மௌனம்...

மௌனத்தில் இருப்பது மிகவும் பயனுள்ளது. வருடத்தில் இரண்டு முறையாவது மௌனத்தில் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நல்லது.

மௌனம் நமது பேச்சை சுத்தப் படுத்துகிறது. பெரும்பாலும் நாம் பேசும்போது என்ன நடக்கிறது, கவனித்தீர்களா? நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். நீங்கள் பேசும்பொழுது மற்றவர்களிடம் என்ன பாதிப்பு ஏற்படுகிறது - நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். பல நேரங்களில், நாம் இதை கவனிப்பதற்கு கவலைப்படுவதில்லை, நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். நாம் என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை எல்லாவற்றையும் சொல்லி விட்டு ஓய்வாக இருக்க விரும்புகிறோம். இல்லை, மற்றவர்களின் மீது உங்கள் பேச்சு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

பகவத்கீதையில் ஒரு வாக்கியம் உண்டு,‘அணுத்வேக- கரம் வாக்கியம் சத்யம் பிரியா-ஹிதம் சயத். மனதில் இரைச்சலை உருவாக்காத வார்த்தைகள் எதுவோ அதுவே உண்மை. அக்கறையோடும் இதமாகவும் உள்ள உண்மை, அப்படிப்பட்ட வார்த்தைகளையே பேச வேண்டும். அது பேச்சின் தவம் என்று அழைக்கபடுகிறது.

அதே போல உடலுக்கு, மிதமான உணவு, மிதமான உடற்பயிற்சி, மிதமான வேலை, மிதமான ஒய்வு.உடலுக்கு இது ஒரு உடற்பயிற்சி, ஒரு தபஸ் (எளிமையான நடவடிக்கை).மற்றும் பேச்சின் தபஸ் எதுவெனில், மற்றவர்களின் மனதை காயப்படுத்தாத பேச்சு ஆகும்.

பாருங்கள், சில நேரங்களில் நாம் சரி என்று நினைக்கிறோம் மற்றும் அது சரியாக இருக்கலாம்; நீங்கள் பேசுவது உண்மையாகக் கூட இருக்கலாம், அது அக்கறை உள்ளதாகவும் மற்றவர்களுக்கு நல்லாதாகவும் இருக்கலாம், ஆனால் அது இனிமையாக இல்லாமலும், மற்றவர்களை காயப் படுத்துவதாகவும் இருந்தால், அது முழுமையானதல்ல.

ஆகையால் இது ஒரு மிகப் பெரிய திறமை, இது சுலபமான செயல் அல்ல - மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருப்பது மற்றும் வலியை கொடுக்காமல் இருப்பது. உங்களுக்கு தெரியுமா, நீங்கள் சில வார்த்தைகளை யாரோ ஒருவரிடம் பேசி விடுகிறீர்கள், அவர் நாள் முழுவதும் அழுகிறார் அல்லது வருத்தமாக இருக்கிறார், இது நல்லது அல்ல.ஆகையால், இனிமையான, உண்மையான, அக்கறையுள்ள வார்த்தைகளையே பேசுங்கள். அதே நேரத்தில், இனிமையான பொய்களை பேச வேண்டாம். உண்மையுள்ள, அக்கறையான, இனிமையான மற்றும் மற்றவர்களை காயப் படுத்தாத வார்த்தைகளை பேச வேண்டும். உங்களின் இனிமையற்ற வார்த்தைகளால் மற்றவர்களின் மனதை மற்றும் இதயத்தை நசுக்க வேண்டாம்.

நீங்கள் சொல்லலாம், "நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை, மற்றும் காயப் படுத்தும் வார்த்தைகைள் என்னுடைய வாய்மூலம் வெளிப்பட்டு விடுகிறது, நான் என்ன செய்வது?" மௌனத்தில் இருங்கள். இது உங்களுக்கு உதவும். நீங்கள் மௌனத்தில் இருங்கள். தியானம் மற்றும் மௌனம் இவை எல்லாம் உங்களுக்கு உதவி செய்யும். சில நேரங்களில், இவைகளுக்கு பதிலாக, அவை வந்தால், அவை நடந்து விட்டால், அதை பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது பிறகு நீங்கள் மன்னிப்பு கேளுங்கள்.

ஆகையால், அது நல்லது, நீங்கள் மௌனத்திற்கு செல்லும் பொது, நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். என்னுடைய எண்ணம், வார்த்தை மற்றும் செயல் மூலம் மற்றவர்களை காயபடுத்துமாறு ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னித்தருளவும். அது முழுவதுமாக நம்மை தலைகுனிவிலிருந்து மேலே உயர்த்தும். இது அர்த்தமுள்ளதா? ஆமாம்!

பாருங்கள், வாழ்கையில் எல்லாமே ரோஜாவாக இருக்கும் என நினைக்க வேண்டாம், வாழ்க்கையில் முற்களும் இருக்கும். மகிழ்ச்சியற்ற விசயங்களும் இருக்கும், அவைகள் வரும் போகும். நாம் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், வெறுமனே செல்ல வேண்டும்.