கலை என்றால் என்ன?


13 - ஜூலை - பாட் ஆண்டோகாஸ்ட் - ஜெர்மனி.

 
 
 
 
நீங்கள் ஏன்  இருட்டை  பற்றி பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ? 
இவ்வுலகம்  முழுவதும்  இருளால்   சூழப்பட்டு  உள்ளது. இருண்ட சக்தி,  இருள் நிலை.  இன்று  நாம்  வெளிச்சம்  என்று   பார்ப்பது ஒரு சிறிய புள்ளியே  என்று விஞ்ஞானிகள்  கூறுகிறார்கள். தண்ணீர் குடுவையில் உள்ள ஒரு நீர்க்குமிழி போன்றதே. அதில் நீர் தான் உண்மையானது. நீர் குமிழி சற்று நேரமே  வரும்.   
 
சூரியன்  தான்  நம்   சக்திக்கு  மூல ஆற்றல். ஆனால்  விஞ்ஞானிகள்,  அந்த சூரியனை அதை சுற்றியுள்ள இருண்ட சக்தியே அதை வட்டமாகவும் உறுதியாகவும் பிடித்துக்கொள்கிறது.    இருண்ட பொருளும், இருண்ட சக்தியும் சூரியனை விட   மில்லியன் மடங்கு  சூரியனை விட சக்தி  வாய்ந்தது. ஒரு நீர் குடுவையில்  உள்ள காற்று குமிழி,  நீரின்  மூலக்கூறுகளின் அழுத்தத்தாலும், காற்று சிக்கி இருப்பதேயாகும். நீர், காற்றை விட மிகவும்  கனமாகவும் சக்தி  வாய்ந்ததாகவும்  இருக்கும். இந்த பிரபஞ்சம் முழுவதும் சக்தியால் ஆனது. அதை நீங்கள் பார்க்க முடியாது, தெரியவும் தெரியாது. அதில் ஒன்றுமே இல்லை என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.விஞ்ஞானிகள் கூறும் கருப்பு ஓட்டைகள், சூரியனையே கூட  விழுங்கிவிடும்.  

நம் பூமியும்,  சூரியனும் மற்றும் சூரிய மண்டலமும் இந்த கருப்பு ஓட்டைகள் இடையே நகர்ந்து, அவற்றிடம் இருந்து தப்பித்து வருகின்றன. இந்த பிரபஞ்சத்தில் நிறைய கருப்பு ஓட்டைகள்  உள்ளன.  சூரியன் ஏதாவது ஒரு கருப்பு ஓட்டையின் அருகில் வந்தால் கூட, அது  கருப்பு ஓட்டையால் இழுக்கப்பட்டு,  பிறகு அந்த சூரியன் எங்கு மறைந்து விடும் என்று யாருமே  அறியமுடியாது.   இந்த பிரபஞ்சம் முழுவதும் சக்தியால் நிறைந்துள்ளது, அதைப்பார்க்க முடியாது.  அதனால் தான் அதற்க்கு இருண்ட சக்தி அல்லது இருண்ட பொருள் என்று பெயர். 

கே:  கலை என்றால் என்ன?  கவிதை எங்கு இருந்து வருகிறது,  அது என்ன செய்யும்? 

குருதேவ்:  ஒ!   நீங்கள் எதை   பாராட்டுகிறீர்களோ   அதுவே கலையாகும்.நீங்கள் எங்கேனும் ஒரு கல் குவியலை கண்டால்  அது வெறும் கல்குவியல் என்று நினைப்பீர்கள். அதையே சற்று வரிசையாக அடுக்கினால்,அதை பாராட்ட தொடங்குவீர்கள்.   பிறகு அதுவே கலையாகும். 

ஒரு சிறிய  காகிதத்தின்   மீது  நீங்கள்   சில  வண்ணங்களை  தெளித்து,  பிறகு நீங்கள் அதை ஒரு ஓவியமாக பாராட்டுவீர்கள். அது கலையாகிவிடும்.  அது  ஒரு  அர்த்தத்தை தருகிறது இல்லையா?   

கவிதை,  என்பது மனதின் ஒரு நுட்பமான நிலையிலிருந்து எழுகிறது.  உங்கள்  சுவாசம் ஒரு குறிப்பிட்ட தாளத்தில்  பாயும் போது, சில குறிப்பிட்ட நாடிகள் திறந்து கொள்ளும். அந்த  குறிப்பிட்ட நேரத்தில்  எதோ ஒன்று மனதில் தோன்றி அதை நீங்கள் எழுதுவீர்கள்.  வார்த்தைகள்  செய்யுளாகும். அதுவே ஒரு பரிசு.   கற்பனைத்திறன்  ஒரு  பரிசு. இது  உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் விதம். மனதை வெளிப்படுத்தும் விதம்.  அது பாராட்டப்படும் போது கலையாகிறது.  அது பாராட்டப்படாமல், வெறும் வார்த்தை உளறலாக இருந்தால் கலை அல்ல.  தற்போதைய நவீன கவிதைகளை  பாராட்ட புத்திசாலித்தனம் வேண்டியுள்ளது.  நீங்கள்  நவீன கவிதைகளை   படித்திருக்கிறீர்களா?  நான் உங்களுக்கு ஒன்று படிக்கிறேன். 

ஒரு இலை தரையில் சலசலக்கிறது. நீர் அதை கொண்டு செல்கிறது. அவ்வளவு தான்.( சிரிப்பு) .  அதை எழுதும் விதம்  - சலசலக்கிறது தரையில்; நீர் அதோடு கொண்டு செல்கிறது.
 
இதுவே கவிதை. இதற்கு பல அர்த்தங்கள் கொள்ளலாம். இலை தரையில் இருக்கலாம் அல்லது காற்றில் இருந்து தரையில் வந்திருக்கலாம். தரையில் இருந்தால் அது இறந்ததாகவும் கருதப்படலாம். தரையில் விழுந்தவுடன் அன்பு அதை கொண்டு சென்றதாக கருதலாம். - தண்ணீர்  அன்புக்கு ஒத்ததாகும். தண்ணீர்  அதனோடு கொண்டு செல்கிறது.  ஆமாம் ! அதாவது  ஒவ்வொரு ஆற்றொணா நேரத்திலும் ஒரு நம்பிக்கை உள்ளது.

எனவே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம். கவிதை அது போல் தான். சொற்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  நம் உணர்வுகளை பிரதிபலிக்கும்.   

கவிதை என்பது வார்த்தைகள் மறைமுகமாகவோ நேரடியாகவோ உணர்வுகளை வெளிப் படுத்துவது.   எனவே தான் அது கொஞ்சம் வெளிப்படையாகவும் கொஞ்சம் விசித்திரமாகவும் உள்ளது. ஒரு கவிஞர் கடவுளிடம்,' நீங்கள் தான் உலகை கட்டுப்படுத்துபவர். ஆனால் அதை கொஞ்சம் வெளிப்படையாக ஆகுங்கள்.' (சிரிப்பு) .

உலகை புரிந்து கொண்டவர்கள்   துறவிகளாகி விடுகிறார்கள். உலகின் கையில் நாம் உள்ளோம் என்று புரியாதவர்கள் போராடுகிறார்கள். எப்படி கூறினால் உங்களுக்கு  புரியும் இல்லையா?  யாராவது  உங்களை  பாராட்டினால்,  'ஒ,  அந்த மனிதர் நம்மை கவர முயற்சிக்கிறார்'  என்றும் அவர் பாராட்டவில்லை என்றால்,' பொறாமை' என்றும் நினைப்பீர்கள்.  அதே போல் நீங்கள பணக்காரராக இருந்தால்,' அவர்கள்  நான் பணக்காரன் என்பதால் என்னை  கவனிக்கிறார்கள். என் பணத்தில்தான் அவர்கள் குறி' என்று நினைப்பீர்கள்.இல்லை என்றால்,அவர்கள் கர்வமுள்ளவர்கள், பொறாமை  பிடித்தவர்கள்', என்று மனம் தான் எவ்வளவு  தந்திரங்கள் செய்கிறது. 

அதேபோல் சிலர்   தொழிற்சங்கம்  என்று  மன நிலையில் இருப்பார்? அப்படி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 'நான் யார் கூறுவதையும் கேட்க மாட்டேன்! எல்லோரும்  என்னை எதிர்க்கிறார்கள்.' என்ற   யார் உங்களை எதிர்க்கிறார்கள்?  மனம் ஒரு முழு குமிழி போல் அதை பெரிசாக்கும். அவர்கள் என்னை கட்டுப்படுத்துகிறார்கள், ஆதிக்கம் செலுத்துகிறார்கள், தொல்லை செய்கிறார்கள்  என்று பலவாறு  மனம்  யோசிக்கும்.  

மற்றொரு நாள் ஒருவர் என்னிடம் வந்து,' எல்லோரும் என்னை வேலையில்  தொல்லை செய்கிறார்கள்.' எப்படி உங்களை யாரவது தொல்லை செய்ய முடியும்.  நீங்கள் ஏதாவது தவறாக   செய்திருப்பீர்கள். எல்லோரும் என்னை வேலையில்  தொல்லை செய்கிறார்கள்.' - இது தான் தொழில் சங்க மனோபாவம். ஏனெனில் தன்னைப்பற்றி ஒருவரும் நன்றாக நினைப்பதில்லை. மற்றவர் மீது அதை வெளிப்படுத்துகிறார்கள்.  

'எல்லோரும் கெட்டவர்கள். எல்லோரும் என் பின்னாலேயே இருக்கிறார்கள்.!'  யார் உங்கள் பின் இருக்கிறார்கள்?  உங்களை தொல்லை செய்வதன் மூலமும் உங்களை தொந்திரவு செய்வதன் மூலமும் அவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? நீங்கள்  உங்களையே பரிதாப நிலைக்கு கொண்டு செல்கிறீர்கள். புரிகிறதா?
 
பல  நிறுவனங்களில், அந்த நிர்வாகம் இது போல் ஒரு மேலாளர்  இருப்பதால்  பாதிக்கப்படுகிறது. அவரின் அதிகாரத்தை வெளிப்படுத்த எல்லா விதமான  தந்திரங்களையும்  செய்கிறார்.  அவர் அமர்ந்திருக்கும்  மரத்தின்  கிளையையே வெட்டுகிறார் என்று புரியவில்லை.   இது போல் மக்கள் பலர் இருக்கிறார்கள்.  உங்களுக்கு  தெரியுமா  உலக  வங்கியில், இரண்டு ஆசிரியர்கள் நம் வாழும் கலையில் இருந்து சென்று  பயிற்சி அளித்தார்கள்.  இது போன்ற  பலவாறான செயல்கள் அங்கு பேசப்பட்டன இல்லையா? இப்போது அங்கு  மூன்றே  நாட்களில் ஒவ்வொரு நாளும் 3 மணி   நேரம்   என்ன ஒரு முழுமையான மாற்றம்.  இதை அவர்கள் தலைமைப்பயிற்சியில் ஒருங்கிணைத்து விட்டனர்-
 
மேலும்  அவர்கள்  ஆப்பிரிக்கா  மற்றும்   பல நாடுகளிலும், தலைவர்கள்  சுதர்ஷன கிரியாவை  கண்டிப்பாக செய்ய வேண்டும்  என்று கூறியுள்ள  நல்லார்.  அதனால்  நான் சிறிய சுதர்ஷன கிரியாவை அதில் இணைத்துள்ளேன். பெரிய கிரியா மிகவும் அதிகம் அதனால் தான் நான் சிறிய கிரியா போதும் என்றேன்.   அது  மிகவும் உதவி மக்களை விழிப்படைய  வைக்கிறது. இல்லை என்றால் பல  நாடுகளில் அவர்கள்  மற்றவர்களால் பாதிப்படைந்தது போல்   உணர்கிறார்கள்.
 
பாதிப்படைந்த மனப்பான்மை உலகத்தை வருத்துகிறது. அதனால் தான்  பல நாடுகள் ஏழ்மை  நிலையிலேயே உள்ளன. ஏனெனில்  மக்கள் ,'ஒ நான் பாதிக்கப்பட்டவன்' என்று நினைக்கிறார்கள்.  நீங்களே பாதிப்படைந்தது  போல் உணர்ந்தால், சக்தி இழந்து வலுவற்றவர்   போல் உணர்வீர்கள்.  

மகளிர் உரிமையும் இது போல் தான். மற்றவரிடம்  உரிமையை கேட்காதீர்கள். உங்களுக்கு இடம் இருக்கிறது, அந்த இடத்தை உங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளுங்கள்.  'எங்களுக்கு உரிமை வழங்குங்கள் ,' என்று  பிறரைக்கேட்காதீர்கள்.  பல பெண் ஆர்வலர்கள் கோபமாக உள்ளார்கள் இல்லையா?  அவர்கள் கோபமாகவும் இறுக்கமாகவும் உள்ளார்கள்.
 

அவர்களிடம் கோபமும் எதிர்க்கும் கிளர்ச்சி மனப்பான்மையும் உள்ளது, அது  எங்கும்  கொண்டு  செல்லாது.  நான் எல்லோரும்  அப்படி  என்று  கூறவில்லை,  சிலர் உளக்குழப்பமும் கோபமும் கொள்கின்றனர்.   கோபம் எந்த வித பலனையும் தரப்போவது  இல்லை.  சாந்தமான அமைதியான மனம் மட்டுமே உங்கள் நிலையை தரும். உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது,    ஏறுங்கள்.  எல்லாம்  உங்கள்  மானத்தில்  தான்  இருக்கிறது.
 

நீங்கள்  அழகாக  இல்லையென்றால், பிறர் அழகாக இருப்பது கண்டு  நீங்கள்  தாழ்வு மனப்பான்மை  கொள்ளாதீர்கள். அவர்களுக்கு அழகான புறஅழகு  இருக்கலாம், ஆனால் உங்களுக்கு அழகான மனம் இருக்கிறது, புறஅழகு கொண்ட  அனைவருமே மனதில் அழகாக இருப்பதில்லை. அவர்கள் முகத்தை பார்க்கும் போது சில நேரம் மந்தமாக இருக்கும். சிலருக்கு நல்ல மனமிருக்கும் ஆனால் புத்தி கூர்மை இருக்காது. உங்களுக்கு புத்தி கூர்மை இருக்கும். எனவே உங்களிடம் என்ன இருக்கிறது என்று பாருங்கள்.   
 
சிலரிடம்  நிறைய   பணம்  இருக்கும், இருந்தால்  என்ன? உங்களிடம்   திறமை   இருக்கும், நல்ல  மனம்  இருக்கும் வேறு நல்லவை  பல  இருக்கும்.  நீங்கள் உங்களை  பிறரோடு  ஒப்பிடும்  போது, உங்களின்    உள்ளும்  ஒரு மிகப்பெரிய பரிமாணம்  மற்றவர்களை    விடவும்   பெரியதாகவும்,  எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுக்கும்  தன்மை இருப்பதை மறந்து விடுகிறீர்கள்.  அதை பற்றிக்கொண்டால் நீங்கள் இந்த  மன குழப்பங்கள் தரும் தன்மைகளில்  இருந்து  விடுபடுவீர்கள்.  நான்  கூறுவது   உங்களுக்கு   புரிகிறதா? 
 
உலகம்  முழுவதும் பல மனச்சிக்கல்கள் நிறைந்துள்ளன. நீங்கள் இந்த  சிக்கல்களில் இருந்து  விடுபட வேண்டும்.   எது இந்த சிக்கல்களில்  இருந்து உங்களை விடு பட  வைக்கும் - உளவியல்  அல்ல  ஆன்மிகம்   மட்டுமே.  மனதின்  உள்ளுணர்வுகள்   இந்த சிக்கல்களில்  இருந்து  அதாவது மேலான, தாழ்வான , வெளிப்புற, உட்புற  என்று  பலவாறான  சிக்கல்களில்  இருந்து   விடுபட  வைக்கும்.   எல்லாவிதமான  எரிச்சல்  தரும் சிக்கல்களும்  மறைந்து விடும்.
 
'ஆகா! என்ன சுகமான அமைதியாக  உள்ளது  என்று  நீங்கள்  உணர்வீர்கள்.'  ஹிந்தியில் ஒரு  வாசகம்  உண்டு - மன் மீதா தொஹ் ஜஅக்  மீதா.  உங்கள்  மனதில்  இனிமை  இருக்கும் போது உங்களைச்சுற்றி  உள்ள அனைத்தும்  இனிமையாகவே  இருக்கும். பாருங்கள்,  வாழ்க்கையே  ஒரு  கலை தான். இல்லையா!  வாழும்  கலை.
 
கலை ஒரு வியாபாரமாகலாம், ஆனால்  வியாபாரம் கலையாக முடியாது.  வியாபாரத்தையும்  நீங்கள் கலை என்று எப்போது  கூறலாம்  என்றால் ஒருவர்க்கு எப்படி முறையான  வியாபாரம் செய்ய வேண்டும்  என்று  அறியும் போது மட்டுமே.  சிக்கலான கலப்படம்  மிக்க உலகில்,  நீதி  நெறிகளை கடை பிடித்து  எப்படி வியாபாரம்  செய்வது- அது தான் கலை. இந்த அர்த்தத்தில் அது கலையாகும்.
 
வியாபாரத்திலும் வெவ்வேறு நிகழ்வுகள் உள்ளன. வியாபார சந்தையை கவனித்து கொண்டே  இருக்க வேண்டும்.'வியாபாரச்சந்தை எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, நான் என் சொந்த செயல்கள் தான் செய்வேன்' என்று கூற முடியாது. வியாபாரம் வேறு விதமான கலை, நுண் கலைகள்  போல்  அல்ல. நுண் கலைகளில் நீங்கள்  பிறரைப் பார்ப்பது இல்லை. உங்கள்  தனித்திறன்  வெளிப்பட முயல்வீர்கள்.
 
வியாபாரம் உலக சந்தையை  கையாள்வது. அங்கு மற்றவர்கள் என்ன  செய்கிறார்கள்  என்று  தெரியவேண்டும். நீங்கள் ஒரு பொருளை  விற்க முயலும் போது,மற்றவர்கள் பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்கிறார்கள், என்ன  விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.
 
கே:   நம்  நாடி நமக்கு அறிகுறிகள் தருமா?  இப்போது என்ன சொல்கிறது? 

குருதேவ்: ஆமாம். இப்போது  நாடி,' சும்மா இரு' என்று  கூறுகிறது (அவர்  சுவாச ஓட்டத்தை  சரி பார்க்கிறார்). இரண்டு நாடிக்கும் சீராக இருக்கும் போது ஒன்றும் பேசாமல் இருந்து, தியானம்  செய்ய  வேண்டும்.  ஆனால் அவை மாறும், எல்லாமே மாறும். இந்த பிரபஞ்சம் முழுவதுமே மாற்றத்திற்கு உட்பட்டவை.
 
கே: (கேள்வி பதிவு செய்யப்படவில்லை)
 
குருதேவ்:  உங்களுக்கு வேறு  வழி இல்லை.வேறு  வழி இருக்கிறதா என்ன? விரைவிலோ அல்லது தாமதமாகவோ எல்லோரும் செய்ய வேண்டும். உங்கள் நற்செயல்களுக்கு நல்ல பெயர் எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் அது உங்கள் சுவபாவம். சூரிய காந்திப்பூ,'நான் மஞ்சள் நிறம்'என்று கூற முடியாது.அது மஞ்சள் நிறம் பெற எதுவும் செய்யவில்லை. அது அவ்வாறு
உருவாக்கப்பட்டது.
 

ஒரு  ரோஜாப்பூ,'ஒ பார், நான் இளஞ்சிவப்பு  நிறம். நான் என்னை இளஞ்சிவப்பு  நிறமாக மாற்றி கொண்டேன்.' எவ்வாறு நீங்களே உங்களை மாற்றிக்கொள்ள முடியும். எந்த நல்ல குணங்கள், திறமைகள், உங்களிடம்  இருந்தாலும் அதற்கு நீங்கள் பெருமை கொள்ள முடியாது. அது போல் நீங்கள்  உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.எப்படி இருக்கிறேனோ அவ்வாறு நான் உருவாக்கப்பட்டு இருக்கிறேன். அதே போல் நீங்கள் கொண்டுள்ள எதிர்மறையான குணங்களுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியாது. நல்ல குணங்களுக்கும் ,பெருமை கொள்ள முடியாது. நீங்கள்  எப்படி  இருக்கிறீர்களோ  அப்படித்தான் நீங்கள்  படைக்கப்பட்டீர்கள்.
 

நீங்கள்  போராடும்  குணம் கொண்டவரானால் அந்த  குணத்தை உபயோகித்துக்கொள்ளுங்கள்.  எங்கு  தவறு நடந்தாலும்  தட்டிக்கேளுங்கள். ஆனால்  புன்சிரிப்புடன் சண்டையிடுங்கள்.  என்னோடு  சண்டையிடுங்கள் (சிரிப்பு). கல்லாமை எதிர்த்து போராடுங்கள். அநியாயத்தை, இல்லாமை எதிர்த்து போராடுங்கள்.முன்னே சென்று போராடுங்கள். போராட்டத்தில்  ஏற்றமும்  இறக்கமும்  இருக்கத்தான் செய்யும். கவலைப்பட வேண்டாம். 'எது வந்தாலும்  போராடுவேன்' என்று  எண்ண வேண்டும்.
 
அதனால் உங்கள் தர்மம் (கடமை) என்ன என்று  நீங்கள்  அறிய வேண்டும். உங்கள் கடமை  போராடுவதோ, கற்றுக்கொடுப்பதோ, சமாதனம் செய்வதோ, அல்லது பணி புரிவதோ ; உங்கள் தர்மம் எதுவோ, இயல்பாக உங்களிடம் எது உள்ளதோ அதோடு  ஒத்துப்போக வேண்டும்.  நீங்கள் இந்த நான்கையுமே    செய்ய முயற்ச்சிக்கலாம். முதலில் கற்ப்பிக்க முயலுங்கள், அது முடியவில்லை என்றால் பிறரை உங்கள் மார்க்கெட்டிங் யுக்திகள் கொண்டு நம்ப வைக்க முயலுங்கள்.அது முடியாது போனால் சேவை செய்யுங்கள். இந்த நான்கும் முடியாது  போனால் போராடுங்கள். புரிகிறதா? இந்த முறையை கையாளுங்கள், சரியா?
 

உங்களுக்கு எது இயல்பாக வருகிறதோ அதுவே உங்கள் தர்மா.அவர்கள், எனக்கு போராடுவது, சண்டையிடுவது
  இயல்பு  என்று  கூறுவது போல்,(பார்வையாளர்களில் ஒருவரை காண்பித்து). ஒவ்வொரு நிமிடமும் அவர் எங்கு வேண்டுமானாலும், சண்டையிடலாம்.அது அவரின் தர்மா.
 
எல்லாமே கடினமான செயல்கள்தான். கற்ப்பிப்பது சுலபமான செயல் என்று நினைக்கிறீர்களா?  கடவுளே அது  பெரிய  தலைவலி!! தெலுங்கு மொழியில் - ஒரு ஆசிரியர்  ஒரு  மாணவனுக்கு  தான் படித்ததை மறந்து கற்றுத் தரவேண்டும், ஏனெனில் தான் படித்ததை மறந்து கற்றுத் தரா விட்டால் அவருக்கு விடுதலை  இல்லை.
 
நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் நீங்கள்  அதை எல்லாம் மறந்து இருக்க வேண்டும்.   எனவே  ஆசிரியர் நன்கு கற்றுக்கொண்டு, எந்த துறையானாலும்  சரி அதை தன்  மாணவனுக்கு கற்று தந்தவுடன் மறந்து விட வேண்டும். அதற்க்கு  முன்  மறக்கமுடியாது. இது ஆசிரியருக்கான  விதி- கற்றுக்கொள், கற்றுக்கொடு ,மறந்து விடு. எனவே இயற்கை உங்களுக்கு  சொல்லிக் கொடுக்கும். வயதாக ஆக மறதி வந்து விடும்  இல்லையா? நீங்கள் வயது ஆக ஆக ஆக , எல்லாம்  மறந்துவிடுவீர்கள்  இல்லையா?
 
தெலுங்கில் மற்றுமொரு நகைச்சுவையான வரி - உன்னை என் மாணவனாக்கி, உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து, நான் என் நற்பெயரை இழந்து விட்டேன்.  நீயும் கற்றுக்கொள்ள வில்லை நானும் மறக்கவில்லை (சிரிப்பு).
 
ஏனெனில்  யாராவது  உங்களை,' உங்கள்  குரு யார், உங்கள்  ஆசிரியர் யார்?'  என்றால். நீங்கள் இன்னார் தான்  என் ஆசிரியர். அவர் என்ன கற்றுக் கொடுத்தார்? எனவே உன்னை நான் மாணவனாக கொண்டதில் நான் என் நற்பெயரை  இழந்து  விட்டேன். நீ கற்றுக்கொள்ளவும் இல்லை,நான் மறக்கவும் முடியவில்லை.
 
எனவே  கற்பிக்கும் ஆசிரியர் வேலை ஒரு சுலபமான வேலை அல்ல. அதே போல் சண்டை போடுவதும் சுலபமான வேலை அல்ல. மிகவும்  கடினமான வேலை. பிறரை  சம்மதிக்க வைப்பதும் தான், சேவை செய்வதும் கூட ஒரு  சவாலான செயல் தான். ஆம் நீங்கள் எல்லா நல்ல முயற்சியும் எடுத்து பிறருக்கு சேவை செய்தால் உங்களையே குறை கூறுவார்கள். எனவே சேவை செய்வதும் சுலபமானது அல்ல.
 
எனவே நீங்கள்  இதை எடுத்துக்கொண்டாலும் ஒரு கோணத்திலிருந்து பார்த்தால், எல்லாம் கடினமாக தான் இருக்கும். எனவே நீங்கள்,'எல்லாமே கடினம் தான், எனவே செய்து விட்டு சும்மா இருந்து விடலாம்' என்றால். அது  இன்னமும் கஷ்டம். எனவே  எதையாவது செய்வதும்  சுலபமான செயல் அல்ல, எதையும் செய்யாமல்  இருப்பதும் சுலபமான செயல்லல. எனவே
ஜெய் ஜெய் ராதா ரமண ஹரி போல்!