இறப்பை வரையறுக்கத் தேவையில்லை. அது நிதர்சனமான நிகழ்வு.


பிரேசில். தெற்கு அமெரிக்கா, 31 ஆகஸ்ட் 2012   மாலை நேர சத்சங்கம்
 
உங்களில் எவ்வளவு பேர், தீங்கு எதுவும் செய்யாமலேயே விரோதிகளை சம்பாதித்து விட்டதாக நினைக்கிறீர்கள்? மக்கள் உங்கள் விரோதிகளாகிறார்கள்.
நீங்கள் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை, எந்த தவறும் செய்யவில்லை, இருந்தும் அவர்கள் விரோதிகளாகிறார்கள். அது போன்றே சிலருக்கு நீங்கள் எந்த சகாயமும் செய்யவில்லை ஆனால் அவர்கள் உங்களுடைய மிக நல்ல நண்பர்களானார்கள். இல்லையா? உங்களில் எவ்வளவு பேருக்கு இந்த அனுபவம் உள்ளது? பாருங்க, இது தான் அது, மக்கள், புரியாத சில கர்ம வினையினாலும், சில புரியாத சட்டத்தினாலும் நண்பர்களாகவும், விரோதிகளாகவும் ஆகிறார்கள். புரியாத சில சட்டத்தினால், திடீரென நண்பர்கள் விரோதிகளாகிறார்கள், விரோதிகள் நல்ல நண்பர்களாகிறார்கள். ஆகவே, எல்லா நண்பர்களையும், விரோதிகளையும் ஒரே கூடையில் (அளவுகோலில்) போட்டுவிட்டு சுதந்திரமாகிவிடுங்கள்.
உங்கள் மனதை தொந்திரவு செய்வதெல்லாம் உங்கள் நண்பர்கள் அல்லது விரோதிகள். இவ்வாறு இல்லையா? நீங்கள் தியானத்தில் அமரும் போது, அவர்கள் அனைவரையும், உங்கள் நண்பர்கள், விரோதிகள், ஒவ்வொருவரையும் ஒதுக்கி வைத்து, அவர்களை ஒரு புறம் வைத்துவிட்டு, அமர்ந்து, ஓய்வெடுத்து, சுதந்திரமாகிவிடுங்கள்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இது சரியில்லையா? உங்கள் மனது திருப்தியடைந்திருக்கும் போது, அது அமைதியாக, சந்தோஷமாக இருக்கும் போது, அதற்கு ஒரு புதுமாதிரியான சக்தி கிடைக்கிறது–அதாவது, ஆசீர்வதிக்கும் சக்தி. நீங்கள் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கும்போது, உங்களால் மற்றவர்களை ஆசீர்வதிக்க முடிகிறது.மனம் அல்லல்பட்டு, உங்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கும் போது, நீங்கள் உங்கள் ஆசிகளை வழங்க முடியாது. உங்கள் ஆசிகளை வழங்கினாலும், அவ்வளவு நன்றாக வேலை செய்வதில்லை. ஆகவே, மறுபடியும், நாம் திருப்தியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் திருப்தியாக இருக்கும்போது, உங்கள் ஆசைகளை மட்டுமல்ல, மற்றவர்களின் ஆசைகளைக் கூட நீங்கள் திருப்தி செய்ய முடியும்.
கே: தயை பற்றி கூறுங்கள்.?
குருதேவ்: வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் அத்தியவசியமானவைகள்:
1. அதிக ஆர்வம்
2.
விட்டேத்தியான தன்மை மேலும்
3.
தயை.
 அதிக ஆர்வம் மூச்சை உள்ளிழுப்பது போன்றது, விட்டேத்தியாக இருப்பது மூச்சை வெளிவிடுவது போன்றது.“நான் மூச்சை உள்ளிழுக்க மட்டும்தான் ஆசைபடுகிறேன், நான் மூச்சை வெளிவிட ஆசைப்படவில்லை” என்று யாரும் சொல்ல முடியாது. முடியாதது! ஆகவே, மூச்சுவிடுவது அத்தியாவசியம், அதுவே வாழ்க்கையிலுள்ளவைகளுக்கு அதிக ஆர்வம்.அப்புறம், விட்டேத்தியாக இருக்கவும் கூட அவசியம் இருக்கிறது. விட்டேத்தியாக இருப்பதென்பது, சும்மா எல்லாவற்றையும் அதன் போக்கில் விட்டுவிடுவது. விட்டேத்தியாக இருப்பது உங்களுக்கு நிம்மதியைத் தருகிறது, அப்போது தயை உங்கள் குணமாகிறது. ஆகவே, நீங்கள் வேலை செய்யும்போது, அதிக ஆர்வம் உங்களுக்கு இருக்க வேண்டும், நீங்கள் ஓய்வெடுக்கும் போது விட்டேத்தியாக இருக்க வேண்டும் மேலும் தயை உங்கள் இயற்கை குணமாக வேண்டும். அவ்வளவுதான் அது !
கே: தியானம், ஓய்வின் அவசியம் என்ன?
குருதேவ்: நீங்கள் ஓய்வெடுக்கும்போது, உங்கள் மனம் விரிவடைகிறது.நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது என்ன நடக்கிறதென்று கவனித்திருக்கிறீர்களா? உங்களின் உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று விரிவடைய ஆரம்பிக்கிறது. நீங்கள் சந்தோஷமில்லாமல் இருக்கும் போது என்ன நடக்கிறது? உங்களின் உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று சுருங்க ஆரம்பிக்கிறது.ஆக, நீங்கள் ஓய்வெடுக்கும் போது, உடல், பின்னர் மனம் மலர ஆரம்பிக்கிறது.
கே: பரிவர்தனை பற்றி தயவு செய்து பேசுங்கள்.
குருதேவ்: பரிவர்தனை இயற்கையானது.மனதின் உயர்ந்த நிலையில்,பரிவர்தனை யதார்த்தமானது. ஒருவர் சுரணையற்று இருக்கும்போது தான் பரிவர்தனை இருக்காது.மக்கள், அடிக்கடி கெட்டவைகளை பரிவர்தனை செய்கிறார்கள். நீங்கள் யாரையாவது பழி கூறினால், உடனே அவர்களும் உங்களை பழி கூறத்தயாராக இருக்கிறார்கள்.நீங்கள் யாரையாவது புண்படுத்தினால், அவர்கள் உங்களை உடனே புண்படுத்துகிறார்கள், ஆனால் அதுவும் நல்லதற்காக அல்ல. நீங்கள் ஏதாவது நல்லது செய்தால், எல்லோருமே அந்த நல்ல தனத்தை திருப்பி செய்ய வேண்டுமென நினைப்பதில்லை.மனம் மிக உயர்ந்த நிலையில் இருக்கும்போது தான் அது  நடக்கிறது. ,
கே: நான் பிரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும், நானும் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுத்து வெவ்வேறு விதமான வாழ்க்கைகளை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தை எங்களில் ஒருவரிடம் இருக்க வேண்டுமென்றிருக்கிறோம். இந்த நிலைமையில், எது செய்வதற்கு புத்திசாலித் தனமான ஒன்று?
குருதேவ்: குழந்தை இரு விதமான வழிகளுக்கும் வெளிப்படுத்தப்பட வேண்டும், தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவில்லையெனில், அது குழந்தைக்கு நிச்சயமாக ஒரு வேதனையே. தாய், தந்தையர் இருவருமே மனதில் ஞாபகம் வைதிருக்க வேண்டியது என்னவெனில்,அவர்கள் குழந்தைக்கு எதிரில் ஒருவரையொருவர் குறை சொல்லக் கூடாதென்பதை. குழந்தையை பெற்றோர் ஒருவருக்கு எதிராக நிறுத்துவது நல்லதல்ல. அது ஒரு மிகவும் குறுகிய மனப்பான்மை.
கே: இறப்பு என்னவென்று எங்களுக்குச் சொல்லுங்கள்?
குருதேவ்: இறப்பை வரையறுக்கத் தேவையில்லை. அது நிதர்சனமான நிகழ்வு. நாம் பிறந்துள்ளோம், நாம் ஒரு நாள் இறக்கப் போகிறோம்.நாம் இவ்வுலகில் வந்தபோது, முதலில் நாம் செய்தது நீண்ட மூச்சை எடுத்ததே, பிறகு அழ ஆரம்பித்தோம். கடைசியாக நாம் செய்யப்போவது மூச்சை விட்டு, பிறகு மற்றவர்கள் அழுவார்கள்.மற்றவர்களை நாம் அழவைக்க வில்லையெனில், நாம் நல்ல வாழ்க்கை வாழவில்லை. ஆத்மா, முழு திருப்தியுடன், நிறைய அன்பு, அறிவு முதிர்ச்சியுடன் உடலை விடும் போது அது திரும்பும் கட்டாயத்தில் இல்லை. அது தானாகவே திரும்பலாம்.
கே: நான் சரியான முடிவு எடுக்கிறேனா என்று எவ்வாறு எனக்குத் தெரியும்?
குருதேவ்: நீ ஒரு முடிவு செய்யும் போது, எங்கோ உனக்கு ஒரு உணர்வு கூறும், “ஆம், இது சரியானது” என்பது கேட்கும்.நீ ஒன்று தெரிந்து கொள்ள வேண்டியது, நீ தவறான முடிவு எடுத்தால் கூட அது உன்னை எப்போதும் வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லுகிறது. நீ இன்னும் உறுதியாகிறாய், உள்ளூர ஆழத்தில் எங்கோ நீ ஒரு பாடம் கற்றுக் கொள்கிறாய். ஆகையால், கவலைப்படாதே.
கே: சில சமயம் என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களின் எதிர்பார்ப்புக்களுடனான முரண்பாடு என்னை சந்தோஷமடையச் செய்கிறது. அப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்: ஆமாம், நீ இரண்டையும் சமனாக்க வேண்டும். உன்னுடைய சந்தோஷத்திற்கும், மற்றவர்கள் உன்னிடம் எதிர்பார்ப்பதற்கும் இடையேயான சமன்பாட்டை நீ செய்ய வேண்டும். அது மிகவும் இக்கட்டானது ஆனால் நீ நிச்சயம் முயற்சி செய்ய வேண்டும்.
கே: மனிதர்களிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு என்னவென்று எங்களுக்குச் சொல்லுங்கள்?
குருதேவ்: உடலுக்கு குறைபாடு உள்ளது, மனதிற்கு குறைபாடு உள்ளது ஆனால் ஆத்மாவிற்கு குறைபாடில்லை.நீ உடலென்று நினைக்கும்போது உனக்கு குறைபாடு உள்ளது. அப்போது நீ அந்த அளவிற்குத் தான் செய்யமுடியும். நீ மனதென்று நினைக்கும் போது,மனதிற்கும் சில குறை பாடுண்டு. ஆனால் உன் அன்பிற்கு குறைபாடில்லை. உன் உணர்விற்குக் குறைபாடில்லை. பாருங்க, ஒரு சிறிய செல் ஃபோனை வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் உலகம் முழுவதையும் அடையலாம். நீங்கள் எத்தனை ஃபோன்களையும் ஒரு ‘கால்’ மூலம் அடையலாம், இல்லையா? அது போலவே, நம்முடைய செல் ஃபோனைக் கண்டுபிடித்த நம் மனம் செல்ஃபோனை விட அதிக சக்தி வாய்ந்தது. நீங்கள் அதை திறந்து மட்டுமே வைக்க வேண்டும்.
கே: அன்புள்ள குருதேவ், சில சமயங்களில் நான் தெனாவட்டாக இருப்பதாக உணருகிறேன். எவ்வாறு இந்தப்போக்கிலிருந்து நான் விடுபடுவேன். நான் ஆர்ட் ஆஃப் லிவிங் வகுப்புகளை மேற்கொண்டு செய்து என் பயிற்சிகளை செய்துள்ளேன்.
குருதேவ்: நீ ஒன்றை கவனிக்க வேண்டும், முன்னரே கூட நீ தெனாவட்டாக இருந்தாய் ஆனால் நீ அதை அறியாதிருந்தாய். ஆனால் இப்போது நீ தெனாவட்டாக இருக்கிறாய் என்றாவது அறிந்தவனாக இருக்கிறாய். “ஓ,இது இவ்வாறுள்ளது” என்ற ப்ரக்ஞை உள்ளது. இந்த பிரக்ஞை இருப்பது நல்லது. இது அதிலிருந்து வெளிவர முதல் படி. இரண்டாவது படி, உன்னுடைய வாழ்வைப்பற்றிய விசாலமான பார்வையை நீ வைத்திருக்க வேண்டியதே. நீ அறிவு பெறுவதில் அதிகமாக தீவிரமாக ஆக ஆக, உன் மனம் விளையாடும் இந்த சிறு விளையாட்டுகள் குழந்தை விளையாடுவது போன்றதே. இதை நீ பார்க்கும்போது, நீ அதை சட்டை செய்ய மாட்டாய், ஆகவே நீ அதை ஏற்றுக் கொண்டு அப்பால் சென்று விடுகிறாய். மனம் ஒரு குழந்தை விளையாடுவது போல இருப்பதை நீ பார்க்கும்போது, நீ அதை ஒரு பெரிய பின்னோட்டத்திலிருந்து, பெரிய கோணத்தில் பார்ப்பாய்.