வணிகத்தில், நன்னெறிக்கான உலக அமைப்பு....


15
2012............................... அம்ஸ்டெல்வீன்,நெதர்லாந்து
ஜூன்




நாம் எல்லோரும் இங்கு      இருக்கிறோமா என்று பார்போம்? நூறு சதவிதம்?


எதிர்காலத்தை  பற்றிய தவிப்பும் இறந்த காலத்தை பற்றிய வருத்தமும் நிகழ் காலத்தில் இருக்கிறது. இந்த எதிரெதிர் நீரோட்டங்களுக்கு இடையே, எப்படி நம்பிக்கை என்ற ஒளியை துணையாய் கொண்டு படகில் கடந்து மேலே செல்வோம் என்பதே நமக்கு  சவால். மேலும் இப்போது நம் கையில் இருக்கும் நம்பிக்கை என்ற ஒளி ஒரு பெரும் சூறாவளியில் இருக்கிறது. எப்படியாவது இந்த ஒளியை காப்பாற்ற வேண்டும்.
1999ல் நடந்த நிகழ்ச்சி:சென்ற மில்லெனியத்தின் இறுதி, டிசம்பர் 31ஆம் தேதி அன்று உலகம் அழியப் போகிறதென்று வதந்திகள் இருந்தது. ஏனென்றால் கணினிகள் அப்போது இயங்காது, எனவே உலகம் அப்படியே நின்றுவிடும். உலகம் முழுவதும் பீதி பரவியது, குறிப்பாக வட அமெரிக்காவில் சற்று அதிகமாகவே இருந்தது. வீட்டில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேர்த்து வைத்தனர். மளிகைப் பொருட்கள், பால் பவுடர் என வாங்கி வைத்தனர்.கனடாவில் பால்பவுடர் கிடைக்கவில்லை.பெரும் அசம்பாவிதம் நடக்கும் என்று எதிர்பார்த்து இவற்றை வாங்கி வைக்கவே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில், நான் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். சுமார் இரண்டரை மாதத்தில் நூறு நகரங்களுக்கு சென்றேன். காலையில் ஒரு இடம், மாலையில் ஒரு இடம். நான் சொன்னதெல்லாம் ஒன்று   தான்,‘எல்லாம் சரியாக ஆகும், கவலை வேண்டாம். தொழில் எப்போதும் போலவே இருக்கும், கவலை வேண்டாம். வீட்டில் எந்த பொருளும் வாங்கி சேர்த்து வைக்க வேண்டாம். அது தேவையில்லை.’
எல்லாவிடத்திலும் அதே கேள்வியே வந்துகொண்டிருந்தது. மறுபடியும், இந்த வருடத்தில்,ஒரு மாதத்தில் பதினாலு நாடுகளில் உள்ள இருவது நகரங்களுக்கு சென்றேன். எல்லாவிடத்திலும் மக்கள் கேட்பது, ‘இந்த உலகம் 20-12-2012 அன்று இந்த உலகம் அழியப் போகிறது என்கிறார்களே, என்ன ஆகப்போகிறது?’
நான் சொன்னேன்,‘இது அமெரிக்க திரைப்படத்தில் மட்டும்தான் நடக்கும்.இந்த உலகம் முடிந்து போகாது, அது திரைப் படத்தில் வேண்டுமானால் நடக்கலாம். எல்லாம் வழக்கம் போலவே நடக்கும். நீங்கள் கவலைப் படாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்.’ உலகம் அழியாது என்று தெரியும்போது நிம்மதி பரவுகிறது. ஓய்வாய் அமர்ந்து தேநீர் குடித்தபடி தொலைக்காட்சி பார்க்க முடிகிறது.
மக்களை,தவிப்பு  அதிகம் கொல்கிறது. இறப்பு வரும்போது வரும், ஆனால் இறப்பை பற்றிய  
பயம் மிகவும் தொந்திரவு செய்யும், நிம்மதியை கெடுத்து விடும். அதைப் போலவே ஏழ்மை
பற்றிய பயம் அந்த ஏழ்மையை விட அதிகம் கொல்லுகிறது.
உலக நடப்புகளை புதியதாய் பார்க்கவேண்டும். காந்திஜி சொன்னது போல,‘எல்லோருடைய தேவைக்கும் வேண்டிய அளவு நம்மிடம் இருக்கிறது,ஆனால் பேராசைக்கு வேண்டிய அளவு இல்லை’. இந்த வாக்கியம் மிகவும் புகழடைந்தது. நாம் பேராசையிலிருந்து நகர்ந்து பரந்த மனதோடு கூட்டுறவுக்கும் எல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற மனநிலைக்கும் செல்ல வேண்டும். இன்றைய சமூகம் எதிர் நோக்கியிருக்கும் சவால்களில் ஒன்று எல்லோரும் நம்முடையவர் என்ற  உணர்வில்லாததும் குடும்ப மதிப்பு குறைந்து போனதும் ஆகும். குடும்பதிற்குள்ளேயே கூட ஒட்டுறவு இல்லை.இதன் விளைவாக வன்முறை, மனஇறுக்கம்,
அதன் தொடர்பான வியாதிகள், மனச்சோர்வு போன்ற சமூகக் கேடுகளை எதிர் நோக்கி யிருக்கிறோம்.
உங்களுக்குத் தெரியுமா, ஐரோப்பாவில் முப்பது சதவிதம் பேர் மன சோர்வினால் அவதி படுகின்றனர். சமீபத்தில் நான் ஜப்பானுக்கு சென்றிருந்தேன், அங்கே வருடத்திற்கு
முப்பதாயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அறிந்தேன். இந்த புள்ளிவிவரம் அபாயமாய் இருக்கிறது.
என்ன காரணம்? இந்த சூழ்நிலையை எப்படி மாற்றுவது?இந்த கேள்விகள் தான் நம்மை துரத்தி பயமுறுத்துகிறது. அவை நம்மை பயமுறுத்தத்தான் வேண்டும். நாம் மனிதர்கள், ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டிருக்க வேண்டும், நமக்கு ஏதாவது இடையூறு வரும் போது எல்லோருடைய கைகளும் உதவிக்கு வரும் என்ற பாதுகாப்புணர்வோடு இருக்க வேண்டும்.
இந்த மாபெரும் மாற்றம் நிகழும் போது; (முன்பு இந்த நிலை இருந்துவந்தது), சூழ்நிலை நிச்சயம் மாறியாக வேண்டும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பார்த்தீர்களானால், கம்யூனிச காலகட்டத்தில், ஒரு கூட்டு சமூக உணர்வு பரவியிருந்தது. அங்கு பிழைக்கத் தேவையான உணவு மற்றும் இன்ன பிற வளங்கள் குறைவாக இருந்தாலும் அங்கு நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற தகைமை உணர்வு இருந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முன் வந்தனர்.
போட்டி நிறைந்த வணிக உலகில் இத்தகைய பண்புகள் குறைந்து கொண்டிருக்கிறது, இந்த பண்புகளை நாம் திரும்பப் பெற வேண்டும். இவை ஏற்கனவே தேய்ந்து போய்விட்டன என்று சொல்ல முடியும், ஆனால் அந்த ஒற்றுமை உணர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
ஒரு நிறுவனத்திற்கு உள்ளே, எத்தனை பேர் ஒருவருக்கொருவர் தொடர்பிலிருக்கிறார்கள்?
அல்லது ஒட்டுறவின்றி இயந்திரத் தனமாக வேலை செய்ய வந்தோமா?
மற்றவர்களுடன் தொடர்பு மற்றும் எல்லோரும் நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு அடைய இயலாமல் நம்மிடம் உள்ள இடைவெளியைச் சரி செய்ய ஆன்மீகமே தூண்டுதலாக இருக்கும். இப்போதைய சவால்களை எதிர்கொள்ள நமக்கு தேவை உள்ளார்ந்த ஆர்வம், எதிர்பார்ப்பு, தன்னம்பிக்கை ஆகியன. இவற்றை நமக்குள் வளர்க்க ஆன்மிகம் தேவை. பாருங்கள், இன்றைக்கு நாம் எதிர் கொண்டிருப்பதைவிட அதிக அளவு  கொந்தளிப்பை உலகம் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் சந்தித்திருக்கிறது.
இன்று நாம் ஐரோப்பாவில் எதிர் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினையான மிக பலவீனமான பொருளாதாரம் அல்லது உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் இத்தகைய பிரச்சினைகள் போன்றவை வெகு நிச்சயமாக உலகப்போர்களின் போது எதிர் கொண்ட சவால்களைப் போல அல்ல. எனவே நாம் நல்ல நிலைமையில் தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை நாம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். “நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். வாருங்கள், நாம் சேர்ந்து நடப்போம்”, என்ற செய்தியை நாம் பரப்ப வேண்டும்.
இங்கே இரண்டு விஷயங்கள் நாம் செய்ய வேண்டியிருப்பதை காண்பீர்கள் சில நாடுகள் தங்களுக்கு உதவவேண்டும் என்று எதிர்பார்க்கும்,மற்றவர்கள் தரவேண்டும்,அதை பெறுவது 
தங்கள் உரிமை என்று கருதும். இது மிகப் பெரிய சவால்,ஒரு பெரிய பிரச்சினை.
முல்லா நஸ்ருதீனின் ஒரு கதை உண்டு. முல்லா நஸ்ருதீன் ஒரு அறிவாளியான முட்டாள் மனிதன், விவசாயம் அவர் தொழில்.முல்லா ஒரு சிறு நகரத்தில் வாழ்ந்து வந்தார்.அந்த நகரம்  ஆறு வருடங்களாக மழை இல்லாமல் கடும் பஞ்சத்தில் இருந்தது.முல்லா இதை பற்றி புலம்பி புலம்பி அதுவே வழக்கமாகி விட்டது. ஒரே புலம்பல் தான். ஒருவழியாக அந்த வருடம் நன்கு மழை பெய்து நல்ல விளைச்சலும் கிடைத்தது. ஆனாலும் முல்லா புலம்பலை நிறுத்தவில்லை. அவருடைய நண்பர்கள் கேட்டார்கள், “இந்த வருடம் உனக்கு புலம்ப எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் நல்ல மழை பெய்து நல்ல விளைச்சல் பெற்றிருக்கிறாய்.” ஆனாலும் முல்லா புலம்பினார், ”இப்போது வேலை மிக அதிகமாக இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக மழை இல்லாமல் வேலையும் இல்லாமல் இருந்து பழகி விட்டேன். இந்த வருடம் நிறைய வேலை இருக்கிறது ஆனால் செய்ய முடியவில்லை.”
வேலை இல்லாதபோது யாராவது தமக்கு தருவார்களா என்றிருக்கிறது; ஆனால் வேலை கிடைக்கும்போது அது மிக பாரமாய் இருக்கிறது.இதைபோல எத்தியோப்பியாவில் இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஏழு நீண்ட வருடங்கள் மழை இல்லாமல் பஞ்சத்தில் உலக நாடுகளின் உதவியைப் பெற்றார்கள். பின்னர் எல்லாம் இருந்த போதும் மற்ற நாடுகளின்   உதவியை எதிர்பார்ப்பது அவர்களின் உரிமை என்ற நினைத்துவிட்டனர்.வேலை செய்யவும் தயாராய் இல்லை. இது ஒரு சவால்.
இங்கு தான் நாம் மக்களுக்கு தகுந்த கல்வி அளிக்க வேண்டும். ஒரு பெரிய மாற்றம் நிகழ வேண்டும். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கும் நாடுகளுக்கும், உதவிகளை பெற்றுவரும் சமூகங்களுக்கும் அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்கும் தம்மை சார்ந்திருக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும். உதவி செய்யும் நாடுகள் தங்கள் உதவியைத் தொடரவேண்டும்.
அவை அளிக்கும் பயன்களுக்காக அல்ல, உதவி செய்வது மனிதப் பண்பு இது இருவழி அணுகுமுறை. ஏழைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டவேண்டும், அதை ஆன்மிகம் அளிக்கிறது.
1999 இல் பெங்களூரைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுமார் ஐநூறு வேலை இல்லாத இளைஞர்களை ஆசிரமத்திற்கு அழைத்தோம். சிறுதொழில் துறை அமைச்சரையும் அதன் இயக்குனரையும் அழைத்து சிறுதொழில் தொடங்க அரசாங்க திட்டங்களை  அறிமுகம்
செய்து விளக்கச் சொன்னோம். சுமார் இருநூற்று என்பது திட்டங்கள் அரசாங்கத்திடம் சிறு
தொழில் செய்பவர்களுக்கு  இருந்தது. தொழிலுக்கான  கட்டமைப்பு உதவிகளும் முதலீடு உதவிகளும் அதில் அடக்கம். மக்கள் அந்த திட்டங்களை எடுத்துக் கொண்டாலே போதும்.
எங்களுடன் இருந்த ஐநூறு இளைஞர்களுக்கு இந்த இருநூற்று என்பது திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.என்ன நடந்தது தெரியுமா?இந்த திட்டங்களை ஏன் உபயோகப்படுத்த முடியாது என்று பல்வேறு காரணங்களை கூறினர் எந்த திட்டத்தை கூறினாலும் இது நடக்காது அது சரியில்லை என்றே கூறிவந்தனர் இறுதியாக உங்களுக்கு என்ன வேண்டும் என்ற போது,
அவர்கள் சொன்னது,“எங்களுக்கு அரசு வேலை வேண்டும்.காவல்துறை பணி,பேருந்து ஒட்டுதல் அல்லது நடத்துதல் என ஏதாவது அரசு வேலை வேண்டும்.”
நான் சொன்னேன், “சரி, நாளைக்கு நான் ஏதாவது செய்கிறேன்.”
மறுநாள் நான் அவர்களை  YLTP (Youth Leadership Training Programme) வகுப்பில் சேர்த்தேன். அதாவது இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கும் வகுப்பு.  அந்த ஒரு மாத காலம் நாங்கள் அளித்த பயிற்சியில், அவர்களைச் சரி செய்து,அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள் என்று புரிய வைத்து மிகப் பெரும் மாற்றம் விளைவித்தோம். ஒவ்வொருவரும் இன்று தொழில் முனைவோ ராக மாறி இன்று முந்நூறுலிருந்து ஐநூறு பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களிடம் இந்த மாற்றத்தை பார்க்க இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், அவர்கள் தொழில் முனைவோராக மாறுவதுடன் தங்கள் கால்களில் தாங்களே நின்று சுயமாய் பிரகாசிக்கின்றனர். இந்தப் பயிற்சியை இந்தியாவின் பல பகுதிகளிலும்,ஆப்ரிகா தென் அமெரிக்க நாடுகளிலும் தொடங்கி இருக்கிறோம்.உண்மையில் நல்ல பலனைத் தருகிறது. எனவே மக்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு பேரழிவை பற்றியோ அல்லது உலகின் இறுதி நாளைப் பற்றியோ அல்ல, ஆனால் திறமைகள் நம்மிடம் இருப்பதைக் காட்டும் விழிப்புணர்ச்சி, வெளித் தெரியாமல் நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும்  திறமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி.
ஒவ்வொரு சவாலும்,ஒவ்வொரு பிரச்சினையும் நமக்கு ஒரு வாய்ப்பு. உலகமே குடும்பமாக,
இந்த சவால்களை வாய்ப்பாக மாற்றும் ஒரு பெரிய மாற்றம் வேண்டும். உலகம் முழுவதும்
ஒரு குடும்பமாக பார்க்கவேண்டும்,அதற்கு நாம் சிறப்பாக என்ன செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டும்.
இறுதியாக ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் – நாம் எல்லோரும் உணரவேண்டியது என்ன வென்றால், நாம் இங்கேயே காலத்திற்கும் இருக்கப் போவதில்லை. நாம் இங்கே இருப்பது குறைந்த காலத்திற்கு மட்டுமே. அது என்னவாக இருந்தாலும், என்பதுலிருந்து, தொனூறு வருடங்கள் அல்லது  நூறு வருடங்கள் என இருந்தாலும் அதை சிறப்பாக பயன்படுத்தி        வருங்கால சந்ததியினருக்கு சிறந்ததைச் செய்வோம்.
என்னுடைய ஆசிரியர், மகாத்மா காந்தியுடன் வேலை செய்தவர், அவருக்கு நூற்று பதினாறு  வயது வயது ஆகிறது ஆனாலும் அவர் நன்றாகவே இருக்கிறார். எனவே நாம் இருக்கும் இந்த குறைந்த கால அளவில் நம்பிக்கையை ஏற்படுத்துவோம், இறுக்கத்தை குறைப்போம், துயரத்தை நீக்குவோம். தேவையற்ற முரண்பாடுகளில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் வீணாக்கிக் கொண்டிருக்கும் அந்த மக்களை ஒன்றாக கொண்டு வருவோம். இந்த உலகத்தை மேலும் சிறந்ததாகச் செய்வோம்.
அப்படி நினைக்கவில்லையா நீங்கள்? என்ன சொல்கிறீர்கள்?அப்படிப்பட்ட  பார்வைகொண்டு நாம் எல்லோரும் ஒன்று சேருவோமா? இறுக்கம் இல்லாத வன்முறை இல்லாத சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமில்லா மனது, எந்த தயக்கமுமில்லாத புத்தி, பீதியற்ற நினைவு மற்றும் துன்ப மில்லாத ஆத்மா. இதைச் செய்வோமா?
முதலில் நமக்கு அந்தப் பார்வை வேண்டும் – எல்லோரும் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணும் ஒற்றுமையான ஒரு சமூகத்தை மற்றும் ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ளும் சமுதாயத்தை உருவாக்குவது. சில விஷயங்களை நாம் அப்படியே ஏற்றுகொண்டாக வேண்டும். “ஆம், இது எப்படியும் என் இயல்புதான், நான் மற்றவர்களிடம் அக்கறை கொண்டுள்ளேன்.” என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது போதாது, அது செயலாக உருவாக்கம் செய்ய வேண்டும்.
ஆம், அப்படியே நான் நெதர்லாந்து நாட்டை வாழ்த்த வேண்டும், ஏனென்றால் பேரழிவு மீட்பில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்று அது. எங்கே எந்த பேரழிவு நேர்ந்தாலும் முதலில் அந்த சமூகத்தின் உதவிக்கு வருவது ஹாலந்து நாடுதான். இது அந்த நாட்டின் உள்ளார்ந்த ஒரு பண்பு மற்றும் கலாசாரம். அது சுனாமியோ அல்லது பூகம்பமோ, நெதர்லாந்தின் மானியம் வந்து சேரும். KLM (நெதர்லாந்தின் விமான நிறுவனம்) அங்கே உதவி பொருட்களுடன் சென்று இறங்கிவிடும். ஆம் நம்முடைய வாழும் கலை நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்களும் அங்கே இருப்பார்கள். அவர்கள் எப்படியும் எல்லா NGO க்களுடனும் (அரசு சாரா அமைப்புகள்), பல அரசுகளுடனும் மீட்பு வேலையில் இருப்பார்கள். அங்கே KLM ஹாலந்திலிருந்து நல்லெண்ணம், தயை மற்றும் சேவையோடு வந்திறங்கும், பேரழிவு எங்கே நடந்தாலும்.
நான் நினைக்கிறேன், ஹாலந்து ஒரு படி மேலே சென்று பேரழிவைத் தடுப்பதற்கான வேலைக ளிலும் இறங்க வேண்டும். அதிகமாகும் பரஸ்பர நம்பிக்கையின்மையையும் சமூகங்களுக்கு இடையே அதிகமாகும் இடைவெளியையும் ஹாலந்து தடுத்து நிறுத்த வேண்டும். இங்கு நான் மற்றொன்றை கூற விரும்புகிறேன். பூர்வ சமூகத்திற்கும் குடியேறிய சமூகத்திற்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளி ஹாலந்துக்கு இன்னுமொரு  சவால். குடியேறி வந்தவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் ஹாலந்தின் வழக்கங்களையும் கலாசாரத்தையும் தழுவிக் கொள்ளலாம். உங்கள் வேர்களை மறந்து விடுவீர்கள் என்று நினைக்க வேண்டாம்.
உங்கள் வேர்களை அப்படியே வைத்துக்கொண்டு உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள், மனப் போக்கை விசாலமாக்குங்கள், நீங்கள் இருக்குமிடத்தில் உள்ளவற்றையும் ஏற்றுகொள்ளுங்கள்.
பெரும்பான்மை சமூகத்திற்கு நான் சொல்வது என்னவென்றால், வேறுபட்ட சமூகங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.  மற்ற சமூகங்கள் அச்சுறுத்தல் அல்ல,மாறாக அது கொண்டாட பட வேண்டிய விஷயம். வேற்றுமையை ஏற்றுகொள்வதும் தழுவிக்கொள்வதும், ஒன்றிணைந்து செயல்படுவதும், சமூகத்தில் ஒத்திசைவை ஏற்படுத்தும். இந்த நாட்டில் அப்படிதான் சமூகம் பல காலமாய் இருந்து வருகிறது.  இந்த விஷயங்கள் இங்கு நடப்பதை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
காலாசார பன்மை, பல மதம் மற்றும் கலாசார பன்மை விழாக்கள் ஆகியவற்றை வெகுவாக ஆதரிப்பவன்.அதை ஊக்கப்படுத்துபவன். இதை போன்ற விழாக்கள் பல இடங்களில் பல பகுதிகளில் மேலும் அதிகமாக நடக்க வேண்டும்.அப்போதுதான் மக்கள் கலந்து பழக, ஒருவரை ஒருவர் அறிய வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வருட ஆரம்பத்தில்,ஜெர்மெனியின் பாத் அந்தகாஸ்ட்டில் ஒரு நிகழ்ச்சி. இஸ்ரேலிலிருந்து  ஒரு குழுவும் பாலஸ்தீன பெண்கள் குழுவும் வரவழைத்தோம். அந்த குழுக்கள் வந்ததும் அவர்களை ஒரே வீட்டில் தங்க வைத்தோம். ஜெர்மெனிக்கு தனித்தனியாக வந்தவர்களை ஒன்றாக ஒரே வீட்டில் தங்க வைத்தோம். முதல் நாள் நடந்த பட்டாசு வெடிப்புகளையும் வெடி குண்டுகளையும் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை, அங்குதான் தங்க வேண்டியிருந்தது. நம் அமைப்பாளர்களும் ஆசிரியர்களும் அங்கே இருந்தனர். முதலில் அங்கு இருந்த பெண்கள் தங்கள் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். ஆனால் அந்த அழுத்தம் வெளியேறியவுடன், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்க ஆரம்பித்தார்கள். ஒருவரை ஒருவர் பாராட்ட ஆரம்பித்தனர் பின்னர் நல்ல நண்பர்களாகவே ஆகிவிட்டனர்.
அந்த பகுதியில் உள்ள ஊடகங்கள் நன்றாகவே இதை பதிவு செய்தனர். நான் சொல்வது என்னவென்றால், நாம் துணிச்சலான நடவடிக்கையாக, முற்றிலும் எதிரெதிரான கருத்துகளை கொண்ட இரு குழுக்களிலிருந்து சிலரை அழைத்து ஒன்றாய் ஒரே மேஜையில் அமர்ந்து கலந்து பேசி விளையாட ஊக்கப்படுத்தவேண்டும். 
கே: நம் வீட்டில் சாப்பாட்டு மேஜையில், நாம் நம் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு      நல்ல விஷயங்களைச் சொல்லித் தருகிறோம். ஆனால் வணிகத்தில், “இது வணிகம் மட்டுமே இதில்  எந்த தனிப்பட்ட கருத்துக்களும் இல்ல” போன்ற சொற்றொடர்களின் மூலம்  தனிமனித சுயநலமும் பேராசையும் வெகு எளிதாக விளக்கப் படுகிறது. இந்த முரண்பாட்டை எப்படி விவரிப்பது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: வணிகம் என்பது அலுவலக முறையான ஒன்று. ஆனால் குடும்பம் அப்படி அல்ல சகஜமாக இருக்கலாம். அதே நேரம் வணிகம் மனிதனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கக் கூடாது. ஒரு மனிதத் தொடல் தேவைப்படுகிறது. அதே நேரம் வணிகத்தை உணர்ச்சிபூர்வமாக செய்யக் கூடாது. இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
வணிகத்தை நாம் மூளையால் செய்ய வேண்டும், வாழ்க்கையை இதய பூர்வமாக வாழவேண்டும், அதாவது, உறவுகள் இதயபூர்வமாக இருக்கவேண்டும்.இதை மாற்றிச் செய்தால் வெறும் குழப்பம் தான் மிஞ்சும். ஆனால் அதற்காக வணிகத்தில் கொஞ்சம்கூட இதயமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்பதல்ல. உங்கள் உள்ளணர்வு என்ன சொல்கிறது என்று கவனிக்க வேண்டும், அது மிக முக்கியம்.
கே: நன்னெறி பற்றிய விழுப்புணர்வு இதயத்திலிருந்து வருவதா அல்லது மூளையிலிருந்து வருவதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: நன்னெறி இதயம் மற்றும் மூளை இவற்றின் கலவை. இது இரண்டையும் இணைக்கும் பாலம். 
கே: எனவே ஒரு பகுதி வணிகத்தை இதயத்தைக் கொண்டும் நடத்தலாமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஆம் ஒரு பகுதி நடத்தலாம். ஆனால் உணர்ச்சிபூர்வமாக நடத்தக்கூடாது. மனிதத்தன்மை மற்றும் உணர்ச்சிகளின் ஒரு சிறிய பங்கு அதிலிருக்க வேண்டும். நன்னெறி என்பது இதயம் சொல்வதும் மூளை சொல்வது ஒன்றாகவும் சரியாகவும் இருப்பது தான்.
கே: இந்த கூட்டம் முடிந்தவுடன், நான் என்னுடைய வணிக இதயத்தை உங்களுக்கு தந்து விடட்டுமா; இதற்கு ஒரு நிமிடம்தான் ஆகும்”.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: சரி, நிச்சயமாய். 
கே: இன்று நீதி என்பது அதிக தெளிவில்லாமல் ஆகிவிட்டதா? சரி எது தவறு எது என்ற   விளக்கம் தெளிவில்லாமல் ஆகிவிட்டதா? இதுவும் இந்தப் பிரச்சினையில் ஒரு பகுதியா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: சரி தவறு என்பது எப்போதும் ஒன்றின் தொடர்பாகவே இருக்கிறது. சரி  தவறை அறிய எளிமையாக்கப்பட்ட விதி இதுதான் – குறுகிய காலத்தில் துன்பமிருந்தாலும்     நீண்ட காலத்திற்கு நன்மை அளிப்பதுவே சரியானது; குறுகிய காலத்திற்கு இன்பமும் நீண்ட      கால நோக்கில் துன்பமும் தருவது தவறானது.
ஒரே இரவில் கோடீஸ்வரனாக ஆகலாம்,ஆனால் வாழ்கையின் மீதிகாலம்,சிறையில் தான்     கழிக்க வேண்டும் என்றால் அது சரியானது இல்லை. 
கே: ஒரு தலைவனாக இளைஞர்களிடம் எப்படி விழிப்புணர்வை தூண்டுவது? அரசு வேலை வேண்டிய இளைஞர்கள்,நான் நிறைய சந்தித்திருக்கிறேன்.அவர்களை விழிப்படைய வைக்க எந்த விசை தேவை?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: எட்டு நாட்கள் அவர்களை ஒரு இடத்திற்கு கொண்டு வாருங்கள்.
எந்த வழிமுறை எல்லாம் இதைச் செய்ததோ அது எல்லாம் எங்களிடம் உள்ளது. அது 
வேலை செய்யும். நம்முடைய ஆசிரியர்களில் ஒருவரை அனுப்பி வைக்கிறேன் அவர்
இந்த மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது என்று சொல்லித்தருவார். குறைந்த பட்சம் எட்டு
நாட்கள், ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் தேவை. 
கே: நான் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறேன். இந்த தொழிற்சாலைகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. மார்கெட் யார் பக்கம் இருக்கிறது, எப்படி லாபத்தை அதிகரிப்பது; முடிவில் மன அழுத்தமும் நெறியற்ற வழிகளும் ஊழல் கொள்கையிலிருந்து  வெளிப்படுவது தெரிகிறது. எனவே, ஊழலைப் பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். பல்வேறு நிலைகளில் அதை எப்படி கையாள்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர் நான். மேலும் ருஷியாவிலும் இதைபோன்ற ஒரு அமைப்பு உருவாக்கியிருக்கிறோம்.
நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம முடியும்போதுதான் ஊழல் தொடங்குகிறது. ஆன்மீக ஈடுபாடு குறையும்போதும் மிகத் துல்லியமாக ஊழலின் புலம் ஆரம்பிக்கிறது. தம்மைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணப்படும் ஒருவரிடம் யாரும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். அலுவலகத்தில் இருக்கும் ஒரு அலுவலர், தன் குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடமும் லஞ்சம் வாங்க மாட்டார். யாரிடம் தனக்கு எதுவும் இல்லையோ அவரிடம்தான் லஞ்சம் வாங்குகிறார் ஒருவர். மக்களிடையே அந்த தகைமையுணர்வு ஏற்படுத்த வேண்டும். அது
ஆன்மீக விழிபுணர்ச்சியால் மட்டுமே முடியும் – ஆன்மீகக் கல்வி தேவை!
இரண்டாவதாக, போட்டி! போட்டி தவறல்ல. ஆனால் நெறியற்ற போட்டி தொடரக்கூடிய
ஒன்று அல்ல. இது மிக அத்தியாவசியம்.
ஒரு பண்டைய சொற்றொடர் இதைப் பற்றி என்ன கூறுகிறது என்றால், நம் உணவில் உப்பு எவ்வளவோ அவ்வளவு தான் வணிகத்தில் பொய் இருக்கலாம் என்கிறது.
பொய் என்பது சற்று தீவிரமான வார்த்தையாக இருக்கலாம். வணிகத்தில் நாம் பொய் என்று எதைக் கூறுகிறோம் என்றால் தான் விற்கும் ஒரு பொருள் உலகத்திலேயே மிகச் சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம் என்று தெரிந்திருந்தாலும் தன் பொருள் தான் உலகத்திலேயே மிகச் சிறந்தது என்று கூறுவது.இதை அனுமதிக்கலாம் – இதை நன்னெறிக்கு உட்பட்டே செய்கிறார்கள் என்றும் கொள்ளலாம். – உங்கள் பொருள் இரண்டாவது அல்லது மூன்றாவது சிறந்த பொருளாக இருந்தும் அதுதான் முதல் என்று கூறுவது.
‘இந்த பொருள் எங்களிடம் இருக்கிறது, ஆனால் இதுதான் சிறந்ததா என்று நிச்சயமாய் சொல்ல முடியாது, இதைவிட சிறந்த பொருட்களும் இருக்கக்கூடும்’, என்று சொல்வது ஒரு நல்ல விற்பனையாளனுக்கு அடையாளம் அல்ல. எனவே சிறு அளவு அந்த திறமை இருக்க வேண்டும். அதாவது உணவில் உப்பைப் போல சிறிதளவு.
அதிகமாக உப்பு இருந்தாலும் உண்ண முடியாது. உப்பே இல்லாவிட்டாலும் உண்ண முடியாது. வேத காலத்திலிருந்து கூறப்படும் கருத்து.
ஆனால் இது ஒரு சமூக சேவகருக்கோ அல்லது புத்தி ஜீவிக்கோ அல்லது ஏன் ஒரு
அரசனுக்கோ அனுமதியில்லை.  வியாபாரிக்கு மட்டுமே சிறிதளவு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
கே: சில நேரங்களில் ‘கீழ் நிலையில்’ உள்ள ஒரு தனி மனிதன் ஏதாவது தேவைக்கு பெரிய பன்னாட்டு நிறுவனங்களை அணுகினால் கதவு திறப்பதில்லை.ஊக்கமும் முன்னேற ஆசையும் உள்ள ஒருவர் இப்படி கார்பொரேட் தளத்தில் எப்படி தொடர்பு கொள்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: சில நேரங்களில், ஊழலை ஒழிப்பதற்கோ,ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவோ
தனி ஒரு ஆளாக முடியாது மிகக் கடினம், ஒரு மலையேருவது போன்றது. உங்களை போன்ற எண்ண முடையவர்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு ஒரு சக்தி தேவை, உங்கள் கருத்தை ஆதரிக்கும் மக்கள் சக்தி உங்கள் பின்னாலிருக்க வேண்டும். எனவே உங்கள் கருத்தை பலரிடம் விதைக்க வேண்டும், பிறகு எல்லோரோடும் சேர்ந்து கூட்டாக பணியாற்ற வேண்டும். நாம் விரும்பும் இந்த மாற்றங்களை கொண்டுவர குழுவாய் இணைந்து பணிசெய்ய வேண்டும். தனி ஒரு ஆளாய் இதை செய்ய முடியாது, ஏனென்றால் இது மலை
ஏறும் வேலை. 
கே: உலகமெங்கும் பரவி இருக்கும் உங்கள் செல்வாக்கால், தலைமை நிலையிலிருக்கும் இளைஞர்களிடமும் வணிகத் தலைவர்களிடமும் அற்புதமான வேலை செய்து வருகிறீர்கள். ஆனால் என்னைப் போன்ற வயதான வியாபார பழம் பெருச்சாளிகள், ஊக்கமூட்டும் உங்கள் உரைகளை கேட்கிறோம், ஆனால் இந்த அறையை விட்டு வெளியே செல்லும் போது எல்லாவற்றையும் மறந்து விட்டு அதே பழைய தவறுகளில் ஈடுபடுகிறோம். உங்கள்
செல்வாக்கை பயன்படுத்தி இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முழுமையான நீதி போதனை வகுப்புகள் ஏன் தொடங்கக் கூடாது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இங்கு வருவதற்கு முன் ஸ்கைப் அழைப்பில், பெங்களூர் ஆசிரமத்தில் ஒரு வார காலமாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் சுமார் இரெண்டாயிரம் இளைஞர்களை சந்திதேன். அவர்களிடம் உள்ள உற்சாகம் நம்ப முடியாத அளவு இருந்தது. உலகம் முழுவதும் நான் நிறைய ஆசிரியர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். உதாரணமாக அர்ஜெண்டைனாவில் நமக்கு

பெரிய அளவில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எப்படி இரவு விடுதிகள் மொத்தமாக
மாறிவிட்டன, இளைஞர்கள் மது, போதைப் பொருள் மற்றும் புகையிலை இல்லாமல்
குளிர்பானம் குடித்துக் கொண்டு ஆடிப் பாடி பேரானந்தம் அடைந்தார்கள் என்றெல்லாம்
நீங்கள் சென்ற வாரம் பத்திரிகையில் படித்திருக்கலாம். அர்ஜெண்டைனாவிண் இரவு
விடுதிகளில் இது நடக்கிறது.ஏன் நியுயார்க்கில் கூட யோகா ரேவ் பார்ட்டி என்ற
அழைக்கப்படும் இதை ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் வருகிறார்கள், யோகா
செய்கிறார்கள், தியானம் செய்து அமைதியாகிறார்கள்.
ஆயிரக் கணக்கான இளைஞர்கள் இரவு விடுதியில் அமைதியாக அமர்ந்து கண்கள் மூடி ஆனந்தமாய் இருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?  ஒருவர் முகத்தில் ஒருவர் பாட்டிலை வீசுவதில்லை. இந்த மாற்றம் நடந்துகொண்டு தானிருக்கிறது. ஆனால் இதைவிட   அதிக வேகத்தில் இந்த மாற்றம் நடைபெற வேண்டுமென்றே நான் விரும்புவேன். எங்கும்           நமது தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள். இரவு பகலாக வேலை செய்யும் அவர்களுக்கே இந்தப் பெருமை சேரும். அவர்கள் தங்களுக்குள் உள்ள பேரானந்தத்தை கண்டுகொண்டார்கள், அதை மற்றவர்களிடதிலும் வெளிக்கொணர விரும்புகிறார்கள், அதுவே அவர்களை ஊக்குவிக்கிறது.