உறுதிமொழி இல்லாமல் வாழ்க்கையில், மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லை….


07
2011........................
Dec

கே: குருஜி, சிவ சூத்திரத்தில் "ஞானம் பந்தனம்" என்று சொல்லி இருக்கிறீர்கள், நான் குழப்பத்தில்  இருக்கிறேன், ஞானம் நம்மை விடுவிக்குமா அல்லது கட்டுபடுத்துமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தியானத்திற்கு பிறகு, உங்களுடைய உடல் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை உணரும் பொழுது, உங்களுடைய வரையறுக்கப் பட்ட மனம் ,வரையறுக்கப்பட்ட விசயங்களை மட்டும் புரிந்து கொள்கிறது. ஒரே நேரத்தில் வரலாறையோ,கணிதத்தையோ அல்லது வேதி யியலையோ மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒரு நேரத்தில் ஒரு விஷயம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அந்த குறுப்பிட்ட விசயத்தை பற்றிய ஞானம் உங்களை ஒரு அகன்ற பரப்பிலிருந்து ஒரு வரம்பிற்குட்பட்ட ஞான வட்டத்திற்குள் கட்டுபடுத்துகிறது. இது தான் வரம்பிற்குட்பட்ட ஞான கட்டுபாடு.

கே: உங்களுடைய நோக்கமும் செயலும் தூயதாக இருந்தும் , உங்களை எதிர்மறையாக கருதி குறை கூறினால், நாம் என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:புன்னகை செய்யுங்கள். மற்றவர்கள் குறைகூறுவது பற்றி  கவலை படாதீர்கள்.  நீங்கள் அமைதியாகவும்  இருக்ககூடாது,தகுந்த  அறிவை புகட்டி,மற்றபடி புறக்கணித்து விடுங்கள்.

கே: குருஜி, இரண்டாம் பாகம் பயிற்சி தலையிலிருந்து இதயத்திற்கான பயணம். ஆனமீகத்தில் தர்கத்திற்க்கான இடம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தர்க்கத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. தர்க்கத்தின் மூலமாகத் தான் ஆனமீகதிற்க்குள் நுழைய முடியும். வாழ்க்கை என்றால் என்ன, உலகம் என்றால் என்ன, நீங்கள்  
எப்படி நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று தர்க்கம் தான் உங்களை பார்க்க வைக்கிறது. இவை எல்லாம் தர்க்கத்தின் மூலமாக வருகிறது. மற்றும் தர்க்க மனம் சொல்கிறது "இல்லை என்னுடைய நேரத்தை வீணடிக்க கூடாது. வாழ்க்கை குறுகியது, எல்லாமே குறுகிய காலம் தான். கடந்த காலத்தை பற்றி வருந்துவதிலோ எதிர்காலத்தை பற்றி புலம்புவதிலோ எந்த அர்த்தமும் இல்லை, இது தான் தர்க்கம். ஆகையால், தர்க்கம் ஆன்மீகத்திற்கான ஒரு படியை தருகிறது, ஆகையால் தர்க்கம் முக்கியமானது. ஆனால் இது ஒரு படி மட்டுமே, உங்களால் படியின் மீது தூங்க முடியாது. வீட்டிற்குள் நுழைய வேண்டும்.  ஆகையால் இது வீட்டிற்க்குள் நுழைய முதல் படி.

கே: குருஜிபழக்கங்களிருந்து  விடுபடுவதற்கு சபதம் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள், சபதம் என்றால் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களிடம் ஏதேனும் கெட்ட  பழக்கம் இருந்தால், நீங்கள் சபதம் எடுக்க முடியும். நீங்கள் எதிர்மறையாக பேசி பழக்க பட்டிருந்தால்,பிறகு இன்று நான் எதிர்மறையாக பேச மாட்டேன், யாரை பற்றியும் குறை கூற மாட்டேன்" என்று நீங்கள் முடிவெடுக்கவேண்டும்  ஆகையால் அவ்வாறான  நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரிய மாற்றத்தை உருவாக்கும். நீங்கள் அதிகமாக சாப்பிடுபவராக இருந்தால்  நீங்கள் ஒரு முடிவு  எடுக்கிறீர்கள், சரி ஒரு வாரத்திற்கு நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். நான் சிறிது தான் சாப்பிட போகிறேன் என்று.. இது தான் சபதம்.

கே: நான் செய்ய வேண்டும் என்பதிலிருந்து நான் செய்து தான் ஆகவேண்டும் என சூழ்நிலை மாறும்போது, செயல் படுவது மிகுந்த சிரமமாக உள்ளது. அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்வது? நான் சேவை செய்யும் போது அவ்வாறு நிகழ்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பொறுப்பேற்பு. அவசியம். செயலுறிதி இல்லாமல் வாழ்க்கையில் உறுதிப்பாடு,  மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் எதுவும் இல்லை. ஆகையால் நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டால் அதை பூர்த்தி செய்ய வேண்டும்.