காரணமும், விளைவும்…


4 – நவம்பர் 2012 – பெங்களூர் - இந்தியா



கே: குருதேவ், நீங்கள் இவை எல்லாவற்றையும் யாரிடமிருந்து கற்றீர்கள்உங்களுக்கு தியானம் கற்றுக்கொடுத்தது யார்

குருதேவ்: நீங்கள் ஒரு கவிஞரையோ அல்லது ஒரு எழுத்தாளரையோ பார்த்து அவர்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள் என்று கேட்பீர்களா? அவர்கள் அவர்களாகவே  எழுதுகிறார்கள் இல்லையா

ஒரு கவிஞரோ அல்லது எழுத்தாளரோ இங்கிருந்தும் அங்கிருந்தும் நகலெடுத்து அளித்தால் அதனை தங்களுடைய சொந்த படைப்பு என்று சொல்லிக்கொள்ள முடியுமா? ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது எல்லாமே ஒரே ஆதாரத்திலிருந்து தானாகவே  உள்ளுணர்வாக தோன்றும்.

கே: சில பண்டிகைகளின் போது நாம் எல்லா விதமான தானியங்களையும் தானமாக  கொடுக்கின்றோம். அந்த தானியங்களுடன் சேர்த்து உப்பை தானமாகக் கொடுக்கக்கூடாது  என்று சொல்லப்படுவது ஏன்?

குருதேவ்: இது வெறும் பழக்கத்தில் வந்தது தான். இவ்வாறு சாஸ்த்திரங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

உப்பில்லாத உணவுப் பண்டம் எதுவும் இல்லை. அனைத்துப் பொருட்களிலும் சிறிதளவாவது உப்பு இருக்கின்றது. சமய சடங்குகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும்  சிறிதளவாவது உப்பு இருக்கின்றது. தேங்காய்த் தண்ணீரில் உப்பு இருக்கின்றது. பழங்களில் உப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில் கூட உப்பு இருக்கின்றது

நாம் மற்றொருவருக்கு நேரடியாக எண்ணெய், உப்பு, மிளகாய் (சிவப்பு/பச்சை) தண்ணீர்  போன்றவற்றை கைகளில் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. எனவே தான் நாம் பிறருக்குக் கொடுக்கும்போது அவற்றை தரையில் வைத்து விடுகின்றோம். இவற்றை நேரடியாக மற்றொருவர் கைகளில் கொடுக்கும்போது ஒருவருடைய அதிர்வுகள் மற்றொருவருக்கு இவற்றின் வழியாகச் சென்று விடும் என்று நம்பப்படுகின்றது

ஒருவேளை, நீங்கள் மற்றொருவருடைய அதிர்வுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால் பஜனைகள் பாடுங்கள். ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள்பிராணாயாமப் பயிற்சி செய்யுங்கள். எதிர்மறை விளைவுகள் எல்லாம் சென்று விடும்.

கே: குருதேவ், யோக வசிஷ்டாவிலிருந்து ஒரு கேள்வி. பிருகு மகரிஷியின் மகன் சுக்ராச்சாரியர் இறந்துபோன ஒருவரை புனித நீர் தெளித்தும் மந்திரங்கள் உச்சரித்தும் மீண்டும் உயிர்ப்பிக்கின்றார். இது சாத்தியமா?

குருதேவ்: யோக வசிஷ்டாவில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள் நிறைய ஆழ்ந்த மறை பொருட்களைக் கொண்டுள்ளன. அதை ஒரு முறை படித்தால் போதாது. அதை  மீண்டும் மீண்டும் படிக்கும் போது தான் நீங்கள் அதில் மறைந்திருக்கும் இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும்

கே: நாம் மந்திரங்களை உச்சாடனம் செய்யும்போது, அவை நம் சுற்றுச் சூழலையும்நம்மைச் சுற்றியுள்ள மக்களையும், இந்த உலகம் முழுவதையும் எவ்வாறு பாதிக்கின்றன?

குருதேவ்: இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே  மற்ற அனைத்தையும் பாதிக்கின்றன. ஆகவே, நீங்கள் மந்திரங்கள் ஓதும்போதும், யாகங்கள் செய்யும்போதும் அவை சுற்றுப்புறத்தில் மிகவும் நல்ல நேர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உங்களுக்கு நல்ல அதிர்வுகளை அளிப்பதுடன் இந்த காற்றுவெளி முழுவதிலும் நேர்மறை அணுக்களை அதிகப்படுத்துகின்றன

கே: சிவனின் குருவடிவமான தட்சிணாமூர்த்தி சாமவேதப்பிரியர் என்று சொல்லப்படுவது ஏன்

குருதேவ்: சாமவேதத்துடன் தொடர்புடைய மக்களால் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம். ரிக் வேதத்தினைச் சேர்ந்தவர்கள் அவரை ரிக்வேதப்பிரியர் என்று அழைக்கலாம். யஜூர் வேதத்துடன் தொடர்புடையவர்கள் யஜூர் வேதம் தான் வேதங்கள் அனைத்திலும் தலை சிறந்தது என்று சொல்லலாம்

பகவான் கிருஷ்ணர் 'vedanamsamavedosmi'  (பகவத்கீதை அத்தியாயம் 10,வரிகள் 22) என்று சொல்லியிருக்கின்றார் ஏனென்றால் சாமவேதம் பக்தி, இசை என்னும் இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது. நம் மூளை இரண்டு அரை கோளங்களைக்  கொண்டதுஅவற்றில் இடது புறம் பகுத்தறிவுடனும், வலது புறம் இசையுடனும் தொடர்புடையவை. சாம வேதமும் அதே போல் பகுத்தறிவு இசை போன்றவற்றோடு தொடர்புடையதால் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்.  

கே: கன்னட மொழி கஸ்தூரியுடன் ஒப்பிட்டு சொல்லப்படுவது ஏன் ?

குருதேவ்: நீங்கள்  வேண்டுமானால் மல்லிகையுடன் ஒப்பிட்டு சொல்லிக்கொள்ளுங்கள் கவிஞர்கள் கஸ்தூரி கன்னடம் என்று அழைத்தார்கள். ஏன் அப்படி அழைத்தார்கள் என்று நீங்கள் கேள்வி கேட்க முடியாது. உதாரணத்திற்கு ஓர் அழகான பெண் சந்திரமுகி’,அதாவது சந்திரன் போன்ற அழகான முகம் உடையவள் என்று அழைக்கப்படுகின்றாள். சந்திரனில் ஏராளமான புள்ளிகள் உள்ளன. இருந்தாலும் ஏன் பெண்ணின் முகம் சந்திரனுடன் ஒப்பிடப்படுகின்றது?

பசியோடு இருக்கின்ற ஒருவனுக்கு நிலவு ஒரு வட்டமான இனிப்புப்பண்டம் போல் தெரிவதாக ஒரு பழமொழி  உள்ளது. கஸ்துரி மிக இனிமையான மணம் உடையது. அதனால் கவிஞர்கள் கன்னட மொழியினை  இனிமையான மொழி என்று விளக்குவதற்காக அதனுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கலாம்.  

கே: தற்சமயம் நம் நாடு மிகுந்த வரட்சியினை எதிர்கொண்டுள்ளது. நாம் கங்கை, காவேரி  ஆகிய நதிகளை இணைத்தால் நீர்ப்பாசனத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்படுமாறு நீங்கள் அரசியல்வாதிகளுடன் பேச முடியுமா?

குருதேவ்: நம் நாட்டில் உள்ள எல்லா நதிகளிலும் அணைகள் கட்டி ஆற்று நீர் கடலில் சென்று கலந்துவிடாமல் தடுத்தால் இந்தியா முழுவதும் இரண்டடி உயரத்திற்கு  நீர் ( நீர்ப்பாசனத்திற்குத் தேவையான நீரைக் குறிப்பிடுகின்றார்) நிறைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்

மிக அதிக அளவிலான ஆற்று நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது. நாம் ஆற்று நீரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்தியாவில் தண்ணீர்ப் பஞ்சமில்லை. மிக அதிக அளவு மழை பெறுவதில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருந்தாலும் மழை நீரை நாம் சரியான முறையில் சேமித்து வைப்பதில்லை. நீங்கள் உங்களுக்குள்ளேயே குழுக்கள் அமைத்து அணைகள் கட்டி மழை நீரை  சேமித்து வையுங்கள்.

கே: வேத ஞானப் பயிற்சி' (vedic wisdom program) ஐரோப்பியர்களுக்காக மட்டும் அதிலும் குறிப்பாக 2012 ஆம்  ஆண்டில் அளிக்கப்படுவதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா

குருதேவ்: அதனை நாம் வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்காவிற்கென  துவங்கியிருந்தால், மிகப்பெரிய குழுவாக இருந்திருக்கும். நாங்கள் ஏறக்குறைய நூற்றி ஐம்பது பேர் கொண்ட சிறு குழுவாக அமைக்கவே விரும்பினோம். எனவே தான் தற்போது ஐரோப்பாவிற்கு மட்டும் அறிவித்துள்ளோம். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிவித்திருந்தால், அது குரு பூஜை பயிற்சி போன்று ஆயிரத்து ஐநூறு பேருக்கும் மேல் கொண்ட மிகப் பெரிய குழுவாகி இருக்கும்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                     
தற்சமயம் அதற்கேற்ற இடமில்லை என்று நான் நினைக்கின்றேன். எனவே இப்போது சிறு குழுக்களாக செயல்படுவோம். இந்த ஆண்டு ஒரு புதிய ஞான அலை தேவையாக இருந்ததுஅது வந்து விடும். நீங்கள் அனைவரும் பெரிய வேலை ஒன்று செய்ய வேண்டி உள்ளதுஇன்று 

உலகம் முழுவதும் புராதான ஞானத்தை ஏற்க தயாராக உள்ளது. எனவே வேத ஞான பயிற்சி அமைப்பில் உள்ள நீங்கள் அனைவரும் இந்த ஞானத்தை கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்துச் சென்று அவர்கள் வாழ்வில் ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வாருங்கள்

கே: தைராயடினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதற்கு தீர்வு என்ன?

குருதேவ்: நம் உணவில் உள்ள பூச்சிக் கொல்லிகளும் இரசாயனங்களும் தான் காரணம் என்று நான் நினைக்கின்றேன்.