காயத்ரி மந்திரத்தின் சிறப்பு..



2 - ஆகஸ்ட், 2012

பெங்களுரு - இந்தியா
  


ஆதி சங்கராசார்யார், எல்லா ஆன்ம ஞான விஷயங்களையும் கூறிவிட்டு, இறுதியாக "ஒ சிவா,நீயே நான் நானே நீ! சிவோஹம்! (நான் சிவம்) என்கிறார். 

ஆத்மாத்வம்- ஆத்மன் என்பது சிவம்.மற்றும் நமது அறிவு என்பது சக்தியின் வடிவம். அறிவு மூன்று வகைப்படும்.சாத்விக், ராஜசிக், மற்றும் தமசிக் - அதாவது சாத்வீக குணம், ராஜத குணம், மற்றும் தமோகுணம் ஆகியவற்றால் நமது அறிவு ஆளப்படுதலே ஆகும். சுருக்கமாக, ஒருவனது ஆத்மா சிவம்,அறிவு சக்தியாகும். வாழ்கை அறிவின் வழியே நிர்ணயிக்கப்படுகிறது. தமோகுணம் உடைய  அறிவு, காளி ஆகி  சிவனை அதாவது ஆத்மாவை வெற்றிகொண்டு அழிவுப்பாதையில் நடத்திச் செல்கிறது. சாத்விக் குணமுடைய அறிவு சரஸ்வதி , ஞானம், தெளிவான சிந்தனை ஆகியவற்றுடன் கூடியதாகிறது. ராஜச்விக் குணமானது லக்ஷ்மி ரூபமாகி செல்வம் செழிப்பு ஆகிவற்றுடன் கூடியதாகிறது. புத்தி எப்படி செயல்படுகிறதோ அதன் படியே வாழ்கைப் பாதை செல்கிறது.


எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ள மனிதர்களை நாம் காண்கிறோம். பிறரிடம் குறை காண்பது, ஒருவர் சிறப்பாக செயல்பட்டாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பது, இவை தமசிக் இயல்புகளைக் குறிக்கும். இவை அழிவுக்கான இயல்புகளாகும். ராஜச்விக் குணம் என்பது எப்போதும் 'இது வேண்டும் அது வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கும் இயல்புடயதாகும்.இந்த இயல்புடையவர்கள் எல்லாவற்றையும் அடைவதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இதற்கு தாமும் செயல்பட்டு, பிறரையும் வேலை வாங்கி கொண்டிருப்பர். சாத்விக் குணமுடையவர்கள் திருப்தியோடும் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் மற்றவர்களை ஆதரித்து உதவிக்கொண்டும், அவர்களுக்கு மகிழ்வூட்டி கொண்டும் ஞானத்துடன் வாழ்வர். 

ஆதிசக்தியின் மூலாதார வடிவமான காயத்ரி என்பது இந்த மூன்று குணங்களையும் தாண்டி செல்லும் வல்லமையுடையது. அதனால் தான் நாம் அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட தெய்வீக
சக்தி, நம்மை வழிநடத்த வேண்டும் என்று காயத்ரி மந்திரத்தை ஜபிககிறோம். 

முதலில் தமோ குணத்தில் இருந்து வெளி வர , ரஜோ குணமான செயல்களில் ஈடுபடுகிறோம். பின்னர் செயல்பாடுகளிருந்து வெளிவந்து சத்விக் குணத்தை அடைகிறோம். அதையும் தாண்டி, ஆழ்ந்த விழிப்புணர்வையும் பேரின்பத்தையும் அடைகிறோம். இதுவே காயத்ரி மந்திரம்,குறைகள், குற்றங்கள் அனைத்திலிருந்தும் விடுவித்து, அனைத்துத் துன்பங்களையும் நீக்கும் வல்லமை யுள்ளது. அதை ஜெபிக்கும் போது தடைகள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறோம். 

இது ஒரு நச்சு வட்டம். தமோ குணத்தில் இருந்து ரஜோ குணம் எனும் வட்டத்திற்கு சுழன்று வருகிறோம். பின்னர் ரஜோ குணத்தில் இருந்து சத் குணத்திற்கு செல்ல முயல்கிறோம் அந்த முயற்சியில் சில சமயம் மீண்டும் ரஜோ குணத்திற்கே வந்து விடுகிறோம். ரஜோ குணத்துடன் அதிக செயல்பாடுகளில் ஈடுபடும் போது தமோ குணத்திற்கே மீண்டும் வந்து விடுகிறோம். ஆக, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து  முயற்சிக்கிறோம். இதற்குக் காரணம் "நான்" என்கிற அகந்தை. இது மிக நுண்ணியமான ஒன்று. இந்த அகந்தையை ஒடுக்கவே காயத்ரி மந்திரம் கூறுகிறோம். "தியோ யோ  ந பிரஜாதயாத் " இதன் பொருள்' அறிவை நல்வழியில் நடத்தி வழிகாட்டவும்" என்பதாகும்.காயத்ரி மந்திரத்தின் மூலம் நமது அறிவு, குற்றங்கள், குறைகள், எதிர்மறை எண்ணங்கள் இவற்றிலிருந்து விடுபட்டு "பிராமதேஜோ" பிரம்மனை போல் ஒளி வீசுவதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.  

இந்த பிரார்த்தனை மூலம் நம் அனைவரின் அறிவும் நல்வழியில் நடத்தப்பட்டு ஒளியுடன் இருக்கட்டும் என்று வேண்டுகிறோம். யாராவது ஒருவர் எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தால் அவருடன் இருக்கும் நமக்கும் அத்தகைய எண்ணங்கள் பரவக்கூடும் அல்லவா? எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள்? கை தூக்குங்கள் ! ஆம் ! எதிர்மறை எண்ணங்களுடைய ஒருவருடன் இரவும் பகலும் இருந்தால் நமக்கும் பரபரப்பும், அமைதி இன்மையும், ஏற்படும். அனைத்து மக்களுக்கும் அறிவு எதிர்மறை எண்ணங்களிருந்து விடுபட்டு நல்வழியில் செலுத்தப்பட  வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். 'பார்கோ தேவஸ்ய தீமஹி ' அதாவது தீயவை அனைத்தும் அழிக்கப் படட்டும் ' தெய்வீக சக்தியிடம் நமது அனைத்து குற்றங்களும் அழிக்கப்பட்டு அறிவு நல்வழியில் செலுத்தப்படட்டும் என்று பிரார்த்திக்கிறோம். இது மிக அழகானது அல்லவா? 

ஒவ்வொரு நாளும் நல்ல விஷயங்கள் மட்டுமே நமது அறிவை அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். "சப்கோ சன்மதி தே பகவான் ' என்று- ஒவ்வொருவருக்கும் நல்அறிவு, நேர்மையான சிந்தனைகள் ஏற்பட்டு இறையருளின் ஒளி வீசவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகும். என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறோமோ அது நிகழ ஆரம்பிக்கும். 

கே: முகம்மது நபி அவர்கள் உருவமற்ற இறைவழிபாட்டை பின்பற்றுபவரா? ஆம் என்றால், பின் எதற்காக விக்கிரக ஆராதனை (சிலை வழிபாடு) துவங்கியது ?

குருதேவ் : ஒவ்வொருவருமே சகுன உபாசனையிலிருந்து நிர்குண உபாசனைக்கு முன்னேற வேண்டும். அதாவது  இறைவனை உருவமாக வழிபடுவதிலிருந்து உருவமற்றதாக வழிபடும் நிலைக்கு முன்னேற வேண்டும். 
காபா கல்லும் வழிபாடு செய்யப்படுகின்றது  இல்லையா?  அது வெறும் சகுன உபாசனை போன்றது. அவர்கள் காபா கல்லினை ஏழு முறை சுற்றி வருகிறார்கள். அனைவரும் செய்கிறார்கள், அருகே சென்று முத்தமிடுகிறார்கள். இது இறைவனை உருவமாக வழிபாடு செய்வது தான். வேறொன்றுமில்லை. இது சிவ தத்துவத்தின்  இருப்பிடம் போன்றது.
இது நம் புராணங்களில் இருக்கின்றது இல்லையா? வாமன அவதாரத்தில் பகவான் விஷ்ணு எடுத்து வைத்த மூன்று அடிகளில் முதல் அடி கயாவில் வைக்கப்பட்டது. நீங்கள் கயாவிற்கு சென்றால் அங்கே ஒரு இடத்தில் ஒரு காலடியைப் பார்க்கலாம். அங்கே ஒரு சிலை இருக்கின்றது.
இரண்டாவது காலடி மெக்காவில் வைக்கப்பட்டது. முகம்மது நபி அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே அது வழிபாட்டு தலமாக  இருந்தது. முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பிருந்தே அது சிறந்த யாத்திரிகத் தலமாக இருந்தது. அங்கே நிறைய சிலைகள் இருந்தன. நபி அவர்கள் அத்தனை சிலைகள் எதற்கு, ஒன்று மட்டுமே இருக்கட்டும் என்று நினைத்து ஒரே ஒரு கல்லை மட்டும் வழிபாட்டிற்கென வைத்தார். அது மிகவும் பழமையான வழிபாட்டுத் தலமாகும். எனவே தான், சகுன உபாசனையா அல்லது நிர்குண உபாசனையா என்பதற்கு பகவான் கிருஷ்ணன் சொல்கிறார்!!! 
உடல் மீது பற்றுள்ள மக்களுக்கு நேரடியாக உருவமற்ற இறைவழிபாடு என்பது அதிக கவலையையும் துன்பங்களையும் தருகின்றது. இது உண்மை என்பதை நாம் பார்த்திருக்கின்றோம். நாம் ஜுடைசம் பார்க்கும்போது அவர்கள் அதிக அளவு துன்பமும் துயரமும் அடைந்தனர். இந்த பாதை சரியானது அல்லது தவறானது என்று சொல்லவில்லை.அருவ வழிபாடு என்னும் பாதை மிகவும் கடினமானது. அந்த பாதையில் நடப்பவர்களுக்கு வலியை அளிக்கக் கூடியது. 
உலகில் யூத மதத்தினர்களுக்கு இவ்வாறு நிகழ்ந்ததை நாம் பார்த்திருக்கின்றோம்.           இஸ்லாமியர்களுக்கும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இஸ்லாம் மதத்தில் ஆரம்பத்திலிருந்தே இது நடந்து கொண்டிருக்கின்றது. கிறிஸ்த்துவ மதத்தைப் பார்க்கும்போது கஷ்டங்கள் இருந்தன ஆனால் அதிக அளவில் இல்லை. புத்த மதம், ஜைன மதம் , ஷிண்டோ போன்ற மதங்களின் பாதைகள் மிகுந்த சிரமமின்றி சரளமாக இருந்தன. மக்கள் முஹம்மது காலத்தில் எதிர் கொண்டதை போன்று அதிக அளவு துன்பங்கள்  இல்லை. 
முஹம்மது நபிகளின் காலத்தில் அவரே மிக அதிக அளவு கஷ்டங்களை எதிர்கொள்ள  வேண்டியிருந்தது. அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களது பாதைகள் துயரங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் நிறைந்திருந்தன. அவர்கள் இறுதி வரை போராட வேண்டியிருந்தது.  சீக்கியர்களும் ஓரளவிற்கு இதனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சீக்கியர்களும் உருவமற்ற இறைவனையே வழிபட்டனர்.
உங்களுக்கு இரண்டுமே தேவை. வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் இறைவனின் உருவ வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு முக்தி (விடுதலை) வேண்டுமென்றால் இறைவனின் உருவமில்லாத அருவ நிலையை வழிபட்டு தியானம் செய்யுங்கள். இறைவனின்  நிர்குண, சகுன நிலைகள் இரண்டுமே போற்றப்பட வேண்டும். இதுவே ஏற்ற  வழியாகும். வேதங்களின்  கருத்துப்படி,  ஒருவர் துன்பங்கள் துயரங்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் பூஜைகளும் சடங்குகளும் செய்ய வேண்டும் ஆனந்தம் அடைய வேண்டுமென்றால் ஒருவன் இறைவனின் உருவமற்ற தன்மையை தியானம் செய்ய வேண்டும். எனவே இந்த உலகிலும், அடுத்த உலகிலும் நாம் ஸ்ரேயா (உண்மையானது பயன் தரவல்லது) மற்றும்  ப்ரேயா (மனதிற்கு இதமானது) ஆகிய  இரண்டையும் போற்றி தியானம்  செய்யவேண்டும்.