நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.....


5 - நவம்பர் 2012 பெங்களூர் இந்தியா,

கேள்வி: நாம் ஏன் பாதபூஜை செய்கிறோம் (விருந்தினரின் பாதங்களை கழுவி பூக்களால் பூஜித்து வரவேற்கும் ஒரு தொன்று தொட்ட சடங்கு)? அதன் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: அந்தக் காலத்தில், மரியாதைக்குரிய விருந்தினர் நம் வீட்டிற்கு வரும்போது, அவருடைய பாதங்களை கழுவி வரவேற்பது பழக்கம். அவர்கள் நடந்து வந்திருப்பதால் அவர்களின் கால்கள் அழுக்காய் இருக்கும், எனவே முதலில் அவர் பாதங்களை கழுவுவார்கள். நம் வினயத்தையும் இது தெரிவிக்கும் (வினம்ரதா).

சில நேரங்களில், நம் இல்லத்திற்கு விருந்தினர் வரும்போது, மாலை போட்டோ அல்லது மலர்களை தந்தோ அல்லது பூச்செண்டு தந்தோ மரியாதை செய்கிறோம். ஒரு காலத்தில் விருந்தினரை இப்படி வரவேற்கும் இந்த வழக்கம் உலகெங்கும் இருந்து வந்தது.

பெரியோர்களின் கால்களை கழுவுவதற்கு காரணம், கைகளும் கால்களும் சக்தியை வெளிப்படுத்தும். அதனால் தான் நாம் நம் தலை மீது கைவைத்து ஆசிகளை அளிக்குமாறு கேட்கிறோம். கால்களை தொட்டு வணங்குவது இந்தியாவில் ஒரு பாரம்பரியமான பழக்கம். 

ஆனால் சக்தியோ அல்லது அதிர்வுகளோ கை மற்றும் கால்களில் இருந்து மட்டுமே வெளிப்படும் என்பது உண்மையல்ல. அது உடல் முழுவதிலுமிருந்து வெளிப்படும். அதே அளவு நன்மை, பார்வை மற்றும் சொற்களின் அதிர்வுகள் மூலமும் வெளிப்படுகிறது. இதுவே அருளாசிகளின் சாரம்.

வெறுமே பெரியோர்களை நினைத்தாலேயே நமக்கு அவர்கள் அருள் கிடைக்கிறது.நினைவு, சொற்கள், பார்வை மற்றும் ஸ்பரிசம் ஆகியவை மூலம் நமக்கு அருள் கிடைக்கிறது. தர்ஷன், ஸ்பர்ஷன் மற்றும் திருஷ்டி மூலம் நமக்கு அருள் கிடைக்கிறது. ஆனால் நீங்கள், ‘குருதேவ், தயவு செய்து என் தலை மீது கைவைத்து உங்கள் அருளாசிகளை சரியாக அளிக்க வேண்டும்’, என்று கேட்கக் கூடாது.

இப்போதெல்லாம், சில அடியார்கள் எப்படி ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கூட கற்றுத் தர முயற்சிக்கிறார்கள். அருளாசி தானாக கிடைக்கும். என் கால்களை தொடுவதோ அல்லது உங்கள் தலைமீது கைவைக்க என்னைக் கேட்பதோ அவசியமில்லை. பார்ப்பதில் அல்லது வார்த்தைகளை கேட்பதில் என் அருளாசிகள் கிடைத்துவிட்டதாகவே அனுமானம் செய்து கொள்ளுங்கள் போதும்.

எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு உங்கள் மனதில் என் அருளாசிகளை வேண்டினால் உங்களுக்கு கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். இப்படி தான் ‘ஷ்ராத்’ (முன்னோர்களுக்கான மரியாதை சடங்குகள் – திவசம்) செய்யப்படுகிறது. அந்தப் பக்கம் (அமரரானவர்களுக்கு) சென்றவர்களை நினைத்து தியானித்து அவர்களின் அருளாசிகளை வேண்டுகிறோம். இப்படி அமர்ந்து நினைப்பதன் மூலம் நமக்கு அந்த அதிர்வுகள் கிடைக்கிறது.

இது எப்படி முடியும் என்று கேட்கலாம். காம வாசனா எப்படி எழுகிறது என்று சொல்லுங்கள்? அந்த நினைப்பின் மூலமாகவே அல்லவா? பின்னர் உடம்பில் அதற்கான உயிர் இரசாயனங்கள் (ஹார்மோன்கள்) அதிகமாக சுரக்கிறது.

எப்படி கோபப்படுகிறீர்கள்? ஒன்றை நினைப்பதால் மட்டுமே அல்லவா? எப்படி வெறுப்பு ஏற்படுகிறது? உங்களுக்கு பிடிக்காதவர்களை நினைப்பதின் மூலமாக அல்லவா? உங்களுக்கு பிடிக்கவதர்களைப் பற்றி நினைக்க நினைக்க உங்கள் உடம்பில் உதறல் ஏற்படுகிறது அல்லவா? எப்படி பயம் வருகிறது? நினைப்பத்தின் மூலம்.

எனவே நினைப்பதினால், காமம், கோபம், பயம், வெறுப்பு ஆகியவை வரமுடியும் என்றால் அருளாசி வர முடியாதா என்ன? அருளாசி என்ன அவ்வளவு வலுவில்லாதவையா? அல்லது கிடைக்க நீங்கள் அவ்வளவு உழைக்க வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நினைத்தால் மட்டுமே போதும் உங்களுக்கு அருளாசி கிடைக்கும்.‘துர்கா சப்தஷதி’ போன்ற நூல்களை படிப்பதனாலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதன் உட்பொருள் இறை நினைப்பில் மூழ்குவதாலேயே  ஒருவருக்கு அருளாசி கிடைக்கும். இப்படித்தான் இது நடக்கிறது.

எப்போதெல்லாம் நன்றியுணர்வு பெருகுகிறதோ அப்போதெல்லாம் உங்களுக்கு அதனோடு நிச்சயமாய் அருளாசியும் கிடைக்கிறது என்று நினையுங்கள்.

கேள்வி: சரணாகதி மூலம் ஒருவருக்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது; எல்லாம் கிடைக்காத ஒருவர் முழுமையாக சரணாகதி அடையாதவர் என்பது சரியா?

குருதேவ்: எல்லாம் வேண்டும் என்று கேட்பதற்கு முன் ஒருவர் கவனமாக யோசிக்க வேண்டும். எல்லாம் வேண்டும் என்று கேட்டால், அதில் நல்லதும் உண்டு தீதும் உண்டு. மகிழ்ச்சி, துன்பம், பிரச்சினைகள் இவை எல்லாம் அடங்கியதே ‘எல்லாம்’ என்பது. இவை எல்லாம் வாழ்க்கையில் ஒரு பகுதி.

உங்கள் மனதில் தெளிவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூடத் தெளிவாகத் தெரியவில்லை. ஒருநாள், நன்கு வசதியாக அமர்ந்து, உங்களுக்கு உண்மையில் என்ன வேண்டும் என்பதை தெளிவாக யோசியுங்கள். உங்களுக்கு டஜன் கணக்கில் தேவைகள் இருக்கும் உங்கள் மனம் அதைப் பற்றிக் கொண்டிருக்கும்; அது சரியல்ல. ஒரு தேவை வைத்துக் கொள்ளுங்கள் அதில் உங்கள் மனத்தைக் குவியுங்கள். என்னுடைய ஆசைகள் ஒன்று கூட நிறைவேறவில்லை என்று சொல்பவர் ஒருவர் கூட கிடையாது. அதேபோல, தன்னுடைய எல்லா ஆசைகளும்  நிறைவேறிவிட்டது என்று சொல்பவர் ஒருவர் கூட இல்லை.

அதிக அளவு சத்வம் இருக்கும்போது, நிறைவேறுதல் நடக்கிறது, நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் சரிவர முடிகிறது. அதிகம் மகிழ்ச்சியாய் இருந்தால் உங்கள் வேலை அதிகமாய் முடிகிறது. உங்கள் ஆசை நிறைவேறுவதில் வெறி குறைவாக இருந்தால் உங்கள் ஆசை அதிகமாய் நிறைவேறுகிறது.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ஆசையோடு உட்கார்ந்தால், கணினியைப் போன்ற உங்கள் பேருணர்வு குழுப்பமடைந்து அப்படியே வேலை செய்யாமல் நின்று விடுகிறது – அதாவது நீங்கள் பொதுவாகச் சொல்வதுபோல் உங்கள் கணினி ‘ஹேங்’ ஆகிவிடுகிறது.

உங்கள் கை பேசியில் கூட பல பிரயோகங்களை ஒரே நேரத்தில் திறந்தால் அது வேலை செய்யாமல் நின்று போகிறது. அந்த கை பேசியைப் போல, உங்கள் பேருணர்வு ஒரு பெரிய கணினியைப் போன்றது. அதனால் தான், ஆசைகள் ஒரு கலை, அதை நிறைவேற்றி கொள்வதும் 
ஒரு கலை. மேலும் சொல்வதென்றால், ஆசைப்படாமலேயே ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது அதை விடப் பெரிய கலை. அது தான் சித்தி (அசாதாரணமான திறன்

ஆசைப்படுவதற்கு முன்னதாகவே உங்கள் தேவைகள் பூர்த்தியாவதை இங்கு எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்? (அவையில் உள்ள பலர் கைகளை தூக்குகிறார்கள்) பல சித்தர்கள் (பூர்தியானவர்கள் / துல்லியமானவர்கள்) இங்கு அமர்ந்திருக்கிறார்கள்.எல்லோரும் கைகளை தூக்குகிறார்கள். நீங்கள் ஆசைப்படுவதற்கு முன்னாலேயே உங்கள் வேலைகள் முடிகிறது என்றால் அது நிச்சயம் பாராட்ட வேண்டியது தான்.

கேள்வி: குருதேவ், ஜனக மகாராஜா ஞானம் பெற்ற பின்னும் உயிரோடு இருந்ததே தவம் என்று கூறியிருக்கிறீர்கள். ஞானம் பெற்ற பின்னும் தவம் செய்ய முடியுமா?

குருதேவ்: ஞானம் பெற்ற பின் போகத்தில் (புலன்களை பிரயோகிப்பது) இருப்பதே தவம். ஞானம் பெற்ற பின் உயிர் வாழ்வது என்று நான் சொல்லவில்லை. ஞானம் அடைவதற்கு முன் யோகம் தவம், ஞானம் அடைந்த பின்னர் போகம் தவம்.

கேள்வி: சிவ பரிவாரம், அதாவது சிவ பெருமானின் குடும்பதிலுள்ளவர்களின் வாகனங்கள் எல்லாம் எதிரிகளாயிருந்தவர்கள் – சிம்மம், எருது, பாம்பு மற்றும் எலி போன்றவை. இதன் பின் உள்ள இரகசியம் என்ன?

குருதேவ்: எதிரெதிர் மதிப்புகள் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும். சிவபெருமான் இருக்குமிடத்தில் எல்லோரும் ஒற்றுமையாய் இருப்பார்கள். ஆன்மிகம் வளரும்போது, வெவேறு விதமான மக்களும் இணைவார்கள். சிவ தத்துவம் அல்லது  குரு தத்துவம் இருக்குமிடத்தில், ஒரே வகையான மக்கள் மட்டுமே இருக்க மாட்டார்கள், ஆனால் வகைவகையான மக்கள் ஒற்றுமையாய் ஒரு இடத்தில் வாழ்வார்கள். இதுதான் சிறப்பு.

கேள்வி: கலியுகத்தில் தமோ குணம் எங்கும் வியாபித்து இருக்கும்,ஆனால் ஆன்மீக சாதகர்களுக்கு அது நல்ல நேரமாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தமோகுணம் ஆதிக்கமாய் இருப்பது எப்படி சாதகர்களுக்கு நன்மையாய் இருக்க முடியும்?

குருதேவ்: பாருங்கள், சாதகர்களாய்(ஆன்மீக தேடலில் இருப்பவர்கள்)மாறும்போது எல்லா நேரமும் புனிதமானவையே, பயன் தருபவையே,மகிழ்ச்சி துக்கம் இவை இரண்டும் அதற்கென ஒரு காரணம் கொண்டுள்ளது. ஒருவர் எல்லா கணங்களையும் சூழ்நிலைகளையும் சாதகமாகவும், நம் ஆன்மீக சாதனைக்கு பயனளிப்பதாகவும் கருத வேண்டும்.

கேள்வி: உங்கள் அருள் எல்லோருக்கும் சமமாய் இருக்கும்போது, ஏன் சில சாதகர்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள் சிலருக்கு அப்படி இல்லை?

குருதேவ்: எல்லோரும் ஒன்று போல அல்ல.இறைவன் ஒன்றை போலவே எல்லாவற்றையும் படைக்கவில்லை. விதவிதமான மக்கள், வெவ்வேறு கொள்திறன், வெவ்வேறு வளர்ப்பு, வெவ்வேறு என்ன ஓட்டம் மற்றும் வெவ்வேறு சம்ஸ்காரங்கள்(மனப் பதிவுகள்)என்று இருக்கிறார்கள். உங்களை நீங்கள் சாதகராக கருதினால், உங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

உங்களை நீங்கள் ஒப்பிட முடியாதவராக கருதவேண்டும். எல்லோரும் தங்களை தாங்களே ஒப்பிட முடியாதவராக கருதவேண்டும். நாம் மற்றவரோடு ஒப்பிடும்போது வெளிப்புறம் பார்க்கத் தொடங்குகிறோம். பிறகு, தாபம், வெறுப்பு போன்றவைகளில் சிக்கி அந்தக் குழப்பத்தில் நம்மை நாமே இழக்கிறோம்.

கேள்வி: குருதேவ், நீங்கள் அந்தர்யாமி, உங்களுக்கு எல்லாம் தெரியும். என் மனதிலுள்ள கேள்விக்கு விடை தாருங்கள்.

குருதேவ்: அந்தக் கேள்விக்கு நான் அங்கேயே பதில் கூறுகிறேன். ஒரே ஒரு கேள்வி இருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும், ஆனால் அங்கே பல கேள்விகள், சங்கிலித் தொடர்போலக் கேள்விகள் உங்கள் மனதில். சாந்தமாய் தளர்வாய் இருங்கள். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் தானாய் பதில் கிடைப்பதைப் பார்ப்பீர்கள்.

கேள்வி: குருதேவ், ‘புருஷா’ மற்றும் ‘பிரகிருதி’ எப்படி பிறப்பிக்கப் பட்டது? இதற்கிடையே என்ன உறவு?

குருதேவ்: அவர்களின் பிறப்பு எப்போது என்று எனக்கு இப்போது தெரியாது. உண்மையில், அவர்கள் முதலில் பிறந்தார்களா என்றே தெரியாது. காலத்தை கடந்து அவர்கள் இருப்பு இருக்கிறது.