தன்னை காலியாக, வெற்றிடம் போல் வைத்திருப்பவனே சீடன்


டிசம்பர் 12, 2011

கேள்வி: தியானம் செய்து கொண்டிருந்த போது என் மனம் கரைந்து போனதை என்னால் உணர முடிந்தது. ஆனால் இந்த மனம் எங்கிருந்து தான் வந்தது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த மனமே நம் பகைவன், மனமே நம் நண்பன்நம் சொல்படி கேட்டு நடந்தால் மனம் நம் நண்பன், அப்படி இல்லாமல் அங்கும் இங்கும் தானாக அலைந்து திரிந்தால் இந்த மனமே நம் பகைவன். ஆகவே, இவ்வுலகில் நம் மனதை விட பெரிய பகையாளி வேறு யாரும் இருக்க முடியாது.

கேள்வி: மகாபாரதப் போரின் போது பல திறமைசாலிகளையும் அறிஞர்களையும் நாம் இழந்தோம், அதனால் அந்தப் போருக்குப் பிறகு இந்தியாவின் வீழ்ச்சி தொடங்கியதாக ஒரு கருத்து உண்டு. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எல்லா போர்களிலுமே திறன், வளம், மக்கள், கலாசாரம், போன்றவை அழிவை சந்திக்கின்றன என்பது உண்மை தான் ஆனால் பாரதப் போருக்குப் பிறகு இந்தியாவில் திறமைசாலிகள் யாரும் இல்லை என்று சொல்வது சரியல்ல. 

சாணக்கியர், சங்கராச்சாரியர், கௌடபாதாசாரியர், சுக மகரிஷி போன்ற பலர் பாரதப் போர் முடிந்து பல காலம் கழித்து வந்தவர்கள் தான்ஆகவே இது முழுமையான உண்மை அல்ல, சிறிதளவே உண்மை.

கேள்வி: கிருஷ்ணர், பகவத் கீதையில், தான் அனைவரையும் விரும்புதாகவும், எவரையும் வெறுப்பதில்லை எனவும் சொல்கிறார். பிறகு கீதையிலேயே வேறொரு இடத்தில் தனக்கு ஒரு சிலர் மிகவும் பிரியமானவர்கள் என்றும் கூறுகிறார். இந்த இறு வேறு கூற்றுகளை தயவு செய்து விளக்குவீர்களா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இது தான் கிருஷ்ணரின் தனித்தன்மை, முரண்பாடாக பேசி குழப்பத்தை உண்டு செய்வது!வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்காக இந்த இரு வேறு வாக்கியங்களை பேசினார், இரண்டுமே சரியானவை தான். அமைதி, கருணை, ஆனந்தம், அன்பு ஆகிய குணங்களுடன் விளங்கும் மனிதர்கள்  தனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று ஒரு நிலையிலிருந்து சொல்கிறார். ஆகவே நீங்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் -- இது உண்மையே.மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘என்னை தெரிந்து கொண்டதாக நினைக்க வேண்டாம், எனக்கு விருப்பு வெறுப்புகள் ஏதுமில்லை. அனைவரும் எனக்கு பிரியமானவர்களே, 
அனைவரிலும் நான் என்னையே காண்கிறேன்.’ என்று கூறுகிறார்.

பகவத் கீதையைப் போன்ற முரண்பாடுகள் நிறைந்த புத்தகத்தை நீங்கள் எங்கும் படிக்க முடியாது, முரண்பாடுகள் நிறைந்துள்ள காரணத்தாலேயே பகவத் கீதை முழுமையான உண்மைகள் கொண்டதாகிறது.

கேள்வி: வெவ்வேறு வகையான தியானங்களின் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அனைத்து தியானங்களின் நோக்கமும் உங்களை உங்கள் மையத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பது தான், அகத்தில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்த அந்த நிலைக்கு கொண்டு வருவது தான்.உங்கள் மனம் இங்கும் அங்கும் அலைந்து திரிவதால் அதைப் பிடித்து கொண்டு வருவதற்காக பல்வேறு வித்தைகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

கேள்வி: குருஜி, எங்களுக்காக நீங்கள் எவ்வளவோ அருள் புரிய தயாராக உள்ளதாகவும், அதை பெற்றுக்கொள்ளும் தகுதிதான் எங்களுக்குத் தேவை என்றும் எப்போதும் கூறுகிறீர்கள்அதனால், ஒரு சீடர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு சீடன் தன்னை காலியாகவும் வெற்றிடம் போலவும் வைத்துக் கொள்ள வேண்டும்.அதே சமயத்தில், நீங்கள் என்ன கேட்டறிந்தாலும் அதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம்ஞானத்தை ஆராய வேண்டும், திரும்பத் திரும்ப கற்க வேண்டும்தெரிந்தாலும் தெரியாதது போன்ற மனநிலையில் இருங்கள். ‘எனக்கு தெரியும்என்ற ஆணவம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளவும். இயல்பாக, எளிமையாக இருந்தாலே போதும்.

கேள்வி: ‘அஹம் பிரம்மாஸ்மிஎன்பது இறுதியான ஞானமாக இருந்தாலும் பக்தி செலுத்துவதிலேயே மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. இறையும் தானும் ஒன்றே என்று உணர்ந்த பிறகு சலிப்பு தட்டி விடாதா? ஏனென்றால் களிப்படைய களிப்படைபவர், களிப்பு அளிக்கும்  பொருள் என்ற இரண்டும் தேவைப்படுகிறது. பக்தி தான் கடைசி படியா, அல்லது அதற்கு மேலும் செல்வதற்கு இருக்கிறதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமாம், ‘அஹம் பிரம்மாஸ்மிஎன்பதை ஒரு கருத்தாக மட்டுமே பார்த்தால்  அது சலிப்பு தருவது போன்று உள்ளது, ஆனால் உண்மையில் அந்த நிலை அப்படி அல்ல. அந்த நிலையை அடைந்த பிறகு பக்தி மார்க்கத்திற்கு தான் வந்தாக வேண்டும். அப்படி இல்லையேல் பக்தியே உங்களை அந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

கேள்வி: குருஜி, என் பிள்ளைகள் Art Excel பயின்று, கிரியா பயிற்சி தினமும் செய்து வருகிறார்கள். அப்படி இருந்தும் வீட்டிலிருந்து திருடுகிறார்கள். நான் என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கிரியா செய்த பிறகு சிறுவர்கள் தம் திருட்டுப் பழக்கத்தை உடனே நிறுத்திவிடுவார்கள் என்று கிடையாது. அவர்கள் கிரியா பயிற்சி செய்வது நல்லது தான், ஆனால் அவர்கள் திருட்டு வேலை செய்ய வேண்டிய தேவை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்அவர்களுடன் உட்கார்ந்து பேச வேண்டும்.கண்ணா,  உனக்கு ஏதாவது தேவை  என்றால் என்னிடம் கேள், உனக்கு என்ன தேவை என்றாலும் அதை கொடுக்க நான்  இருக்கிறேன்,’ என்று அவர்களிடம் சொல்லுங்கள்.பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்து, ‘இது உன் பணம், உன்னிடமே வைத்துக் கொள். யாரிடமும் கொடுக்காதே,’ என்று சொல்கிறார்கள், பொதுவாக இப்படித்தான் பழக்குகிறார்கள்.

பிள்ளைகள் பள்ளிக்கு மதிய உணவு கொண்டு செல்லும் போது, ‘இதோ பார், இது உன் சாப்பாடு,
நீ மட்டும் சாப்பிடு, உன் நண்பர்களிடம் கொடுத்து விடாதே,’ என்று சொல்லி அனுப்புகிறோம்.
இம்மாதிரி சொல்லி வளர்ப்பதால் பிள்ளைகளிடம் இயற்கையாகவே உள்ள தயாள குணத்தை
நாம் கெடுக்கிறோம்.நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டில் ஒரு பாத்திரம் இருக்கும், அதில் தான் பணம் வைக்கப்பட்டு இருக்கும். எங்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும் அந்த பாத்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொள்வோம், தேவையானதை செலவு செய்து விட்டு மிஞ்சுவதை மறுபடியும் பாத்திரத்தில் போட்டு விடுவோம்.

இது என் பணம், இதை என் சட்டைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும்,’ என்பது போன்ற எண்ணங்களெல்லாம் எங்களுக்கு வந்ததே இல்லைவீட்டில் பல நபர்கள் வாழ்ந்து வந்தாலும் யாரும் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சத்தை பாத்திரத்தில் போட்டு விடுவார்கள். அனைவருக்கும் பொதுவான ஒரே ஒரு கஜானா தான் வீட்டில் இருந்தது. இது போன்ற கலாசாரம் தான் பிள்ளைகளுக்கு வீட்டில் பழக்கப்பட வேண்டும்ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போட்டு வையுங்கள். இப்படி செய்வதால் பிள்ளைகள் 
ஒற்றுமையுடனும் வளர்வார்கள்.

கேள்வி: குருஜி, திருமணமான பெண்கள் லலிதா சஹஸ்ரநாமம் ஓதக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா? தயவு செய்து சொல்லி விளக்குங்கள்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடுகிறார்கள்.திருமணமான பெண்கள் லலிதா சஹஸ்ரநாமம் ஓதக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். சிவ லிங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று வேறு சிலர் சொல்கிறார்கள். பெண்கள் ஓம் நம சிவாயஎன்று ஓதக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள்.
இவற்றில் எதுவுமே உண்மையில்லை, சாஸ்திரங்களில் எந்த இடத்திலும் இது போன்றெல்லாம் சொல்லப் பட வில்லை.நல்லவற்றை எல்லோருமே படித்து ஓத வேண்டும். இது போன்ற மூட நம்பிக்கைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

இந்த நாட்களில் நம்பகமான பண்டிதர்களையும் புரோகிதர்களையும் தேடிப் பிடிப்பதே கடினமாக உள்ளது. பல சமயங்களில், திருமண சடங்குகள் நடத்த வரும் புரோகிதர் இறுதி காரியங்களுக்கான மந்திரங்களை ஓதி விடுகிறார், அவர் என்ன ஓதுகிறார், எந்த சடங்குக்கு எந்த மந்திரம் என்பது போன்றவையெல்லாம் யாருக்கும் புரிவதில்லை. புரோகிதர் வந்தார், மந்திரம் ஓதினார், நம்
வேலை முடிந்தது, அவ்வளவு தான்.

இப்படி நடத்தப்படும் சடங்குகளிலும் இப்படி ஓதப்படும் மந்திரங்களிலும் எந்த நம்பகத் தன்மையும் இல்லைமேலும் பல சமயங்களில் சடங்குகளை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று நமக்கு ஒரே அவசரம். ‘புரோகிதரே, சீக்கிரம் ஆகட்டும்!’ என்று அவசரப் படுத்துகிறோம்ஓதப்படும் மந்திரங்களை உட்கார்ந்து கேட்பதற்கோ, அம்மந்திரங்களின் அர்த்தங்களை புரிந்து கொள்வதற்கோ நம்மிடம் கரிசனம் கிடையாது.

கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது, ஆனால் நம் நாட்டில் பண்டிதர்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை.அதனால் தான் நாம் வேத விஞ்ஞான மகாவித்யாபீடம்என்ற பாடசாலையை நிறுவியுள்ளோம்,  திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளை வேத தர்ம சமஸ்தானத்தின் படி நடத்தி வைக்கக் கூடிய பண்டிதர்களை பயிற்றுவிப்பதற்காகவே. இதனால் மக்களுக்கு திருமணங்களின் உண்மையான அர்த்தமும் பலனும் கிடைக்கும். தாலி கட்டப்படுவது மட்டுமே திருமணம் அல்ல, சப்தபடி சுற்றுதல் திருமணத்தில் முக்கியமானது. ஏழு படிகளை இருவரும் ஒன்றாக முடிக்கும் வரை திருமணம் நடந்ததாகாது, சப்தபடியின் அர்த்தத்தை புரிந்து கொள்வது முக்கியமானது.

இதில் விருப்பமுள்ளவர்கள் இங்கே வந்து இரண்டு மாத பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்,  நான் உங்களை வரவேற்கிறேன்.அதன் பிறகு திருமணம், பெயர் சூட்டு வைபவம், கிரகப்பிரவேசம், உபநயனம், இறுதி காரியம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் தகுதி உங்களுக்கும் கிட்டும்.ஒருவர் இறந்த பிறகு நடத்தப்படும் சடங்குகள் அதிசயிக்கத்தக்கவை.இந்த சடங்கில் எள்ளும் நீரும் அளிக்கப்படுகிறது, இதன் அர்த்தம் என்னவென்றால், ‘நீங்கள் இறந்த பிறகும் உங்களை பந்தப்படுத்தும் இந்த ஆசைகள் மிகவும் சிறியவை, இவற்றை விட்டுவிட்டு விடுதலை அடையவும்! உங்களுக்காக இந்த ஆசைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்,’ என்று கூறுவது. அதனால் தான் இதை தர்ப்பணம் என்று அழைக்கிறோம்இந்த சடங்கை மகனோ, மகளோ நிறைவேற்றலாம். இப்படி இறந்தவர் தன் பந்தங்களை விட்டுவிட்டு விடுதலை அடையுமாறும், அவர் விட்டுச் சென்றதை நாம் நிறைவேற்றுவோம் என்றும் கூறவதற்காகவே தர்ப்பணம் நடத்தப்படுகிறது.

இந்த சடங்குகளெல்லாம் மிகவும் முக்கியமானவை, ஆனால் எல்லாவற்றையும் நாம் மறந்துவிட்டோம். இப்போது வாழும் கலை நிறுவனத்தில் இவற்றை மீட்டு பயிற்றுவிக்கிறோம்.

கேள்வி: குருஜி, ஒருவர் தான் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தோல்வியை சந்தித்தால், குருவிடம் வந்த பிறகும் கூட மேலும் மேலும் தோல்வியை  சந்தித்தால் என்ன தான் செய்வது? இம்மாதிரியான சூழ்நிலையில் எப்படிப்பட்ட ஞானத்தை பயன்படுத்துவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இப்படியே நடந்தால், ஒவ்வொரு முறை உங்கள் திட்டம் தோல்வியடையும் போதும் சந்தோஷப்படுங்கள், ‘இன்று என்னுடைய இந்த திட்டம் தோல்வியடைந்தது!’ என்று சொல்லிக்கொண்டு அதை அர்ப்பணித்து சரணடைந்து விடுங்கள்.

உங்கள் தோல்வியையே உங்களால் துறக்க முடியவில்லை என்றால் வெற்றியை எப்படி துறக்கப் போகிறீர்கள்எதிலாவது தோல்வியடைந்து விட்டால் அதை ஏன் விடாமல் பற்றிக் கொள்கிறீர்கள்? விட்டுவிட்டு விடுதலை அடைவீராகஅதன் பிறகு நான் பற்றற்றவன்!’ என்று உம்மால் சொல்ல முடியும்.

நீங்கள் வெற்றிகரமாக இருந்தால், செய்வதற்கான வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்கும். தோற்றவராக இருந்தால் பிரச்சனையே இல்லைசெய்யும் வேலை தவறினாலும் உங்கள் இதயம் கவலையால் தவறிவிடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.


கேள்வி: குருஜி, நெருக்கமான ஒருவர் இறந்து, பிறகு மறுபிறவி எடுத்துவிட்டாலும் கூட நாம்  அவர் பெயரில் தர்ப்பணம் செய்வதை தொடர்கிறோம். இப்படி இருக்கும்போது நம் காணிக்கை  எங்கு போய்ச் சேரும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பண்டைய கால மக்கள் உள்ளுணர்வு மிக்கவர்கள், இறந்து போன அவர்களது உறவினர் மறுபிறவி எடுக்கும் போது அதை அறிந்து கொண்டு தர்ப்பணம் செய்வதை நிறுத்தி விடுவார்கள்ஆனால் இன்றைய நாட்களில், ஒரு ஆத்மா மறுபிறவி எடுத்ததா இல்லையா  என்பது நமக்கு தெரிவதில்லை. ஆகவே தர்ப்பணம் செய்வதை தொடருங்கள். நம் முன்னோர்களை நினைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை, நல்ல விஷயம் தான்கபீர் தாஸ் சொன்னார், நாம ஜபம் செய்வதை ஏன் விட்டுவிட்டாய்? கோபத்தை விடவில்லை, பொய் சொல்லுவதை விடவில்லை, மெய்யான இறைவனின் பெயரைச் சொல்வதை மட்டும் ஏன் விட்டுவிட்டாய்?’