எப்பொழுது நீங்கள் அமைதியாக இருப்பீர்கள்?

12 – அக்டோபர் – 2012, பெங்களுரு இந்தியா 

இவ்வுலகில் அடிப்படையில் இரண்டு வகையான மனப்போக்குள்ள  மக்கள் உள்ளனர்.  ஒரு வகையான மக்கள், உலகில் உள்ள  அனைத்து  மக்களுமே இயல்பாகவே கெட்டவர்கள் என்று நினைக்கிறார்கள். மற்ற மக்கள், அனைவருமே ஆழமாக பார்த்தால் நல்லவர்கள் தான்,அவர்கள் செயல்கள் சிலநேரம் தீயதாக இருப்பினும், அது வெளிப்புறத்தில் மட்டுமே. எனவே முதல் வகையான மக்கள் ஒருவரையும் நம்புவதில்லை, இரண்டாவது வகை மக்கள் ஒருவரையும் சந்தேகிப்பதில்லை. என்ன ஒரு வேற்றுமை?


இயல்பாகவே அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்தால், உங்கள்  சந்தேகம்  மேற் போக்கானது. நீங்கள் ஆழமாக  ஒருவரையும் சந்தேகிப்பதில்லை, ஏனெனில் நீங்கள்  அனைவரும் நல்ல குணம் உடையவர்கள் என்று  நம்புகிறார்கள். மற்ற வகை, நம்பிக்கை யற்றவர்கள் ஏனெனில் அவர்கள் இயல்பாகவே அனைவரும் தீயவர்கள் என்று  நம்புகிறார்கள். மற்றவர்கள் வெளியே நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளே தீயவர்கள் என்று நினைப்பார். எனவே இந்த எண்ணம் அவர்களை யாரையும் நம்பவிடாமல் தடுத்து விடுகிறது. 

நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா? ஒரு சம்பவத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற வருடம் நான் ஒரு பெரிய சத்சங்கத்திற்கு வடக்கு நகரங்களுக்கு   சென்றிருந்தேன்,அங்கு ஒரு நபர்  மேடை மீது ஏறி, சுற்ற ஆரம்பித்தார். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர்களும், மற்றவர்களும், 'இந்த நபர் ஒரு மோசமான கிரிமினல், எப்படி குருதேவிடம் அருகில் நிற்கிறார்' என்றனர்.

அந்த நபரும், 'என்னால் ஒரு தொலைபேசி அழைப்பில்  எந்த விமானத்தையும் நிறுத்த முடியும்.' எந்த ஒரு டாக்ஸி  டிரைவரையும் கீழே இறங்கச்சொல்லி, டாக்ஸியை எடுத்து  சென்று விடுவாராம். பல கிரிமினல் குற்றங்கள் அவர் மீது பதிவாகியுள்ளன. அப்படிப்பட்ட நபர்   மேடையில் வந்ததும்  அனைவரும், 'குருதேவ் எப்படி இவரை  மட்டும் அனுமதித்தார்' என்று   வியந்தனர். வாழும் கலை பயிற்சி பெறாத அதே நபர், மூன்று மாதத்திற்கு பிறகு சிவராத்திரி அன்று  இங்கு பெங்களூர் ஆஷ்ரம் வந்து, என் படத்ததை பாக்கெட்டில் இருந்து எடுத்து,' குருதேவ், உங்கள் படத்தை என் பாக்கெட்டில் வைத்ததிலிருந்து என் வேலையை  என்னால் செய்ய  முடியவில்லை. மேலும் என்ன  நடக்கிறது?  என்ன செய்தீர்கள்? என் வாழ்க்கை தலை கீழாக மாறிவிட்டது. இங்கு இவ்வளவு மகிழ்ச்சி  இருக்கிறது. எதை நான் என் நாட்டிற்கு, ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்ல வேண்டும். இந்த நபர் தான் பலரால் சமூக விரோத செயல் புரிபவராக நினைக்கப்பட்டவர். பத்திரிகையாளர்கள் கூட பயந்தார்கள். பொதுவாக அவர்கள் யாருக்கும் பயப்படமாட்டார்கள். அவர்களும் கூட, இந்த நபரை பார்த்து ரொம்ப பயங்கரமான ஆள் என்றார்கள். நாம் எந்த கண்ணோட்டத்தில் உலகை பார்க்கிறோமோ அதே போல்தான் இந்த உலகமும் இருக்கும்.

சமஸ்க்ரிதத்தில் ஒரு பழமொழி  உண்டு,'யதா திருஷ்டி, ததா ஸ்ருஷ்டி'. இந்த உலகை நீங்கள்    எப்படி  பார்க்கிறீர்களோ  அப்படித் தான் உங்களுக்கு இவ்வுலகம் அமையும். இந்த உலக மக்கள் உங்கள் அனுபவத்தில் மோசமானவர்களாக தெரிந்தால், அது போல் தான் உங்களுக்கு நடக்கும். உலக மக்களை  நல்லவர்களாக பார்த்தால்,மோசமான குற்றவாளியின் உள்ளேகூட ஒரு நல்ல  மனிதன் ஒளிந்து  இருப்பதை பார்க்கலாம். உங்களால் அதை உணரமுடியும். நான் சமீபத்தில்   தென்அமெரிக்க நாட்டில் பல சிறைச்சாலைகளை சென்று பார்த்தேன். அங்கு பல பயங்கரமான மக்கள் இருப்ப்பார்கள் தெரியுமா? நான் அங்கு சென்ற போது மக்களின்  கண்களில்  அன்பும், ஆனந்தக் கண்ணீரும் நிரம்பி இருப்பதை பார்த்தேன். அவர்கள்,' நாங்கள் வெளியே இருந்தபோது சுதந்திரம் இல்லை, இப்போது சிறையின் உள்ளே சுதந்திரமாக மகிழ்ச்சியாக உள்ளோம் என்றனர்.  
எனவே மக்களை  நல்லவர்கள், கெட்டவர்கள் என்று கணிக்காமல் இருக்கவேண்டும். உலகில்  பரம்பொருள் தான் பல விதத்தில்,மக்களாக, வண்ணங்களாக, மனங்களாக  தோன்றியிருக்கிறது.ஒரே ஒளிதான் எங்கும் இருக்கிறது. நாம் உணர்ந்து கொண்டால், நம் மனதில் ஆழ்ந்த அமைதியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் பெருகும். மக்கள் தீயவர்கள் என்று எண்ண ஆரம்பித்தால், பிறகு அனைவரையுமே சந்தேகம் கொள்ள வேண்டி வரும். பக்தி சிரத்தை உள்ள ஒருவரை கூட, இவர் வெளியே இப்படி இருக்கிறார், உள்ளே எப்படியோ? சுயநலமாக, பொறாமை, கோபம் கொண்டு இருக்க வேண்டும் என்று நமக்கு தோன்றும்   

அனைத்து எதிர்மறை பண்புகளையும் மற்ற நபர் மேல் கூறி விடுகிறோம். அப்படித் தான் நமக்குள்ள  நம்பிக்கைக்கு பதில் சந்தேகம் மட்டுமே தோன்றும். நான் கூறுவது புரிகிறதா?  ஞானம் என்பது  எதிர்மறை பண்பு இருந்தாலும் அது வெளிப்புறத்தில் தான் என்று தெரிந்து   கொள்வது. அறியாமை என்பது எதிர்மறை எண்ணங்கள் ஒருவரின் பண்பே என்று எண்ணி   விடுவது. மக்கள் உண்மையிலேயே கெட்டவர்கள் என்று எண்ணுவது அறியாமை.

யாரோ ஒருவர், எப்படி மக்கள் மனதில் நாம் பயத்தை உருவாக்குகிறோம் என்று ஒரு நல்ல ஆவணப்படம் எடுத்துள்ளார். நம்மை அறியாமல், நாம் 'ஏ, எச்சரிக்கையாக இரு என்று பயத்தை உருவாக்குகிறோம். ஒரு பிளாஸ்டிக் அல்லது  பாலிதீன்  பையை  உபயோகிக்கவோ அல்லது ஏதாவது ஒரு சின்ன விஷயத்திற்க்கோ எச்சரிக்கை  எச்சரிக்கை உள்ளது. பொம்மைகளிலும் கூட, 'ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உபயோகிக்க கூடாது உயிருக்கு ஆபத்து' என்று உள்ளது. பொம்மைகள் முதல் பாத்திரங்கங்கள் வரை நாம் மக்களை எச்சரிக்கிறோம். இந்த எச்சரிக்கை மக்கள் மனதில் ஒரு கவலையையும்,பயத்தையும் உருவாக்குகிறது.எச்சரிக்கையாக இருக்ககூடாது என்று நான் கூறவில்லை,ஆனால் அதிகமாக இருந்தால் நம் உள்ளுணர்வை அது முழுவதுமாக மறைத்து விடுகிறது.

எவரையுமே நம்பாத சிலரும் உள்ளனர். அவர்கள் தங்கள்  கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் இவர்கள் யார் மீதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். பல குழந்தைகள்  தங்கள் பெற்றோர்களை நம்புவது இல்லை.ஊடகச் செய்திகளில் எல்லாவற்றையும் கேட்டு குழந்தைகள் மனதில் அது பதிந்து தனக்கே அது நடப்பது போல் உணர்கிறார்கள். 'என் தந்தை என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார், பலாத்காரம் செய்ய முயல்கிறார்' என்று நினைக்கின்றனர். மற்றொரு நாள் ஒரு மனிதர் என்னிடம் மிகவும் மனமுடைந்த நிலையில் அழுதுகொண்டே  அவரது மகள் மூன்று வயதிலிருந்தே என் தந்தை என்னை தகாத இடத்தில் தொட முயல்கிறார் என்று அவரை சந்தேகப்பட தொடங்கியுள்ளாள்.இதை அவள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அவளது தந்தையையே சந்தேகப்பட தொடங்கியுள்ளாள்.

அவளது தந்தையோ, நான் சத்தியமாக கனவில் கூட இவ்வாறு நினைக்கவில்லை, எப்படி நான் அதை செய்வேன்' என்று கணவனும்,மனைவியும் தங்கள் மகள் சந்தேகப்படுவதை   நினைத்து மிகவும்  வருந்தினர். பின் ஒரு உளவியல் நிபுணரிடம் சென்ற போது, குழந்தை தான் தொலைகாட்சியில் பார்த்ததையே தனக்கு நேரில் நடந்தது போல் கூறுகிறது. நம் ஆழ்மனது பற்றி நாம் முழுமையாக அறியாமல் இந்த அரைகுறை ஞானத்தோடு நாம் விளையாடுகிறோம். அதனால் தான் நம் மனது, ஆழ்நிலை உணர்வு அதன் நடவடிக்கை மற்றும் அதன் தன்மை   பற்றி அறியவேண்டும்.   

 'ஓ! என் பதினோரு  வயது குழந்தை என்னை சந்தேகப்படுகிறாள்' என்றால் ஒரு தந்தை எப்படி    வருத்தமுற்று இருப்பார், எண்ணிப் பாருங்கள். அதே போல் நெருக்கமான கணவன்   மனைவிக்குள் சந்தேகம், கணவன் வீட்டிற்க்கு வரும்போது, வழியில் பூ வாங்கிவர, அவன்   மனைவியோ,வழியில் யாரைப் பார்த்தீர்கள்? எதற்கு பூ கொண்டு வந்தீர்கள், என்ன செய்தீர்கள்? என்று கேட்டு சந்தேகப்பட்டுகிறாள். இது நடக்கிறது இல்லையா? 

யாரோ ஒரு  இந்தியப் பெண்மணி, அமெரிக்காவில் வாழும் ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். மனைவி தொலைபேசியில் அழைக்கும் போது கணவன் கார்  ஓட்டிக்கொண்டு இருக்க  அவரின் காரில் GPS  வழிகாட்டும் கருவியில் ஒரு பெண்ணின் குரல், 'இன்னும் அரை கிலோமீட்டரில் இடது பக்கம் திரும்பவும்'  என்று வழி காட்டிக் கொண்டு இருக்க, அதை கேட்ட மனைவி, 'உங்களுக்கு வழி கூறும் அந்தப் பெண் யார்?'என்று கேட்க அதற்கு அவர், 'நான் எப்போதும் அவள் கூறுவது போல் தான் செல்வேன்' என்று GPS கருவியை பற்றி கூறினார். அடுத்த சில நாட்களில் எப்போதெல்லாம் அவர் மனைவி கூப்பிட்டாலும்,அந்த GPS கருவியின்  பெண் குரலே கேட்பதால், 'நீங்கள் பொய் கூறுகிறீர்கள். யார் அந்தப் பெண்' என்று அவரை சந்தேகப்பட ஆரம்பித்தாள். பிறகு ஒரு நாள் அவள் அவருக்கு விவாகரத்து பத்திரம் அனுப்பி விட்டாள். அவர் என்னிடம் வந்து, 'குருதேவ்,GPS கருவியினால் எனக்கு விவாகரத்து ஆகிவிடும்  போல் உள்ளது' அவள், ஒவ்வொரு முறை என்னை அழைக்கும் போதும் இந்த GPS  கருவி   வழி கூறுவதால் என் மனைவி  யாரோ ஒரு பெண் என் அருகிலேயே இருந்து எனக்கு வழி   கூறுவதாக நினைத்து வேறு ஒரு பெண்ணுடன், எனக்கு தொடர்பு உள்ளதாக நினைக்கிறாள்.' 

இந்தியாவில் GPS கருவி இல்லாததாலும்,மேலும் GPSல் பெண் குரலே இருப்பதால் எனக்கு   இந்த நிலை. எனவே திருமணமாகி ஒரு வருடமே ஆன அவர், அவரின் மனைவி, மக்கள் அனைவரும் இயல்பாகவே மோசமானவர்கள் என்ற எண்ணம் கொண்டதால், விவாகரத்து  பெரும்படி ஆகிவிட்டது.  

எனக்கும்  கடந்த முப்பது வருடங்களாக இது போன்ற கேள்விகளை சந்திக்க வேண்டி இருந்தது, 'எங்கள் நாட்டிற்க்கு நீங்கள் ஏன் வரவேண்டும்?' என்று நான் ஏதாவது நாட்டிற்கு செல்லும் போது பலர் கேட்பதுண்டு. 'நான் ஏன் வரக்கூடாது?' என்று கேட்பேன். 'நீங்கள் ஒரு நல்ல திரைப்படம் பார்த்தால் என்ன செய்வீர்கள்? உடனே உங்கள் நண்பர்களை அழைத்து,'நான் ஒரு நல்ல திரைப்படம் பார்த்தேன். நீங்களும் அதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்' என்று கூறுவீர்கள் இல்லையா. இதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ உங்களுக்கு பணம் தருகிறார்களா என்ன? இல்லையே. உங்கள்  மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதை பரிமாரிகொள்கிறீர்கள்.  மக்கள் இதை புரிந்து கொள்வதே இல்லை. ஆரம்பத்தில் நான் ஏழு ஆண்டுகளுக்கு இந்த பயிற்சியை இலவசமாக நடத்திக் கொண்டு இருந்தேன். நான் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதற்காக எந்த பணமும் பெறவில்லை. எங்கேயும் எதுவும் பெறவில்லை. ஆனால் சந்தேகம் மக்களுக்கு மேலும் பெருகியது.இந்த பயிற்சியை இலவசமாக அளிக்கிறீர்கள் ,எதோ உள்நோக்கம் உள்ளது.  பிறகு ஆசிரியர்கள் வந்ததும்,அவர்கள் என்னிடம், 'குருதேவ், நாம் இலவசமாக அளிக்க முடியாது. முதலில் நாம் நம் செலவுகளை எப்படி சமாளிப்பது. இரண்டாவதாக மக்கள்  இலவசமாக   அளிப்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.' என்றனர். 'நீங்கள் வந்தாலாவது மக்கள்  அமர்கிறார்கள், நாங்கள் வந்து பயிற்சி அளிக்கும் போது அது நடப்பதில்லை.அதனால் நாம் கட்டணம் வேண்டும்' என்றனர். எனவே வாழும் கலையின் ஏழாவது அல்லது எட்டாவது   ஆண்டிலோ தான் கட்டணம் என்பதே ஆரம்பித்தது. இப்போது மக்கள், 'இப்போது அவர்களுக்கு பணம் வருகிறது, அதனால் அவர்கள் செய்கிறார்கள்' என்று எண்ணுகிறார்கள்.

மனம் தான்  இவ்வுலகில் அதிசயத்தக்க ஒன்று. ஒரு விதத்தில் கட்டணம் வைத்தது நல்லதாக போயிற்று. அதனால் பள்ளிகள் தொடங்கினோம்.நிறைய வேலைகள் நடந்தன. இன்று 203 இலவச பள்ளிகள், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றன. பல திட்டங்கள்   ஒன்றன் பின் ஒன்றாக உள்ளன 

இந்த ஆஷ்ரமமே ஒரு பெரிய  திட்டம் தான். நம் ஆஷ்ராமங்களை பராமரிப்பதே வெள்ளை யானைகளை பராமரிப்பது போல் ஒரு பெரிய விஷயம்.சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் இந்த ஆஷ்ரமங்கள் தான் ஆயிரகணக்கான மக்களுக்கு மன அமைதியும், நிம்மதியும், சாந்தியும் அளிக்கிறது. ஆரம்ப காலத்தில் ஆஷ்ரமம் ஆரம்பிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. பிறகு அவசியம் என்றதும் சரி என்றேன். நாம் மூன்று நாள்  தியான பயிற்சி அவசியமாகிறது. அப்போது நாங்கள் ஒவ்வொரு இடத்தையும் வாடகைக்கு எடுக்க வேண்டி இருந்தது. மக்கள் மனதின் அணுகு முறை புரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்சியமாக உள்ளது.  

ஆன்மீகத் தேடல் உள்ளவர் எல்லா மனிதர்களுமே கடவுளின்  ஒளி. அதனால் அவர்கள் தவறாக இருக்க முடியாது என்று நம்ப வேண்டும். கடவுளின்  படைப்பில் தவறான மனிதன் என்பதே   கிடையாது. நான் சொல்வதைக் கேளுங்கள்,மோசமான நபர் என்பதே இவ்வுலகில் இல்லவே   இல்லை. எல்லோருக்கும் உள்ளே ஒளி உள்ளது. அது சமயத்தில் வெளியே தெரியும், சிலநேரம் தெரியாமலும் இருக்கும். சில இடத்தில் மறைந்தும், சிலவற்றில் உறங்கியும்,சில  இடத்தில் தெரிந்தும் இருக்கும்.நீங்கள்  இயல்பாகவே அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்தால்,   உங்களுக்குள்ளே  அமைதியும்,  ஆன்மீகத்தன்மையும் வளரும். நல்ல குணங்கள் மலர்வதை பார்பீர்கள்.

ஆனால் மக்கள் இயல்பாகவே மோசமானவர்கள் என்று நினைத்தால், நம் ஆழ்மனதில் முதலில் பதிவது சந்தேகம் தான். பிறகு கோபம்,வெறுப்பு,பொறாமை,பேராசை மற்றும் மனவருத்தம் போன்ற தீய குணங்கள் உங்கள் மனதில் உருவாக ஆரம்பிக்கும். பிறகு நீங்கள் உங்களை மட்டுமல்ல, உங்களை சுற்றியுள்ள அனைவரையும் வெறுக்க ஆரம்பித்து விடுவீர்கள். மற்றவரை வெறுப்பதும், உங்களையே வெறுப்பதும் இரண்டுமே தான். நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா?  யாரையேனும் வெறுத்தால், நம் அழமனதின் உள்ளே நாம் நம்மையே  வெறுப்பது போல்தான். நீங்கள்  நம்பிக்கையின் பக்கம் செல்கிறீர்களா அல்லது  சந்தேகத்தின் பக்கம் செல்கிறீர்களா என்று? நீங்கள் பிறரை வெறுக்கும் நிலையிலோ அல்லது உங்களையே வெறுக்கும் நிலையிலோ இருந்தால், நினைவில் கொள்ளுங்கள் இதுதான் உங்களை மாற்றி கொள்ளும் தருணம்'. அனைவரும் நல்லவர்களே என்று' நினைக்க வேண்டிய தருணம். 

சில நேரம் மக்கள்,' குருதேவ் ஏன் இந்த  குற்றவாளிகள் உங்களிடம் வருகிறார்கள்? நீங்கள்   தூய்மையின் மற்றும் நேர்மையின் வடிவம்,நீங்கள் ஏன் அவர்களை அனுமதிக்கிறீர்கள். என்று கேட்பதுண்டு.அதற்கு நான் 'என்னிடம் எல்லோரையும் அனுப்பி வையுங்கள், அவர்களுக்குள்ளே ஒரு நல்ல மனிதர் இருப்பது  எனக்குத் தெரியும். பகவத் கீதையிலும் கிருஷ்ணர்  'அனசுயா'   என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். மிகவும்  அழகான  வார்த்தை. அவர் அர்ஜுனரிடம், 'நான் உனக்கு மிகவும் மேன்மையான ஞானத்தை அளிக்கிறேன், ஏனெனில்  நீ அனசுயா. நீ மற்றவர்களிடம்  குறை  கண்டு பிடிப்பதில்லை. உன் கண்கள் தவறுகளை மட்டும் கண்டு மங்கவில்லை.  பொறாமையோடு இருக்கும் ஒருவருக்கு மற்றவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் தெரிவதில்லை. அப்படியே நல்ல குணங்களை அறிந்தாலும் அதிலும் ஏதாவது குறை  கண்டுபிடித்து திருப்தி அடைவார்கள். அவர்கள், 'ஓ! அந்த நபர் தவறு செய்துள்ளார் என்றால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்' என்பர். மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பது  பொறாமை.  


மக்கள்  இயல்பாக கெட்டவர்கள் என்ற எண்ணத்திலிருந்து இயல்பாகவே நல்லவர்கள் என்ற  மாற்றம் ஏற்பட வேண்டும்.எல்லோருமே நல்லவர்கள் தான், அப்படியே அவர்கள் தவறு   செய்தாலும், அது அறியாமையால் தான். இந்த மனப்பான்மை,மற்றவர்களையும் மேலும்   நம்மையுமே ஆழமாக புரிந்துகொள்ள உதவுகிறது.