கர்மாவின் வழிகள் மிகவும் விசித்திரமானது....


04
2012............................... பெங்களூர் ஆஷ்ரம்
 ஜூன்
 

எவ்வளவு பேருக்கு இந்த அனுபவம் உள்ளது? யாருக்கும் தீங்கு நினைக்காமல் சிலர் உங்கள் எதிரிகளாக மாறியது. (பலர் தங்கள் கையை உயர்த்தினர்).இவ்வளவு பேரா!? இப்போது சொல்லுங்கள், எந்த பெரிய உதவியும் செய்யவில்லை, இருந்தாலும், சிலர் உங்கள் நண்பர்களாக மாறி விட்டனர். யாருக்கெல்லாம் இந்த அனுபவம் உள்ளது?

(பலர் கையை  உயர்த்தினர்)  பாருங்கள்! நீங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை எனினும் சிலர்  உங்கள் எதிரியாகின்றனர், எந்த நன்மையையும் செய்யாமல் பலர் உங்களுக்கு நண்பர்கள் ஆகின்றனர். கர்ம பலன்கள் மிகவும் விசித்திரமானது.  

அதனால்  தான் கர்மாவின் வழிகளை நாம் புரிந்துகொள்ள முடியாது.'ஹோனே வாலா கர்ம் ஔர் கர்னே வாலா கர்மா மை பஹுத் ப்ஹரக் ஹை'. நம் செயல்களைத் தவிர நடக்க இருக்கும் செயல்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் கர்மாவின் செயல்கள் மிகவும் விசித்திரமானது.!!! 

உங்கள் எதிரிகளையும், நண்பர்களையும் ஒருபுறம் வைத்து விட்டு நீங்கள் அமைதியாக இருந்து, உங்கள் கவனத்தை தெய்வீக செயல்களில் செலுத்துங்கள்.

இதை தான் கிருஷ்ணர்அர்ஜுனரிடம்,சமாஹ் சட்ரௌ சமித்ரே ச ததா மனபமநயொஹ் சிதோஷ்ண-  சுக- துக்ஹெஷு சமாஹ் சங்க-விவர்ஜிதாஹ்' 

உங்கள் மனதின் அமைதியை தளரவிடாதீர்கள். எங்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. எப்போது நண்பன் எதிரியாவான், எதிரி நண்பனாவான் என்று தெரியாது. ஒருவருக்கும் இந்த உலகத்தைப் பற்றி தெரியாது. உங்கள் கவனத்தை, உண்மையில் வைத்து உங்கள் கடமைகள் அனைத்தையும் சிரத்தையோடும், தியான உணர்வோடும், நேர்மையோடு செய்யுங்கள். 

கே:குருஜி, குருவை பௌர்ணமி தினத்தில் சந்திப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறதே?  

ஸ்ரீ ஸ்ரீ: ஆமாம். நிலவை கடல் பாதிக்கும்.முழு நிலவான பௌர்ணமி அன்று கடல் அலைகள் அதிகமாக இருக்கும். நிலவு நீரை பத்திக்கும்-இது அனைவருக்கும் தெரியும் நம் உடல் நீரால் ஆனது. சுமார் அறுபது சதவிஹிதம் தண்ணீரால் ஆனது, கடலை போல் உப்புநீர் கொண்டது. உங்கள் உடல் சின்ன அளவிலான கடல் நீர் கொண்ட காப்ஸ்யூல் போன்றது. எனவே நிலா உங்கள் உடலில் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. உங்கள் உடல் உங்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது.

மனபாதிப்பிற்கு உள்ளானவர்கள், பித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த வார்த்தையான லுனடிக்ஸ் அதையே விளக்குகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் ஏகாதசி (இந்து மத காலெண்டரில் பதினோராவது சந்திர நாளில்) நாளில் உபவாசம் இருக்கும்படி கூறுகிறார்கள். ஏனெனில் நம் வயிறு காலியாக இருக்கும் போது நம் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மறைந்து விடுகிறது. உபவாசம் உடலை சுத்தீகரித்து, உடலில் உள்ள ஜீரணமாகாத உணவுப் பொருட்களையும், நச்சு பொருட்களையும் நீக்கி விடுகிறது. 

பௌர்ணமிக்கு மூன்று நாள் முன்பு நீங்கள் உபவாசம் இருந்தால்,பௌர்ணமி அன்று உங்களுக்கு எந்த நோயும் இருக்காது-இது நம்பிக்கை.நீங்கள் ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்றும் உண்ணா விரதம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. குறைந்தது நீங்கள் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று ஏகாதசி தினங்களில் உண்ணாவிரதம் இருந்தாலே நல்லது. 

கே: உங்களைப் போல் சக்தி வாய்ந்தவராக நான் எப்படி மாறுவது? இவ்வுலகில் எல்லோரும் சக்தியையே விரும்புகிறார்கள்? 

ஸ்ரீ ஸ்ரீ: பெரிய சக்தி என்பது ஓய்வே. ஆழமான ஓய்வும், அன்பும் தான். இந்த இரண்டும் வாழ்வில் இருந்தால் மற்றதெல்லாம் தானாகவே வரும் அது நடக்கும். பாருங்கள், இப்போது நீங்கள் எனக்கு சொந்தம், நான் உங்களுக்கு சொந்தம், இப்போதே நீங்கள் அந்த நிறைவை உணர வேண்டும். உங்களிடம் அனைத்தும் உள்ளது, ஒன்றுமே குறையில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உங்கள் வாழ்வில் ஒரு குறையோ, சறுக்கலோ இருந்தால் தியானமும் உங்கள் சாதனாவையும் செய்யுங்கள். உங்கள் நடைமுறை பயிற்சிகளை கொண்டு அதை வென்றுவிடலாம். 

கே:  குருஜி, பாதையில் ஒருவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு,நோக்கம் மற்றும் இலக்குளை விட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நான் வேலையில் ஒரு நிர்வாகியாக இருக்கிறேன், நோக்கம் இல்லாமல் நான் எப்படி பொறுப்பாக இருப்பது? 

ஸ்ரீ ஸ்ரீ: பிரவித்ரி, நிவ்ரிதி என்று இரண்டு விஷயங்கள் உள்ளன. இரண்டையும் கலக்க கூடாது. இரண்டு கருத்துக்களில் நாம் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று, நாம் மனதின் உள்நோக்கி செல்லும்போது (நிவ்ரிதி), எல்லாம் நன்றாக இருக்கிறது, நான் எதையும் விரும்பவில்லை என்று  தோன்றும் இது தியானம் வெளியே நீங்கள் வேலை செய்யவேண்டும் என்றால் (பிரவர்த்தி),  அப்போது நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையை எதிர்பார்ப்பீர்கள். அப்போது உங்கள் முழு கவனத்தையும் வைத்து பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள். 

ராமரும், கிருஷ்ணரும் கூறுவது இதைதான் நீங்கள் வெளியுலகில் வேலை செய்யும் போது (பிரவர்த்தி), ஒவ்வொரு சின்ன விஷயமும் பூரணமாக இருக்க முயற்சி செய்யலாம். குறை  இருந்தால் அதை எப்படி நிறைவு செய்வது என்று தீர்மானிக்கலாம். பிறகு நாம் அதிலிருந்து விலக நினைக்கும் போது,'சரி எல்லாம் சரியாக உள்ளது' என்று எண்ணி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடலாம். இதுதான் நிவ்ரிதியின் பாதை. அதனால் தான் யார் ஒருவர் பிரவ்ரிதி, மற்றும் நிவ்ரிதி இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அறிந்தவர் சாத்வீகமான அறிவுடையவர். அவரே அறிவாளியாவார் 

அறிவாளியின் மற்ற செயல்கள் என்ன?-யார் ஒருவர் கெட்ட மனிதரிடமும் நல்லதையே பார்ப்பது தான். நீங்கள் சிறைச்சாலைக்கு சென்றால் அங்குள்ள பெரிய குற்றவாளியிடம் நல்ல குணத்தையே பார்ப்பீர்கள். குற்றத்திலும் நல்லதை பார்ப்பதே அறிவான செயல். எனவே அறிவாளி, குற்றமுள்ளவரிடமும் நல்லதையே காண்பான், ஆனால் அறிவிலி நல்ல திறமையான மனிதரிடமும் ஏதாவது ஒரு குறையை கண்டறிவான். அப்படி செயபவர்களும் இருக்கிறார்கள். 

அமெரிக்காவில் ஒருவர் ராமகிருஷ்ண பிரமஹம்சர் ஒரு பைத்தியம் என்று புத்தகம் எழுதினார். அவர் ராமகிரிஷ்ணரிடம்,விவேகானந்தரிடமும் எதிர்மறை எண்ணங்கள் இருந்ததாகவும்,அதுபோல் இந்து துறவிகள் அனைவரிடமும் ஏதோ ஒரு எதிர்மறை எண்ணங்களும் இருப்பதாகவும் புத்தகம் எழுதியுள்ளார். இது போல் நல்ல மக்கள் பற்றி குறைகூறுவது முட்டாள்தனத்தின் அறிகுறி. அறிவாளியின் செயல் தவறு செய்யும் மக்களையும் வாழ்வில் உயர்த்துவது. 

கே: பகவான் கிருஷ்ணர் மரியாதையுள்ள, எல்லையற்ற, அழகான, கருணையுள்ள பல ரூபங்களில் உள்ளார், எனினும் நாம் ஏன் பெரும்பாலும் அவரை மன்மோஹனா (மனதை கவர்பவன் என்றே வழிபடுகிறோம்? 

ஸ்ரீ ஸ்ரீ: இல்லை, நீங்கள் குஜராத் மாநிலம் சென்றால் அவரை ரஞ்சொட்றல் என்று வழிபடுவர். சிலர் பாலகிருஷ்ணர் (குழந்தையாக) வழிபடுவர். எனவே, நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ! அப்படி வழிபடலாம்.கிருஷ்ணர்' என்னை எந்த ரூபத்தில் வழிப்பட்டாலும் நான் அந்த ரூபத்தில் அவர்களை அடைகிறேன்' என்கிறார்.நாம் இப்போது அவரை பகவான் கிருஷ்ணர் என்கிறோம், ஆனால் அவர் காலத்தில் அவரை தவறாக பேசியவர்களும் உண்டு.

அவரை புரிந்துகொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே.அவரே,' அவஜானந்தி மாம் முதா மநுசிம் தனும் அச்ரிதம்; பரம் பாவம் அஜநந்தோ மம பூத- மகேஸ்வரம்.' என்று கூறுகிறார். இந்த முட்டாள்கள் என்னை புரிந்து கொள்ளமாட்டார்கள்,அவர்கள் என்னை உடலாக கருதுகிறார்கள். அவர்கள் என் அவதரிப்பை உணராமல் என்னை மனித பிறவி என்றே எண்ணுகிறார்கள். 

இதைத்தான் அவர் கூறுவார் அதனால் தான் கடவுள் எல்லா இடத்திலும், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும், உன்னிலும், என்னிலும் எல்லோரிடமும் இருப்பதாக கருதப்படுகிறது  அவர் எல்லோருள்ளும் இருப்பதால் அவரை 'பரமாத்மா'(கடவுள்) என்கிறோம்.