ஒரு வித்தியாசமான காலணி ஜோடி

நவம்பர் 2 – 2012 - பெங்களுரு, இந்தியா


கே: குருதேவ்! "இந்த்ரியார் தேசு வைராக்யம் அனஹன்கார இவ க ஜன்ம மிருத்யு ஜர வியாதி துக்க தோசனுதர்சனம்" என்னும் செய்யுளின் பொருள் என்ன என்று விவரித்துக் கூற  முடியுமா?

குருதேவ்: இந்த்ரியார் தேசு வைராக்யம்-  நாம் பல அழகிய காட்சிகளைக் காண்கின்றோம் ஆனால் எவ்வளவு நேரம் காண முடியும்? ஒரு கால கட்டத்தில் நமது கண்கள் களைப்படைந்து விடுகின்றன, நாம் கண்களை மூடிக் கொள்ளுகின்றோம். அது போலவே வாசனையும்- அகர்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் சுகந்த வாசனையை அனுபவிக்க மாட்டார்கள். அவர்களது நாசி வேலை செய்யாது, அவர்களால், மல்லிகை, சாமந்தி, ரோஜா என்று இனம் கண்டு கொள்ள முடியாது. எப்போதும் நறுமணத்தினை நுகர்ந்து, அத்தகைய வாசனை இல்லாத இடத்தில் இருக்கவே விரும்புவார்கள். அது போன்றே சுவையும். எவ்வளவு தான் ருசியானவற்றை சுவைக்க முடியும்? பின்னர் தொடுவுணர்ச்சி எவ்வளவு முடியும்? ஒரு நாளின் 24 மணி நேரம்? ஒரு நாளின் 24 மணி நேரமும் ஒருவரைத் தொட்டு கொண்டிருந்தால், இருவருக்குமே சலிப்பு ஏற்படும்." என்னைத் தொடாதே! சற்று நகர்ந்து கொள் என்று கூற விரும்புவார்கள். எனவே தொடுகைக்கும் ஒரு அளவு உள்ளது.

இந்த்ரியார்தேசு என்பதன் பொருள் என்னவென்றால் பார்வை, நுகர்ச்சி தொடுகை மற்றும் செவிமடுத்தல் இவற்றிலிருந்து மனதை விலக்குதல். புலனுனர்வுகளிலிருந்து பற்றகற்றுதல்.
அனஹன்காரஇவச என்பதன் பொருள் என்னவென்றால் அகந்தையில்லாத மனோபாவம். "நான்" "எனக்கு"  "என்னுடைய" என்பவற்றை விட்டு அகன்று  காலியாக உணருதல். "நான்" என்பது அதிக எடையை நமக்குக் கூட்டுகின்றது. என்னுடைய வீடு', 'என்னுடைய நாடு ' 'என்னுடைய மொழி' ' என்னுடைய சமயம்' என்று ஏதாவது ஒன்றில் மனம் பற்றிக் கொண்டு விடுகின்றது.

சமயத்திற்காக மக்கள் தங்கள் உயிரைக் கூட இழக்கத் தயாராக இருக்கின்றார்கள். ஏன்? அது சமயப் பற்றினால் அல்ல, "நான்" என்னும் அகந்தையினால் - நான் ஹிந்து, நான் புத்த சமயத்தவன், நான் கிறிஸ்தவன் அல்லது நான் இஸ்லாமியன் என்றெல்லாம் – இது தான் காரணம். நான் என்பதில் சிக்கி மக்கள் பிரச்சினையை காணத் தவறி விடுகின்றார்கள். இதை விட்டு விடுதலை ஆகுங்கள். நான் என்னும் அகங்காரத்திலிருந்து விடுபட்ட மனத்துடன் காணுங்கள்.

நாம் நமது காலணிகளிலேயே சிக்கி மாட்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் அறிய வேண்டும். அந்தக் காலணிகளிலிருந்து உங்கள் பாதங்களை விடிவியுங்கள். வேறு காலணிகளை அணிந்து பாருங்கள். புது உலகம் உங்கள் கண்ணுக்கு தெரியும். இந்தியாவில் அருட்போதகர்கள் அத்தகைய முறையையே கையாண்டார்கள்.

நான் என்பதில் மாட்டிக் கொள்ளாதீர்கள். என்னுடைய சமயம் பெரியது என்று கூறாதீர்கள். உங்களுடைய சமயத்தில் ஏதேனும்.குறைபாடுகள் இருந்தால் அவற்றை அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லா சமயங்களையும் ஒன்றாகப் பார்த்து ஒவ்வொன்றிலும் உள்ள சிறப்புக்களையும் குறைகளையும் அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமயம் என்று அதிலேயே மாட்டிக் கொண்டிருந்தால், அதிலுள்ள குறைபாடுகளைக் கண்டு பிடிக்க மாட்டீர்கள், மன அமைதியுடன் வாழவும் மாட்டீர்கள். பெருந்தன்மையும், பரந்த மனப்போக்கும் உங்களிடம் ஏற்படாது. பெருந்தன்மை ஏற்படாவிட்டால், குறுகிய மனப்போக்கு உண்டாகும். அப்போது ஆத்மாவைப் பற்றிய ஞானம் உங்களில் மலராது. பக்தியையும் மலர்ச்சியையும் உங்களால் அனுபவிக்க முடியாது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் என்பவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். (அவர் 19 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த மறைஞானி). அவர் கிருத்துவ, புத்த, இஸ்லாமிய சமயங்களை ஆழ்ந்து அனுபவித்தவர். மூன்று நாட்களுக்கு ஒரு சமய முறையை பின்பற்றி, அச்சமயத்தின் வழிபாட்டு மற்றும் சடங்குகளைப் பின்பற்றி வந்தார். எல்லோரும் இதையே செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

நான் எனது இளமைப் பருவத்தில் 8-10 வயதில், ஒரு தேவாலயத்திற்குச் சென்று, பாதிரிகளின் சொற்பொழிவுகளைக் கேட்டு, வழிபாட்டு முறையைக் கண்டிருக்கின்றேன். மேலும், மசூதிக்குச் சென்று, இஸ்லாமிய சமய குருமார்களிடம் இருந்து திருக்குரானைக் கற்றிருக்கின்றேன். நல்லுறவுடன் ஞான வழியை விவாதித்திருக்கின்றோம்.புத்த சமயத்தவரிடமிருந்து அவர்களது வழிமுறைகளைப் பற்றியும் விவாதித்துக் கற்றிருக்கின்றேன். ஒவ்வொரு சமயத்தவரின் சுக துக்கங்கள்,சோதனைகள், இன்னல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நான் ஐரோப்பாவிற்குச் செல்லும்போது,ஒரு ஐரோப்பியனைப் போன்றே வாழுகின்றேன்.மங்கோலியா விற்குச் செல்லும் போது, அது எனது நாடு போன்றே உணருகின்றேன். அது போன்று தென் அமெரிக்காவிற்குச் செல்லும்போது அது என்னுடைய நகரமாகவே உணருகின்றேன். அவர்களது மொழியில் ஒரு எழுத்துக் கூட எனக்குத் தெரியாது, அது போன்றே நான் பேசும் மொழி அவர்களுக்குத் தெரியாது. ஆயினும் ஒரு ஒருமையுணர்வு இருக்கின்றது. இத்தகைய ஒருமை உணர்வுதான் அகந்தையற்ற நிலை(அனஹன்கார்). அகந்தையற்ற நிலையிலேயே இது ஏற்படும். அகங்கார நிலையில், சிறுமையில் அடக்கப் பட்ட உணர்வே உண்டாகும்.

கே: குருதேவ்! மனம் ஒரு சூழ்நிலையில் சிக்கி இருக்கும்போது, அது சீக்கிரம் வெளியே வருவதில்லை. ஒருவர் அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: அது பரவாயில்லை. மனம் அப்படிப்பட்டது தான். இங்கு தான் ஞானத்தின்  பங்கு முக்கியமானது. ஞானம்  என்பது புயல் வீசும்போது நாம் பற்றியிருக்கும் ஒரு காப்பு சட்டை போன்றது.

அதனால் தான் அது உணர்ச்சிப் புயல் என அழைக்கபடுகிறது. புராதன மக்கள் உணர்சிகளை கடலோடு ஒப்பிட்டார்கள். அது ஒரு கடல் போன்றது. நாம் நீச்சல் அடித்து கடலை கடக்க பயிற்சி பெற வேண்டும். ஞானம்  ஒரு காப்பு சட்டை போன்றது. எனவே நீங்கள் நீச்சல் அடித்து சோர்வுறும் போது அந்த காப்பு சட்டையை உபயோகிப்பதன் மூலம் கரையை அடையலாம். நீங்கள் ஒரு பிரச்சினையில் சிக்கி இருக்கும் போது உங்களிடம் இந்த ஞானம் இல்லை என்றாம் உங்கள் நிலைமை எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீங்கள் எப்போதுமே மூச்சுப் பயிற்சியோ அல்லது தியானமோ செய்ததே இல்லை, ஞானத்தை கேட்டதே இல்லை எனும் நிலையில், உங்கள் மனம் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பையனிடமோ சிக்கிவிடும் போது, உங்கள் மனதில் என்ன நடந்து கொண்டிருக்கும்? நீங்கள் பைத்தியமாகி இருப்பீர்கள் இல்லையா? இந்த ஞானம் உங்களுக்கு இருக்கிறது என்ற நன்றியுள்ளவராக இருங்கள். ஞானம் என்பது நீங்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல உதவும்.
உதாரணத்திற்கு, யாரோ ஒருவர் உங்களை அவமரியாதை செய்யும்போது, " மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு உதை பந்தாக இருக்காதீர்கள்" எனும் ஞானம் உங்கள் உதவிக்கு வருகிறது. இது இயல்பாகவே வரும். உங்களை அந்த இடத்தில இருந்து வெளிய கொண்டு வர  காப்பாற்ற, எங்கிருந்தோ அந்த ஞானம் உங்களுக்குள் எழும். இது நடக்கிறதா இல்லையா? (பலர் அதை ஆமோதிக்கின்றனர்)  பாருங்கள்! பல பேருக்கு அது ஏற்படுகிறது.

நான் எப்போது ஆசி வழங்காமல் இருந்திருக்கிறேன். எப்போதுமே நான் ஆசி வழங்குகின்றேன். நீங்கள் ஒரு சிறிய கோப்பையுடன் வந்து இரண்டு லிட்டர் வேண்டும் என்று கேட்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரிய பாத்திரம் கொண்டு வந்தால் என்னால் இரண்டு லிட்டருக்கு பதிலாக நான்கு லிட்டர் அளிக்க முடியும். நீங்கள்  பத்து மில்லிலிட்டரே  கொள்ளக்கூடிய பாத்திரம் கொண்டு வந்தால், இரண்டு லிட்டரை ஒதுக்கி தான் வைக்க வேண்டும்..

அருள் மற்றும் ஆசீர்வாதம் இரண்டுக்கும் அவைகளுக்குரிய இடம் உள்ளன. அவை இரண்டும் இல்லாமல் எதுவும் நடக்காது. உங்களுக்கு அவை கிடைத்துக் கொண்டே இருக்கும். அதோடு நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சிகளையும் செய்ய வேண்டும். நாம் நம்முடைய பெறக்கூடிய அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

கே:  கல்யாணமான ஒரு மனிதனுடன் அளவற்று அன்பு புரிவது குற்றமா?

குருதேவ்: இவ்வாறு ஒருவரால் அளவற்ற அன்பு செலுத்தபடுபவரின் மனைவியாகவோ கணவனாகவோ நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு பிடிக்குமா? இதற்கு பேர் அன்பு இல்லை; உணர்ச்சிகளின் சிக்கல்களே ஆகும். இதை விட்டு வெளியே வர வேண்டும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே ஸ்திரமாக இருங்கள். மற்றொருவரின் குடும்பத்தை கெடுக்க வேண்டாம்.

இந்த உலகத்தில் 700 கோடி  பேர் உள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பற்றவர்கள் கல்யாணம் ஆகாதவர்கள். நீங்கள் இப்போது இணைத்து கொண்டிருக்கும் ஒருவரை விட சிறந்தவர் உங்களுக்கு கிடைப்பார்  .

ஒருவர் உணர்ச்சியில் சிக்கியிருக்கும் போது வேறு எண்ணமே இல்லாமல், எப்பொழுதும் அந்த ஒருவரையே பற்றி நினைத்து நினைத்து ஏங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் தான் நாமும் ஒரு நாள் இறக்கத் தான் வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். நம்முடைய இறப்பை பற்றிய ஞானமே வாழ்க்கையின் அர்த்தத்தை ஆழமாக உணர வைக்கும். இல்லையென்றால் நாம் ஏதோ இந்த பூமியில் நிரந்தரமாக இருக்க போவதாக நினைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்போம்.

கே: உணர்ச்சிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

குருதேவ்: உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உணர்ச்சிகளின் கொந்தளிப்புக்கு இடையில் திடமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளின் கொந்தளிப்பு நடந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதன் மூலம் நாம் வலிமையாக ஆக வேண்டும்.

கே: உடலில் எல்லா பாகமுமே, மூக்கு, சுவாசப்பை, வயிறு என்று எல்லாமே காலியாக இருக்கும் போது இந்த மனம் மட்டும் எப்படி எண்ணங்களால் நிரப்பபட்டிருக்கிறது? இந்த எண்ணங்களுக்கு ஆரம்பம் எங்கிருக்கிறது?

குருதேவ்: எப்பொழுது "இவை எல்லாமே காலி தான்" என்று மனம் எண்ண ஆரம்பிக்கிறதோ அப்பொழுதே மனமும் காலியாக ஆரம்பித்து விடுகிறது.

கே: குருஜி இன்று கர்வசௌத்!!!

குருதேவ்: ஆம் இன்று கர்வசௌத்.நீங்கள் ஏற்கனவே நிலாவை பார்த்திருந்தால் போய் சாப்பிடலாம், அப்படியே நிலாவை பார்க்கவில்லை என்றாலும், பார்த்ததாக நினைத்து கொண்டு சாப்பிட ஆரம்பிக்கலாம். நம்முடைய நாட்டில் இந்த மாதிரி நிறைய பழக்க வழக்கங்கள் இருந்து வருகின்றன. "பாய் தூஜ்", "கர்வ சௌத்" என்று. இந்த பண்டிகைகளின் மூலம் நம் உறவு முறைகள் பலப்படுத்தபடுகிறது, புனிதமாகிறது. கர்வ சௌத் பண்டிகையின் பொழுது ஒரு மனைவி தன கணவனின் நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்யதிற்கும் விரதம் இருந்து வேண்டிக் கொள்வாள். இப்பொழுதெல்லாம் அவற்றோடு சேர்த்து கணவரின் மன ஆரோக்கியத்திற்கும் வேண்டிக் கொள்ளுகிறாள்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் சரியானபடி பயன் படுத்தி கொள்ள வேண்டும். இதுவும் ஒரு வாய்ப்பு தான். விரதம் இருக்கும்பொழுது உடலும் மனமும் சுத்தம் ஆகிறது. அதனால் பிரார்த்தனை நன்றாக செய்ய முடிகிறது. ஆனால் விரதம் இருக்கும் பொழுது தண்ணீர் குடிக்க வேண்டும், அப்பொழுது தான் உடலில் இருக்கும் நச்சு பொருட்கள் வெளியேறும்.. உடலும் சுத்தம் ஆகும். அதனால் தண்ணீர் குடிப்பது அவசியம் .
உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குமானால் உங்கள் மருத்துவரின் அனுமதியுடன் தான் விரதம் இருக்க வேண்டும் .சில கணவர்கள் கூட தங்கள் மனைவிக்காக கர்வசௌத் விரதம் இருக்கிறார்கள் . இது வரவேற்க பட வேண்டியதுதான். இரு பக்கங்களில் இருந்தும் இது அவசியம். எதுவுமே ஒருதலைபட்சமாக இருக்க கூடாது.