நீ (மந்திரம்) உச்சாடனம் செய்தால், உன்னால் மனச் சோர்வாக இருக்க முடியாது.



டிசம்பர் 5 , 2011

கே: குருஜி, சிலநேரங்களில்,மக்கள் சாதரணமாக ஈடுபடும் விசயங்களான பட்டம் பெறுவது ஒரு வேலையில் அமர்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெறுவது ஆகியவற்றில்  என்னுடைய வாழ்கையை வீணடிப்பதாக உணர்கிறேன். நான் உலகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும்.அதே சமயம், என் பெற்றோர் மற்றும் மனைவியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஆமாம், நீ உன் சொந்த வாழ்க்கைக்கு பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் உலகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். இப்பொழுது, அவைகள் முரணபாடானவைகள் என நீ நினைத்தால், நீர் ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்க முடியாது. முதலில், அவைகள் முரண்பாடானவைகள் அல்ல என நினை. நீ ஏற்கனவே திருமணமாகி இருந்து, உன்னுடைய மனைவி குழந்தைகளின் பொறுப்பு ஏற்று கொண்டிருந்தால், அதை சரிவர கவனிக்க வேண்டும் அதோடு உங்கள் வாழ்கையின் தர்மத்திற்காக, ஞானதிற்க்கான சமூக பொறுப்பையும் ஏற்று கொள்ளுங்கள்.

உன்னால் இரண்டையும் செய்ய முடியும் என அறிந்து கொள். நீங்கள் மணமாகாதவராக இருந்து,உங்கள் வாழ்கையின் 100% அற்பணிக்க விரும்பினால் அது மிகவும் நல்லது. நீங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் எங்கும் செல்ல சுதந்திரம் கொண்டுள்ளீர்கள், மற்றும் உலகினை பற்றிய பொறுப்பையும் எடுத்து கொண்டு பெரியதாக எதாவது சாதியுங்கள்.

கே: குருஜி, சிலநேரங்களில், சேவை ,சத்சங் மற்றும் ஞானம் ஆகியவற்றால் அலுத்துவிட்டதாக உணர்கிறேன். என்னிடம் ஏதேனும் தவறு உள்ளதா, நான் சரியான பாதையில் செல்கிறேனா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: யோக பாதையில் 9 தடைகள் இருப்பது உங்களுக்கு தெரியும். நான் ஏற்கனவே இதை பற்றி பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூறியிருக்கிறேன்.வியாதி,ஸ்தயான,சம்சய, ப்ரமதா,அலஷ்ய, அவிறடி, ப்ரந்தி, தர்சன, அலப்த பூமிகத்வ மற்றும் அனவஸ்திதத்வா (Vyadhi, Styana, Samsaya, Pramada, Alasya, Avirati, Bhranti Darsana, Alabdha bhumikatva and Anavasthitattva). இவை ஒன்பது தடைகள். உடல் நோய், மன சோம்பல் (mental inertia ),தேர்ந்து எடுத்து செல்லும் பாதையை பற்றி மனதில் தோன்றும் சந்தேகங்கள், எந்த நிலையையும் அடையாமலிருப்பது, எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. இவை அனைத்தும் தற்காலிக தடைகள் அனைத்து யோகிகளுக்கும் ஏற்படுவது. 

ஆனால், ஒரு சீரான பக்தியுடன் தொடர்வீர்களேயானால், இந்த தடைகளை தாண்டி வரமுடியும்.இது ஒரு பெரிய விஷயம் அல்ல, அவை வரும், போகும். உங்களில் பலருக்கு இந்த பிரச்சினை இருந்து இருக்கும். சிலநேரங்களில், உங்களுக்கு தியானம் செய்யும் நோக்கமே இருக்காது.அதன் பிறகு திடீரென தியானம் ஆழமாக நிகழும். அல்லது சில நேரங்களில் நிறைய சந்தேகங்கள் வரும், திடீரென ஒரு நாள் எல்லாம் மறைந்து விடும்.

கே: குருஜி, "நீங்கள் எங்கும் உள்ளீர்கள், இருந்தும் எங்கும் இல்லை, நீங்கள் எங்கும் இல்லை இருப்பினும் எங்கும் இருக்கிறீர்கள்" இதன் நுட்பம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: காலி மற்றும் வெற்றிடம்.நிதானமாக விட்டு விடுங்கள். "நான்" என்ற அகங்காரம் அதாவது" நான் "எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டவன் என்ற உணர்வு. அது, நான் முழுமையின் பாகமாகவும் இல்லை, முழுமையாகவும் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

கே: குருஜி, நான் என்னுடைய செயல்களின் பலன்களிலிருந்து எப்படி சுதந்திரமாக இருப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: உன்னுடைய கடந்த கால செயல்களை சரணகதியாக்கும் பொழுதும்,மற்றும் எதிர்வரும் நிகழ்வுகளை ஏற்க தயாராக இருக்கும் பொழுதும்,நான் எதாவது திருடிவிட்டு  சொல்கிறேன்," ஆமாம் நான் திருடிவிட்டேன், நீங்கள் என்ன தண்டனை தருகிறீர்களோ தாருங்கள்." அந்த தண்டனையை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன். உண்மையான சரணாகதியின் அர்த்தம் இதுதான்.

நான் திருடி இருக்கிறேன், ஆனால் என்னை தண்டிக்க வேண்டாம், இது சரணாகதியல்ல. நீ தண்டனையை ஏற்று கொள்ள தயாராக இருக்கும் பொழுது, தண்டனை தருபவர் சொல்கிறார்,  "இல்லை, உன்னை தண்டிக்க மாட்டேன்", மற்றும் உன்னை செயல்பாட்டின் விளைவில் இருந்து விடுவிக்கிறார். உன் மூலமாக ஏற்கனவே ஒரு(தகாத) செயல் நிகழ்ந்திருக்கிறது, அதற்கான பலனும் ஏற்பட்டிருக்கிறது ஆகையால், அதற்கு மாற்று மருந்தாக, ஒரு நல்ல செயலை செய், இது பிராயசித்தா என்று அழைக்கப்படுகிறது. உதரணத்திற்கு நான் ஏதாவது தகாத வார்த்தை பேசி இருந்து,அது யாரையாவது புண்படுத்தி இருந்தால், நான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதை ஒரு குரு கொடுக்க முடியும், அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர் கொடுக்க முடியும் அல்லது உங்களது உள்ளுணர்வின்படி நீங்கள் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கலாம்." நான் நிறைய மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பேன்" அல்லது "நான் நல்ல பல வேலைகளை செய்வேன்"..

கே: குருஜி, பகவான் கிருஷ்ணர், பகவத் கீதையில் ‘Ananyashchinta yanto mam ye jana pari upaasate teshaam nitya bhi yuktanaam yogakshemam ahaamyaham.’ என்று சொல்லி இருக்கிறார் இதன் பொருளென்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: யார் ஒருவர் என்னை, என்னை மட்டுமே தன் மனத்திலும், இதயத்திலும் வைத்துள்ளாரோ , அவரை (உலக பாரத்தில் இருந்து) விடுவித்து விடுவேன், அவர் பெற்றுள்ளதை பாதுகாப்பேன், அவருக்கு தேவையானதை கொடுப்பேன்....

கே: குருஜி, மாங்கல்யத்தின் முக்கியத்துவம் என்ன? ஏன் திருமணத்திற்கு பிறகு அதை அகற்ற கூடாது என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள்? அதை அணியாமல் இருக்கலாமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஒரு முறை, நான் பாரிசிலிருந்து வந்த பொழுது, விமானத்தில் ஏற இருந்தேன். ஒரு பெண்மணி வந்து, தன்னுடைய மோதிரத்தை காண்பித்து என்னிடம் கேட்டார், இது அவசியமானதா? நான் அந்த பெண்மணியை பார்த்து சொன்னேன், " இல்லை இது அவசியமில்லை, உனக்கு மோதிரம் தேவை இல்லையெனில், அது சரி தான்." என்னை பொறுத்த வரை அதை ஒரு வெறும் மோதிரம் என்று தான் பார்த்தேன். அவர் திரும்பி சென்று, அவரது கணவருக்கு விவாகரத்து கடிதம் அனுப்பினார். அவருடைய கணவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார், "குருஜி என்னை விவாகரத்து செய்ய சொல்லி ஏன் மனைவியிடம் சொன்னீர்களா? " நான் சொன்னேன் " நான் அப்படி ஏதும் செய்யவில்லை, அவர்களை தொலைபேசியில் அழையுங்கள்". அந்த பெண்மணி சொன்னார் "குருஜி, விமான நிலையத்தில், இது அவசியமானதா என்று கேட்ட பொழுது, நீங்கள் வேண்டாம் என்று சொன்னீர்கள்". அந்த மோதிரம், அவளுடைய திருமண மோதிரம். ஆகையால், மேற்கில், நீங்கள் உங்கள் திருமண மோதிரத்தை நீக்கிவிட்டீர்கள் என்றால், நீங்கள் ஒரு காலத்தின் அன்பான இதயத்திற்கு பிரியா விடை கொடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம்!. 

திருமணத்தில் ஒரு புனிதத்துவம் இருக்கிறது. அந்த புனிதத்துவத்தை நிலை நாட்ட மாங்கல்யம் அணிகிறார்கள். மாங்கல்யம் என்றால் மங்களகரத்தின் நூல்.தர்மத்தின் பாதையில் நடப்பதற்கான ஒரு பிடிமானம், ஆகையால் அதை அகற்ற கூடாது, 

அது உங்களிடமே இருக்க வேண்டும்.மங்களகரம் உங்களிடமிருந்து நீங்க கூடாது என்று நீங்கள் விருப்படுவதனால், மக்கள் அந்த மனோபாவத்திற்கு இணைந்து உள்ளார்கள், அது அணியப்படுகிறது. அதே நேரத்தில் சில மூடநம்பிக்கைகளும் அதில் உள்ளன.யாரோ ஒருவர் அறுவை சிகிச்சைக்கு செல்லும் பொழுது,மருத்துவர் சொல்கிறார் நீங்கள் உங்கள் ஆபரணங்களை நீக்க வேண்டும் அதற்கு அவர்கள் சொல்கிறார்கள் "அதை எப்படி அகற்றுவது, அது மங்களகரமானது, என்னால் நீக்க முடியாது" 

நீங்கள்அது போன்ற ஒரு மன மற்றும் உணர்ச்சி கொந்தளிப்புக்கு ஆளாக வேண்டாம். அது ஒரு வெறும் நூல், அல்லது மற்ற சங்கிலியை போல ஒரு சங்கிலி. ஆகையால், அவசியம் ஏற்பட்டால் அதை நீக்கலாம்.அது ஒரு விஷயம் இல்லை. ஆனால் பொதுவாக ஒரு புனிதத்துவம் அதோடு உள்ளது.ஆகையால் அதை அணிவது நல்லது.

கே: குருஜி, நான் பலமுறை முட்டாளாக்கப் பட்டிருக்கிறேன். நான் புத்திசாலியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் முட்டாளாகப்படும் போது, உங்களுக்கு புத்திசாலித்தனம் இல்லாதது மட்டும் காரணம் அல்ல, ஆனால் உங்களுடைய பேராசையும் கூட. மிகவும் பேராசை கொண்ட மக்கள் வேகமாக முட்டளாக்கபடுகிறார்கள். அதை தான் நான் கவனித்தேன்.நீங்கள் அதிகமான குறிக்கோள்களுடன் மற்றும் பேராசையுடன் இருந்தால், உங்களை முட்டாளாக்குவது எளிது. ஆனால், நீங்கள் மையத்தில், அமைதியாக மற்றும் நிலையாக இருந்தால் அது போல ஏமாற்றுவது கடினம்.

கே: குருஜி, மற்றவர்களிடம் இருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நாம் எதிர்பார்த்தால், அது சரி, ஆனால், அது நடக்கவில்லை என்றால்,பரவாயில்லை. ஓய்வாக இருங்கள்.

கே: குருஜி, நான் ஒரு உறவில் சிக்கி கொண்டு இருக்கிறேன். ஆனால் இப்பொழுது, என்னை சேவை செய்வதிலிருந்து நிறுத்தி வைத்திருப்பதை நான் உணர்கிறேன். நான் உண்மையில் அதிலிருந்து வெளியே வரவேண்டும், அது மிகவும் கடினம். நான் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: (மந்திரத்தை) உச்சாடனம் செய்யுங்கள்! நீங்கள் உச்சாடனம் செய்தால், மனவருத்தத்தில் ஆழ்ந்திருக்க இருக்க முடியாது.

நீங்கள் "ஓம்" என உச்சாடனம் செய்யும் பொழுது அது உணர்வு மையங்களை அமைதி படுத்துகிறது. அதனால் மனவருத்தம் மறைந்து விடுகிறது.நீங்கள் பொருளுலகில் அதிகமாக மூழ்கியிருக்கும் காரணத்தினால்.மனதுயரத்தில் மூழ்கி இருக்கிறீர்கள் .இரவும் ,பகலும் உங்களைப்பற்றியே நினைத்திருப்பதால்தான் இத்துயரம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனில், நீங்கள் காலையில் எழும்போது "நான் என்ன சேவை செய்ய முடியும்". இந்த மக்களுக்கு, அல்லது இந்த உலகத்திற்கு அல்லது இந்த ஞானத்திற்கு அல்லது இந்த நிறுவனத்திற்கு நான் எப்படி மிகச் சிறந்த உபயோகமாக இருக்க முடியும்.

இப்படி எதுவும் இல்லையெனில், நான் குருஜிக்கு எப்படி உபயோகமாக இருக்க முடியும்?. குறைந்தது அப்படியாவது நினையுங்கள், உங்கள் கவனம் இந்த திசையில் இருந்தால், மற்றும் நீங்கள் உச்சாடனத்தை தொடர்ந்து செய்தால், இந்த வாழ்க்கை தற்காலிகமானதுதான் மற்றும் இங்கே எல்லாமே மறைந்து விடும் என்று த்யானம் மூலமாக அறிந்து கொள்வீர்கள் மற்றும் "ஓம் நம சிவாய" உச்சாடனம் செய்யுங்கள் உங்களை கவலைகள் வாட்டாது. துயரூட்டும்எதிர்மறை சக்திகள் மறைந்து விடும்...

அதனால் தான், பண்டைய காலத்தில் சந்தியாவந்தனம் தினமும் மூன்று முறை செய்துவந்தனர். காலையில் எழுந்தவுடன் சூரியனை பார்த்து, அது உங்களுக்காக கொண்டு வரும் அழகான நாளை நினைவு கூறுங்கள் .நாம் வாழும் பூமி க்ரஹதிர்காகவும், நம் நல்வாழ்க்கைக்காகவும் சூரியனுக்கு நன்றி கூறுங்கள் . நம்முடைய வாழ்க்கை மற்றும் கோள்கள் சூரியனை சார்ந்து இருக்கின்றன. ஆகையால் நீங்கள் சூரியனுக்கு நன்றி செலுத்துங்கள்.

மீண்டும் மதியத்தில் சந்தியாவந்தனம் செய்யுங்கள், மீண்டும் மாலையில் நடந்து முடிந்த அழகான நாளுக்காக சூரியனுக்கு நன்றி செலுத்துங்கள் மற்றும் நீங்கள் முழு பிரபஞ்சத்தோடு இணைந்திருப்பதை உணருங்கள்.இதை நீங்கள் செய்தால், மன வருத்தம் அடைவதற்கான கேள்வியே இல்லை.

நீங்கள் முழு பிரபஞ்சத்தோடு இணைந்திருப்பதை உணராதபோது, நீங்கள் மிகச்சிறியதிற்காக ஆசைபடும் மிகசிறியவர் என நீங்கள் நினைப்பீர்கள். மற்றும் நான் பலவீனமானவன், எனக்கு இது தெரியாது மற்றும் எனக்கு இது இல்லை என்று கூறிக்கொண்டு உங்கள் சொந்த பலவீனங்களால் நீங்கள் சோர்ந்து போவீர்கள். நான் தியானதிற்க்காக அமர்கிறேன், கிரியா செய்கிறேன் ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லை, இந்த விதமான பலவீனங்கள் உங்களுடைய சிறிய மனப்பான்மையை காண்பிக்கிறது. இதிலிருந்து வெளி வாருங்கள். நான் இதிலிருந்து வெளி வருவேன், என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என்று பொறுப்பெடுத்து கொள்ளுங்கள்.

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நினைக்கும் மக்கள் எல்லோருக்கும், இது முட்டாள் தனம் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் உங்களுடைய சந்தோசத்திற்காகவும்மகிழ்ச்சிக்காகவும் , உங்களுடைய வசதிக்காகவுமே நீங்கள் வாழ விரும்பிகிறீர்கள்..உங்களுடைய வாழ்கையை மிகச்சிறந்த குறிக்கோள்களுக்காக அர்ப்பணித்து விடுங்கள் உங்கள் மனக்கவலை மறைந்து விடும்,

நான் என்னுடைய வாழ்கையை கொடுக்கபோவதில்லை மற்றும் என்னுடைய வாழ்கையை உலகத்திற்காக, இந்த மனித சமுதாயதிற்காக மற்றும் நாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லும்பொழுது, மிகுந்த சந்தோசம் வரும். என்ன வந்தாலும் நான் போராடுவேன்.இந்த நினைப்பு மனக் கவலையுள்ள அனைவரும் இந்த உண்மையை உணர வேண்டும் என நினைக்கிறேன் , உச்சாடனம் அவர்களை உயர்த்தும்.இந்த உலகத்திற்காக, நாட்டிற்காக, கலாசாரத்திற்க்காக, தர்மத்திற்காக உங்களை நீங்கள் அர்பணித்து கொள்ளுங்கள் அல்லது இறைவனுக்காக, உயர்ந்த இருப்பிற்கு,புனிதமான ஞானத்திற்கு உங்களை நீங்கள் அர்பணித்து கொள்ளுங்கள். இந்த அர்பணிப்பின் மூலம் நீங்கள் இந்த துயர சுழற்சியிலிருந்து வெளிவரலாம்.