு புதிய உணர்ச்சி  இருக்கும். அதை விளக்குவது  கடினம் தான். ஆனால் அது அப்படித்தான். எனவே ஒரு புதிய ஆரம்பமோ அல்லது தற்போதைய நிமிடத்தில் இருப்பதோ அம்னேசியா அல்ல.

கேள்வி: குருதேவ், தியானம் நம்
  நுண்ணறிவை வளர்க்குமா? ஆமாம் என்றால், தியானம் எப்படி அறிவை வளர்க்கும்?

குருதேவ்:
 தியானம்  நம்  மூளைக்கு, மனதிற்கு மிகத் தேவையான ஓய்வைத் தருகிறது. அமைதியும், ஓய்வும், படைப்பாற்றல் மற்றும் புலனாய்வின் அன்னையாக விளங்குகிறது. இப்படித் தான் அது நம் அறிவாற்றலை வளர்க்கிறது.

கேள்வி: நம் வாழ்வு
 முழுவதும் தியானத்தில் வாழலாம் என்று கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும்? வாழ்க்கை எப்படி தியானம் ஆகும்?

குருதேவ்:
 ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதிய ஆரம்பம் தான். நீங்கள் விழித்துப் பார்த்தால்,'இது ஒரு புதிய ஆரம்பம்' என்று நீங்கள் எண்ணுவீர்கள். அது தான். அது 'எப்படி' என்ற  கேள்வி   இல்லை. அது  அப்படி தான்.

கேள்வி: குருதேவ்,
 வேத ஞானம்  எப்படி இந்த உலகம் அனைத்துக்கும் பயனளிக்கும் என்று   கூறுங்கள்?

குருதேவ்:
 அது பயன் தருகிறது என்று தெளிவாக தெரிகிறதே. யோகா,தியானம்,மூச்சுப்பயிற்சி ,ஆயுர்வேதம் இவை அனைத்தும் வேத ஞானம் தான். பழைய  ஞானத்திலும் சில திறன் உள்ளது, புதிய ஞானத்திலும் சில திறன் உள்ளது. இரண்டும் ஒன்று சேர்ந்து இந்த   சமுதாயத்திற்கு தேவையான மாற்றங்களை கொண்டுவர செயல்படுகிறது.

கேள்வி:
 ஏன் மக்களை  கடவுளிடம் ஒன்று சேர்த்து  வைக்க வேண்டிய மதம் ஏன்  பிரித்து,   பாகுபடுத்திப் பார்க்கிறது?

குருதேவ்: அஹங்காரம்
வரும் போது, அங்கே மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. ஒரு  மதம் உயர்வானது  என்றால்,'அது "என்" மதம்' என்பதால், அதன்  உள்ளே  இருக்கும்   நல்ல விஷங்களுக்காக அல்ல. அது என் மதம் அதனால் அது தான் சிறந்தது. அந்த 'நான்', அந்த அஹங்காரம் தான் மோதலுக்கு காரணம். மதங்கள் அல்ல. ஆனால் நாம் மதத்தை  ஒரு சாக்காக வைத்து, நம் அடையாளமாக வைத்து பல மோதல்களுக்கு வழி வகுக்கிறோம் இல்லையா? மதங்கள், அரசியலுக்கு அல்லாமல், கடவுளோடு இணைப்பு  உருவாக்கும்  எண்ணத்தோடு   பயன்படுத்தப்பட்டால், பிறகு  மதமும் ஆன்மீகமாகும். 

கேள்வி: எந்த நிலையிலும் மாறாத
எதை நான் நம்ப முடியும்?

குருதேவ்:
 "தன்" உணர்வு தான். ஏன் எதையாவது நம்ப வேண்டும்? அமைதியாக  இருங்கள். நிதானமாக இருங்கள், அப்போது எல்லா செயல்களும் சரியாக அமைவதை பார்ப்பீர்கள்.   உங்களை வருத்தும் எந்த  எண்ணத்தையும்  இங்கேயே விட்டுவிடுங்கள். என்னிடம் கொடுங்கள். நான்  உங்களுடன்  இருக்கிறேன். சரியா?

கேள்வி: நான் தோல்வியை பற்றி மிகவும் கவலைப்படுகிறேன்,
 நான் முக்கியமாக எதையாவது    செய்யும்போது. இதனால் என் செயல் திறன் குறைகிறது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவது?

குருதேவ்: ஒரு புதிய ஆரம்பம். அது கடந்த காலம் - அதை விட்டுவிடுங்கள். பல புதிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் வரும்  என்று நம்பிக்கை கொள்ளுங்கள். ஒரு விஷயம்   என்னவென்றால்  உங்களுக்கே உங்களை  முழுமையாக  தெரியாது என்பது தான். நீங்கள்   உங்கள்  பழைய தோல்விகளை  நினைக்கும் போது, முதலில் உங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது   உங்களுக்கே உங்களை தெரியாது என்பது தான். உங்களை தெரியும் என்ற எண்ணம் வரும் போதுதான், நீங்கள் இந்த எதிர்மறை எண்ணங்கள் தோல்விகள் இவற்றோடு  இணைத்துக் கொள்கிறீர்கள். 

நீங்கள் விழித்துக்கொண்டு பார்த்தால்,'ஆ, எனக்கே என்னை சரியாக புரியவில்லையே' என்ற   எண்ணம் எழும். அது தான் புதிய ஆரம்பம். பிறகு நீங்கள் உங்களுக்குள்ளேயே உங்களுக்கே   தெரியாமல் பல  ஆற்றல்கள்  இருப்பதை கண்டுபிடிப்பீர்கள்.

கேள்வி:
 எதிர்பார்ப்புகளும், கட்டுப்பாடுகளும் இன்றி, நான் எப்படி சுதந்திரமாக காதலிக்க    முடியும்?

குருதேவ்: உங்களுக்கு பாதுகாப்பான காதல்
 வேண்டும், அதே சமயம் உங்களுக்கு பொறுப்பைக் கண்டு பயமாக இருக்கிறது. உங்களுக்குள்ளே பல உணர்ச்சிகள்  ஒன்றாக ஒரு குழப்பமாக   இருக்கிறது. காதலில் குழப்பம்  வரும்போது, அமைதியாக தியானம் செய்து ஓய்வெடுங்கள்   என்று நான்  கூறுவேன். பிறகு எல்லாம் சரியாக நடக்கும்.

கேள்வி:
 குருதேவ் புராதானத்திற்க்கும், புதுமைக்கும் இடையே இருப்பது என்ன?

குருதேவ்: நான் தான்.