புனித யாத்திரையின் முக்கியத்துவம்...


4 – அக்டோபர் – 2012 – பெங்களுரு - இந்தியா.

கே:  பந்தபாசத்தில் அடிமை கொள்வதை பற்றி  நீங்கள் பேச முடியுமா?  நம் ஆன்மா ஏன் பந்தத்தில் சிக்குண்டது  போல்  உணர்கிறது? இந்த அடிமைத்தனத்தின்  காரணம் என்ன?  

குருதேவ்:  அறியாமை தான் அடிமைத்தனத்திற்கு காரணம். ஏன்  அறியாமை? அதற்கு பதில் கிடையாது. தெய்வம் ஏன் இந்த அறியாமையை முதலில் உருவாக்கி, பின் அதிலிருந்து விடுபடும் வழியையும் தரவேண்டும்? அதனால் தான்  அதை லீலா (தெய்வீக விளையாட்டு அல்லது நாடகம்) என்று கூறப்படுகிறது. இது  நாம்' ஏன் கால்பந்து போட்டி  நடக்கிறது? ஏன்  இரண்டு விளையாட்டு மன்றம், சில பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு புறத்தில் சில விளையாட்டு வீரர்கள், மறுபுறத்தில் மற்ற வீரர்கள், ஒரு பந்தை இந்த பக்கத்திலிருந்து  அந்த பக்கத்திற்கு தள்ளுகிறார்கள்? ஏன் அவரவர்கள் ஒரு பந்தை வைத்து அவர்கள் இடத்திலேயே விளையாடக் கூடாது? என்று கேட்பது போலாகும். பிறகு அது விளையாட்டல்ல! அதனால் அறியாமையால்  ஒரு விளையாட்டு உள்ளது.அதனால் தான் இவ்வுலகம் முழுவதும்  'பரமபுருஷத்தின் லீலை' (தெய்வத்தன்மை) என்று கூறப்படுகிறது.

கே: ஞானம் தேடுபவர் புரிந்து கொள்ளுதலை உணர்தலுக்கும், உணர்தலை விடுதலை உணர்வுக்கும் தவறாக எடுத்து கொள்ளகூடாது என்று பரவலாக ஒரு கருத்து  உள்ளது. இதை தாங்கள் விளக்க முடியுமா?

குருதேவ்:  இதை கூறியது யார்?  மற்றவரின் வாசகத்தை பற்றி கருத்து சொல்லும் பழக்கம்   எனக்கு இல்லை. புரிந்து கொள்ளுதல் என்பது அறிவு சார்ந்தது. அனுபவம் அதை விட ஆழமானது. விடுதலை அடைதல் அதற்கும் அப்பால் ஆனது. அதாவது நீங்கள் அனுபவிப்பவர் என்று உணரும் போதுதான் பகவத்கீதை 'நாஸ்தி புத்தி -ரயுக்தஸ்ய  ந சாயுக்தஸ்ய  பாவனா, ந சாபாவயத: சா'ந்தி - ரசா'ந் தஸ்ய குத: ஸுகம்.'(பகவத் கீதை, அத்தியாயம் 2, வரி 66)   உங்கள் தனிப்பட்ட மனம் உங்கள் ஆழ்மனதில் இருக்கும்  இந்த பிரபஞ்ச எண்ணத்தோடு   ஒன்றாக இல்லாதவரை, உங்களால் புத்திக்கூர்மையையோ அல்லது சுய உணர்ச்சிகளின் தெளிவையோ, அதன் எளிய தன்மையையோ அடைய முடியாது.

கே:  ஒருவருக்கு குருவுடன்  நேரடி தொடர்பு இருக்கும் போது கோவில்களுக்கு செல்வது அவசியமா?

குருதேவ்: கோவில்களுக்கு செல்வது என்பது  கலாசார  மற்றும்  சமூக  நிகழ்வு.  நிச்சயமாக அங்கு ஆன்மீக சுவையும் இருக்கிறது. ஆனால் அதுவே அடிப்படை இல்லை. நீங்கள்  வீட்டில் இருந்த படியே கோவிலை உணர முடியும்.

நம் பண்பாட்டையும், பாரம்பர்யத்தையும் உயிரோட்டத்தோடு வைத்துக்கொள்ளவும், நம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், மனதில்  ஒரு புனிதமான எண்ணம் உருவாக்க நாம் அவ்வப்போது ஆன்மீக யாத்திரை மற்றும் கோவில்களுக்கு  செல்லலாம். அங்கு தான் கடவுளை  தேட  முடியும் என்பதற்காக அல்ல, நம் மரபுகளை  உயிரோட்டத்தோடு வைத்துக் கொள்ள. அதனால் தான்  பல கொண்டாட்டங்கள், மற்றும் யாத்திரைகள் மக்களை ஒன்று சேர்க்க வைக்கப்படுகிறது. அது ஒரு சமூக காரணத்துக்காகவே. நீங்கள் உங்கள் வீட்டில் தியானத்தை செய்து கொண்டு, மற்றும் பஜனைகளை  பாடிக்கொண்டு இருக்கலாம்.   ஆனால் இங்கு ஆஷ்ரமம்  வந்து நாம் ஒன்றாக  தியானம் செய்து, மற்றும் பஜன்  பாடும் போது ஒரு கூட்டு உணர்வு  உருவாகிறது.  உங்கள்  கூட்டு  ஆற்றல் அதிகரிக்கிறது.  அது  ஒரு வித்தியாசமான சுவை. அதே சமயம்  யாராவது என்னிடம், 'வீட்டில், தியானம் செய்யலாமா?' என்றால்  நிச்சயம் சரி என்பேன்.  நீங்கள்  வீட்டிலும் தியானம் செய்ய வேண்டும், சிலநேரம் இங்கு வந்தும்  தியானம் செய்ய வேண்டும். அது போல் தான்  கோவில்களுக்கும்  இது பொருந்தும்.

கே: ஒலி   அதிர்வுகளைப்  பற்றியும், அது எப்படி நம் எண்ணங்களை  இயக்குகிறது என்பது பற்றியும் நீங்கள்  கூறவேண்டும்? அதாவது  நாம் தியானம் செய்யும் போது எப்படி மந்திரத்தை எடுத்துக் கொள்கிறோம்.

குருதேவ்:  ஆம்! அது வேலை செய்கிறது! அவ்வளவு தான்! எப்படி வேலை செய்கிறது, அது நமக்கு தெரியாது. பாருங்கள் இப்போது பல பொருட்களில் உணர்கருவிகள் உள்ளன.  நீங்கள் அதை தொடும் போது, வெளிச்சம் வருகிறது. நீங்கள் தொடுவதன்  மூலம் பூட்டுகளை திறக்க முடியும். நீங்கள் தொடுவதன் மூலம் உங்கள் தொலைபேசியை வேலை செய்ய வைக்க முடியும். உங்கள் கணிப்பொறி இப்படித்தான் வேலை செய்கிறது. இவையெல்லாம் ஒரு சிறு தொடுதலின் மூலம் நடக்கிறது இல்லையா? எனவே நம் ஐந்து புலன்களும் - ஸ்பரிசம், வாசனை சுவை, பார்வை  மற்றும் ஒலி இவையெல்லாம்  மின்காந்த அதிர்வுகள் தவிர வேறில்லை.

அறிவியலால இதை நன்றாக விளக்க முடியும். 

கே: குருதேவ், நான் உங்கள் கடல் போன்ற பக்தர்களுக்கு நடுவில் ஒரு சிறு புள்ளி போல் உணர்கிறேன். இருப்பினும் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள், என் தேவைகள்  உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். என்னிடம் உள்ள 'நான்' என்ற அகந்தை தான், நான் உங்களுக்கு சிறப்பானவன் என்ற எண்ணத்தை உருவாக்குகிறதோ?   

குருதேவ்: இல்லை. நீங்கள் நினைப்பது சரி தான். நீங்கள் சிறப்பானவராகத் தான் உணர வேண்டும். அதனால் தான் – அனுபமா (அற்புதமான, இணையற்ற),அட்விதியா (தனிப்பட்ட, மறு நொடி இல்லாத) அப்ரமேய (கணிக்கமுடியாத,ஒப்பற்ற). இவைதான் ஆத்ம குணங்கள். ஆன்மா ஈடு இணை  இல்லாதது. எனவே நீங்கள் உங்களைப் பற்றி சிறப்பாக  எண்ணிக்கொள்ளலாம். ஆனால் எந்த கோரிக்கைகளும் வைக்க வேண்டாம். உங்கள் மனதில் அது உணர்வுகளாக இருக்கும் வரை நீங்களும் பாதுகாப்பான  நிலையில்  உள்ளீர்கள், மற்றவர்களும் பாதுகாப்பான நிலையில்  இருப்பார்கள். ஆனால் நீங்கள்,' நான் சிறப்பானவன், எனக்கு அதற்குரிய சலுகைகளை வழங்குங்கள்,' என்றால் அது மிகவும் கடினம். நீங்கள்  உங்களை  சிறப்பானவராக உணர வேண்டும் என்பதே என் விருப்பம்.   

கே: சில சமயத்தில் நாம் எதற்கு மிகவும் பயப்படுகிறோமோ, அதுவே நம்மை விடுவிக்கும் என்றால் பிறகு எதற்கு பயம் என்ற ஒன்றை கடவுள் நமக்கு கொடுத்தார்? பயம் கொள்வதற்கு தேவையே இல்லையே?   

குருதேவ்: பயம்  என்பது  அன்பு தலைகீழாக இருப்பது தான். எங்கு அன்பு  இருக்கிறதோ அங்கு  சிறிதளவு பயமும் இருக்கும். அறிவு, வைராக்கியம், ஞானம் - இவையெல்லாம் பயத்தை அன்பாக  மாற்ற உதவுகிறது. அன்பு இப்போது இணைப்பாக, பந்தமாக மாறுகிறதோ பயம் தோன்றுகிறது. எனவே வைராக்கியம் மற்றும் ஞானத்தின் மூலம் அன்பை அதன் தூய  தன்மையில் வைத்திருக்க முடியும்.

கே:  ஏன் ஆன்மீக வாழ்க்கை சில நேரங்களில் மிகவும் கடினமாகவும்,பிரயத்தனம் மிக்கதாகவும் இருக்கிறது? சில சமயங்களில் நான் அறியாமையோடு  இருந்தபோது வாழ்க்கை மிகவும் எளிதாக இருந்தது போல் உணர்கிறேன்? 

குருதேவ்: ஆன்மீகம் கடினமானதா (சிரிக்கிறார்) யார் கூறுகிறார்கள்? அது கடினமாக இருந்தால், உங்களால் எப்படி  சிரிக்க முடியும். இதற்கு  முன்னால்  நீங்கள்  பகுத்தறியும் உணர்வு அற்று இருந்தீர்கள். இப்போது உணரத்தொடங்கி விட்டீர்கள், அவ்வளவு தான். நீங்கள்   ஒன்றும் உணராத நிலையில் இருக்கும் போது,எதுவுமே பெரியதாக இருப்பதில்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் சாதாரணமாகவே பார்ப்பீர்கள். நீங்கள் அனைத்தையும் உணரத் தொடங்கிய பின்னர், உங்கள் துணி போன்ற மனது வெள்ளையாக, தூய்மையாக இருக்கும் போது, ஒரு சிறு கறை பட்டால் கூட பெரியதாக உணரும்,அவ்வளவு தான்.  ஆன்மீகம்   உங்களுக்கு ஒரு போதும் துன்பத்தை அளிக்காது. 'ஹேயம் துக்கம் அனாகதம்'. இதுவே  யோகத்தின்  கொள்கை, குறிக்கோள்; யோகத்தின் குறிக்கோளே வரப்போகும் துன்பத்தை தடுப்பதற்குத் தான்.     

கே:  உலக வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டால் தான் ஆன்மீக பாதையில் கவனம் வருமா?  

குருதேவ்: இல்லை. நீங்கள் கவனம் செலுத்த தோற்க வேண்டியதில்லை. அப்படி ஒரு சங்கல்பத்தை உங்கள் மனத்தில் கொள்ளாதீர்கள். அது அவசியமில்லாத ஒன்று. 

கே:  நீங்கள் தயாள  குணம் உள்ளவர். நீங்கள் என் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி   விட்டீர்கள். ஆனால் நான் உங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை பொறுப்புகளை இன்னும் முடிக்காமல் உள்ளேன். நீங்கள் அதற்காக என்னை தண்டிப்பீர்களா அல்லது  என் விருப்பங்களை நிறைவு செய்வீர்களா?   

குருதேவ்: (சிரிப்பு) நான் இப்போது எதற்காக  அதை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் அதை யோசிக்கும் நிலையிலேயே விட்டு விடுகிறேன். நீங்கள் புதியதாக எதையேனும் விரும்பும் முன், உங்கள் பொறுப்புகளை  நிறைவேற்றி விடுங்கள். நான் உங்களை மேலும் பேராசை காரராக்க விரும்பவில்லை. இல்லையென்றால் நீங்கள் மிகவும் பேராசை கொண்டு விடுவீர்கள். உங்கள் எண்ணங்கள் எளிதாக  நிறைவேறுகிறது என்று உணரும் போது, நீங்கள் பெரிய அளவில்  விருப்பங்கொள்ள  வேண்டும், உங்களுக்காக மட்டும் அல்ல.  இந்த நாட்டுக்கு, இந்த உலகுக்கு மற்றும் மனித நேயத்துக்கு ஏதாவது ஆசைப்படுங்கள். உங்கள் ஆசைகள் பெரியதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று இருந்து, அது மக்களுக்கு அறிவை வளர்க்கும் என்றால் அதுவே அர்த்தமுள்ளதாகும். அப்போது தான்  நீங்கள்  உயர்கிறீர்கள், வளர்கிறீர்கள்.  

வேதாந்த ஞானம் ஆயிரம் மக்களை அடைய வேண்டும், யோகா பல ஆயிரம் மக்களை சென்று அடைய வேண்டும்' என்று சங்கல்பம்  எடுக்க வேண்டும். உங்களுக்குள்ளே இத்தகைய   ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையில் நீங்கள் ஆசையை பயிரிட  முடியாது, ஆனால் இது தான் ஆசைக்கு சரியான வழியாகும்.   

கே: எங்கு எப்போது பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்கள் (இதன் பொருள் 'ஒளி தூண்', ஒரு புனிதமான சிவனின் தெய்வீகக்கொவில்) நடைமுறைக்கு வந்தது? தயை கூர்ந்து  விளக்குங்கள்.

குருதேவ்:  ஒவ்வொரு ஜ்யோதிர் லிங்கமும் அது வந்ததற்கு பின்னால்  ஒவ்வொரு கதை இருக்கிறது. அதன் ஒவ்வொன்றிற்கும்  ஸ்தல புராணம் (உள்ளூர் நாட்டுப்புற அல்லது புராணங்களில்)   இருக்கிறது. உதாரணமாக, இராமர் இராமேஸ்வரம்  சென்று ஜ்யோதிர்   லிங்கத்தை நிறுவி அங்கு சிவபெருமானை வழிபட்டார். நோக்கம் என்னவென்றால் பக்தி என்ற நூலைக்கொண்டு இந்திய மக்கள்  அனைவரையும் இணைக்க வேண்டும்  என்பது தான். இந்தியாவில் உள்ள  பல மக்களும் பலமொழிகள் பேசுகிறார்கள். காசியில் (இப்போது வாரனாசி) வேறு மொழி உள்ளது,ராமேஸ்வரத்தில் வேறு மொழி உள்ளது. பண்டைய  காலத்தில், மக்கள் ராமேஸ்வரம் சென்று, பிறகு யாத்திரையாக காசி சென்று, பிறகு புனித  கங்கையில் நீராடி, அந்த கங்கை நீரை காசி வழியாக இராமேஸ்வரம் கொண்டு வந்து, அங்குள்ள  ஜ்யோதிர் லிங்கத்திற்கு  வழங்கிவிட்டு,  பிறகு  அங்கிருந்து  பிரசாதத்தை  எடுத்துக்கொண்டு  காசி விஸ்வநாதர் கோவில் செல்ல வேண்டும் என்று  கூறுவார்கள். பழங்கால முறையான  இதன் உட்பொருள்  என்னவென்றால், இந்தச்செயல் மூலம் தேசிய  ஒற்றுமை (நாட்டின் பல்வேறு  இடங்களில் உள்ள இந்த புனித இடங்களை தரிசிப்பதன்  மூலம்) உணர்வு  உருவாக்கத் தான். சிவபெருமான் நீங்கள்  அளிக்கும் புனித நீரை விரும்புகிறார் என்று அர்த்தமல்ல! அதை   வைத்துக்கொண்டு சிவபெருமான் என்ன  செய்யப்போகிறார்? இந்த படைப்பின் எல்லா  நீரும் அவருடையதே. 

கங்கையின் புனித நீரை காசி முதல் இராமேஸ்வரம் வரை எடுத்து செல்வதில் ஒரு பொருளும் இல்லை, சிவபெருமானுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை. ஆனால் நாட்டிற்கு இதனால் ஒரு முக்கியத்துவம் உள்ளது.

மக்கள்  நாட்டின் பல  இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் போது, ஒருவருக்கு ஒருவர் இடையில் ஒரு நட்புணர்வு  உருவாகிறது. தென் இந்தியாவில் உள்ள மக்கள் யாத்திரை என்று வட இந்தியாவில்  அமர்நாத் கோவிலுக்கு செல்கிறார்கள்.

இந்த புனித யாத்திரை, தெற்கில் கன்னியாகுமரி முதல் வடக்கில்  காஷ்மீர் வரை மக்களை இணைக்கும் ஒரு பாலமாக அமைகிறது. நாம் புனித எண்ணத்தோடும், தூய்மையோடும் ஒரு செயலை செய்யும் போது, நம் முழு உள்ளுணர்வும் மலர்வதை உணரலாம். அதனால் தான் இந்த பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்கமும் ஒரே இடத்திலோ  அல்லது மாநிலத்திலோ இல்லை. சில வடக்கில், தெற்கிலும்,மேற்கிலும் - எல்லா இடங்களிலும் பரவலாக இருந்ததது. அன்றைய நாட்களில், எல்லா இடங்களும் பயணம் செய்ய  மிகவும் கடினமாக  இருந்தது. ஒருவர் அந்த கோவில்களுக்கு  செல்ல அடர்ந்த காடுகள், ஆபத்தான பள்ளத்தாக்குகள், நகர இடிபாடுகள் அல்லது   அதிக பனி படர்ந்த   மலைகள்  வழியாக செல்ல வேண்டியிருந்தது. உதாரணமாக, கேதார்நாத் கோவில்  ஹிமாலய மலைத்தொடர்பின்  உள்ளே ஆழமான பகுதியில் உள்ளது. இந்த வகையில்,பல்வேறு பகுதிகளில் சிவபெருமானுக்கு பல  புனித யாத்திரை கோவில்களை உருவாக்குவதன் மூலம், அந்நாட்களில் புனித முனிவர்களும் ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்கினர்.

மேலும்,' தத்ரோபஜக்மூர்  புவனம் புனான மகானுபாவ  முனயஹ்ச -சிஷ்யாஹ்  பிரயேன தீர்த்தபிகமப தேசைஹ்  ஸ்வயம் ஹி திர்தானி புனந்தி சந்தஹ' - ஸ்ரீமத் பாகவதம் (காண்டம்  1, அத்தியாயம் 10, வரிகள் 8) . அதாவது எங்கு எல்லாம்  புனிதமான சந்நியாசிகள் அமர்கிறார்களோ, அந்த இடமே ஒரு  புனித   யாத்திரைக்கான  இடமாகும் என்று பொருள். பல புனித துறவிகள் இந்த புனித இடங்களுக்கு வந்து, தியானம், தவம் செய்து இருக்கின்றனர். அதனால் இந்த இடங்களின் புனித் தன்மையும் புகழும் காலப்போக்கில்  வளர்ந்து வந்தது. எனினும், இப்போது பார்த்தால் அங்கு அசுத்தமாகவும், சரியான நிர்வாகம் இல்லாமலும் உள்ளன. அவ்விடங்கள்  சரியாக   நிர்வகிக்கப்படாமல் உள்ளது. இப்போதெல்லாம் பாலும், மேலும் பல பிரசாதங்களும் வீணான முறையில், ஒரு பக்தியோ, நம்பிக்கையோ   இல்லாமல் அலட்சியமாக  வழங்கப்படுகின்றது. அவசர  அவசரமாக வெறும் சடங்குகள் மற்றும் வழிபாடுகளை செய்கிறார்கள். இது பூஜை அல்ல.

வழிபாடு என்பது ஒருமனதோடு, பக்தியோடு தியான  நிலையில் செய்வதே உண்மையான பூஜை ஆகும். நீங்கள்  பூஜையை உங்கள் சொந்த விருப்பங்கள் அல்லது ஆசைகள் அல்லது பண சிக்கல்கள் பூர்த்தி செய்ய என்று அவைகளை நிறைவேற்ற செய்தால், நீங்கள் உங்களையே முட்டாளாக்கி கொள்கிறீர்கள்.அப்படி செய்யக்கூடாது, ஒரு பக்தி உணர்வோடு தான் செய்ய வேண்டும். ருத்ரம் (சிவபெருமானைப் புகழ்ந்து பாடும் சில வரிகள்) சொல்லப்படும் போதும், சிவலிங்கம் நீராட்டப்படும் போதும், நாம் கண்களை மூடி நம்மில் மூழ்கிட தியானம் செய்ய வேண்டும். அதுவே அர்த்தமுள்ளதாகும். நாம் இந்த நித்ய அகண்ட பரந்த பிரபஞ்சத்தில் உள்ள சிவ தத்துவத்தை, எங்கும் வியாபித்துள்ள பேரின்ப சிதா காஸத்தை உணர வேண்டும்.