ஜென்மாஷ்டமி - ஒரு புதிய கோணம்.




ஜென்மாஷ்டமி என்பது கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாட்டம். அஷ்டமி என்பது முக்யத்துவம் வாய்ந்தது; ஏனெனில்,அது  மெய்ம்மையின் காணக்கூடிய பொருட்கூறு உலகிற்கும்மற்றும் காணமுடியாத ஆன்மீக நிலைக்கும் இடையே உள்ள பண்புக்கூறுகளின் சமநிலையை  எடுத்துக்காட்டுவதாகும்.

கிருஷ்ணர் பிறந்த அஷ்டமிஆன்மீக மற்றும் பொருட்கூறு உலகில் கிருஷ்ணரின் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.கிருஷ்ணர் ஒரு நல்லாசிரியர், அதே சமயம் முழுமையான அரசியல்வாதி.ஒரு வகையில் யோகேஸ்வரன் (ஒவ்வொரு யோகியும் அடைய விரும்பும் யோகநிலைகளின் தலைவன்) மற்றொரு வகையில் குறும்புக்காரத்  திருடன்!  துறவிகளை எல்லாம் விட சீலனான கிருஷ்ணன் முழு குறும்புக்காரன் என்பது அவரது தனிப்பண்பு. முற்றிலும் மாறுபட்ட இரு வேறு வகையான திறன்களின் மையப்புள்ளியாக உள்ள கிருஷ்ணரின் பண்பியபுல்களை ஆழம் காண்பது கடினம். முற்றும் துறந்த துறவியின் நிலை பற்றி பொருட்கூறு உலகினுக்குத் தெரிந்திராது, அது போல் செல்வந்தர், அரசியல்வாதிமற்றும் அரசர்களின் நிலையை ஆன்மீக உலகு அறிந்திராதுஆனால் கிருஷ்ணர் த்வாரகதீஸ்வரனும் யோகேஸ்வரனும் ஆவார்.கிருஷ்ணர் கற்பித்தவை தற்காலத்திற்கு மிக ஏற்றதாகும். அதாவது, அவை, ஒரு மனிதன் முற்றிலும் பொருளியலில் மூழ்கி விடாமலும் அதே சமயம் அனைத்தையும் துறந்து விடாமலும் இருக்கும் நிலையை அடைய செய்கிறதுசக்தியனைத்தையும் இழந்துவிட்ட ஒருவனை,மன அழுத்த நிலையினின்றும் வெளிக்கொணர்ந்து தூண்டி,மையமான நிலையும் ஆற்றலும் கொண்டவனாகச் செய்கிறது. முழு  ஈடுபாட்டுடன் கூடிய பக்தியும், செயல்திறனும் அடைய கிருஷ்ணர் நமக்குக் கற்பிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட ஆனால் இணைய கூடிய  பண்பியல்புகளை நாம் மனதினுள் வாங்கி, வாழ்வில் செயல்படுத்துவதற்கே கோகுலாஷ்டமியைக் கொண்டாடுகிறோம்.

ஆகவே, உற்றவழியில் ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுவது என்பது, நம்மை இரு வேறு நிலைக்கு தயார் படுத்திக்கொள்வதேஆகும். இப்ப்ரபஞ்சந்தில் பொறுப்பான மனித பிறவியாகவும் அதே சமயம் அனைத்துக்கும் மேற்பட்ட அசைக்கமுடியாத பிரம்மன் எனவும் உணருவதே ஆகும். வாழ்வில் ஓரளவு துறவு நிலையும் ஓரளவு செயல்திறனும்  உடையவர்களாக இருப்பதே, ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் சிறப்பு ஆகும்.